புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 21, 2015

36 வயதினிலே - புறம்போக்கு.


36 வயதினிலே!

இதன் மூலமான மலையாளத்திலையே பார்த்துவிடலாமா என்று தான் முதலில் யோசித்தேன், பின்பு அதனை வேண்டாம் என்று சொல்லியது ஜோதிகாவின் பளிச் போஸ்டர்கள்! இந்த மாதிரி படத்தில் நடித்த ஜோதிகாவிற்கும், அதற்கு பக்கபலமாய் இருந்த சூரியாவிற்கும் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும்!



ஆகா, ஓகோவென்று புகழக் கூடிய வகையறா படமில்லை. பல இடங்களில் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கிற உணர்வைத் தருகிறது. இருந்தும் இதில் சொல்லிக்கொள்ள நிறைய இருக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து தான் வரும்காலங்களில் தமிழ் சினிமாவில் இம்மாதிரியான முயற்சிகள் அதிகம் எடுக்க கூடும் என்று நம்பலாம்! 

ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமான வரவேற்பு இருந்தாலும், தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்றிருப்பதாக தெரிகிறது. சினிமாவுக்கென புகுத்திய சின்ன சின்ன கிச்சு கிச்சுக்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல முயற்சி என்றே சொல்லலாம்! ஜோதிகாவின் ஒரே பிரச்சினை கூடுதலான நடிப்பு, ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கிறார் என்பது தெரிகிறது. பக்கத்து வீட்டுப் பெண் போன்று தெரிய வேண்டிய ஜோதிகாவை, அன்னியப் படுத்தி காட்டுகிறது கூடுதல் மேக்கப்பும், பளிச்சென்று கண்ணை பறிக்கும் சேலைகளும், இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நெஞ்சில் பதியும் வசனமும், காதை கிழிக்காத இசையும், கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்க்கின்றன. நேர்த்திக்கு சற்றுதொலைவில் இருக்கும் இந்த 36 வயதினிலே உங்களை நிச்சயம் திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன், தவறவிடாமல் பாருங்கள்.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை: 

நான்கு நிமிட பாடலுக்கு கோடிகளில் அரங்கமைத்து காசை வீணாக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில், இப்படியொரு சிறைச்சாலையை அமைத்து அதிலையே முக்கால் வாசிக்கும் மேலான படத்தை எடுத்திருக்கும் ஜெகன்னாதன் அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள். 

மூன்று நாயகர்களை ஒன்றிணைத்து படமெடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை என்றாலும் அதை முயன்றிருக்கும் இயக்குனருக்கும், ஒத்துழைத்த நடிகர்களுக்கும் வணக்கங்கள் சொல்ல வேண்டும்! 



படத்தைப் பற்றி ஆளுக்கொரு கருத்துக்கள் உலவினாலும், என்னளவில் இது திருப்திகரமான சினிமா தான். தான் என்ன சொல்லவேண்டும் என்று மனதில் நினைத்தாரோ அதை கொஞ்சம் சமரசத்தோடு சொல்லி இருக்கிறார், அந்தளவில் ஜெகன்னாதனுக்கும் வெற்றி என்று தான் நம்புகிறேன்! 

நிச்சயமாய் இது எல்லோருக்குமான சினிமா கிடையாது, பரந்து பட்ட அரசியல் அறிவும், பொதுவுடைமை சிந்தனைகளும், கம்யூனிஸ சித்தாந்தங்களும் ஓரளவேனும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!

இதற்கு மேலும் நுணுக்கமான வசனங்களை வைத்திருந்தாலோ, அல்லது கதையை விலாவாரியாக சொல்கிறேன் என்று முயன்றிருந்தாலோ, சென்ஸார் போர்டின் கத்திரி பல இடங்களில் விளையாண்டிருக்கும். இதை தெரிந்து தான் அடக்கி வாசித்திருக்கிறார் என்று நம்புகிறேன். .

ஆர்யா ஏற்றிருக்கும் பாலு பாத்திரத்தை இன்னும் அழுத்தமாய் பிண்ணியிருந்தால் அவரின் திரை முடிவு பார்வையாளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும், ஆனால் அப்படி அவர் சார்ந்த இயக்கங்களின் கொள்கைகளை வைத்திருக்க முற்பட்டிருந்தால் படம் வெளி வரக்கூடிய சூழல் இந்தியாவில் இல்லை, இந்தியா உரிமைகள் மிகுந்த நாடு தான் ஆனால் அந்த உரிமைக்கும் ஒரு வரையறை கொண்டுதான் இயங்கவேண்டிய சூழலில் இருக்கிறோம், இல்லையென்றால் வரக்கூடிய விளைவுகள் மிக மோசமானவையாக இருக்குமென்பதால் இப்போதைக்கு அதை தள்ளி வைத்து விடுவோம்!

மெக்காலே என்கிற போலீஸ் அதிகாரியாக ஷாம், கவனம் ஈர்க்கும் நடிப்பு, கச்சிதமான தேர்வு. உடல்மொழி நேர்த்தியாக இருக்கிறது. அடுத்து எமலிங்கம் விஜய்சேதுபதி, முன்னர் பார்த்த படங்களில் தெரிந்த அதே பாவனைகள் தான். திருடன் போலீஸ் பாத்துட்டு சொல்லணும் நெனச்சேன், இயக்குனரே சொன்னாலும் குத்து பாட்டில் மட்டும் ஆடாதீங்க பாஸ், சத்தியமா சகிக்கல, வராத ஒன்னை ஏன் புடிச்சி வம்படியா தொங்குறீங்க. 

இம்மாதிரியான கதைகளில் நடிக்க ஒப்புக்கொண்ட கார்த்திகாவுக்கு ஒரு ஓ! 
பரவாயில்லை ரகம்தான், வண்டி ஓட்டுகையில் மட்டும் கிச் கிச்! பாத்திரத்தை வெயிட்டா காட்ட இப்படில்லாம் பண்ண வேண்டியிருக்கிறது! 

ஆங்காங்கே பிரமிப்பை கொடுக்கிறது பின்னணி இசை, ஒளிப்பதிவு அட்டகாசம், ஹெலிகாப்டர் இறங்குவது ஏறுவது சூப்பர் ...

நால்வருக்கும் திரையை சமமாக பங்கிட்டு கொடுத்த இயக்குனர் ஜனநாதன் சாமர்த்தியசாலி தான்! விரும்பி பார்க்கும் சினிமா பிரியர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்!     
  


Post Comment

3 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்லதொரு விமர்சனம்

தமிழ்மணம் 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூர்யாவும் சாமர்த்தியசாலி தான்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

36 வயதினிலே அடுத்த வாரம் பார்க்கப் போகிறேன். புறம்போக்கு படத்தையும் பார்க்கத் தூண்டும் பதிவு.