புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 08, 2015

சண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்நையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்குனர் பாலாவின் தயாரிப்பு என்றதும் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு எகிறியதும் உண்மை தான். பெரிய சறுக்கல் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய திறமை சற்குணத்திடம் இருப்பதாக நம்பிய என்னை, அப்படில்லாம் நம்ப படாது என்று மீண்டுமொரு மகா குப்பை படத்தை கொடுத்திருக்கிறார். தோல்வி படம் கொடுக்கலாம் தப்பில்லை, ஆனால் இப்படியொரு தோல்வி படத்தை கொடுக்க கூடாது திரு. சற்குணம் அவர்களே!  
கச்சிதமாக திரைக்கதை உங்களுக்கு செய்ய தெரியும் என்று நம்பிக் கொண்டிருந்த எங்கள் எண்ணத்தில் பெருத்த அடியை கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறீர். எந்த இடத்திலும் படத்தோடு இணைந்து கொள்ள முடியாமல் தவித்த தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும். மூன்றாம் தர இயக்குனர்களின் படங்கள் கூட கச்சிதமான கட்டுக்குள் இருக்கிறது உங்களது படம் எவ்வித இலக்குமின்றி எங்கோ துவங்கி எங்கோ முடிகிறது. ஒரு காட்சி கூட மனதில் அழுத்தமாய் பதிய மறுத்து தனித்தே நிற்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் அனைத்தும் மொக்கை தான். 

இத்துப் போன பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பாதியை, படத்தின் மைய கருவான ரெண்டு ஊரின் குளத்து பிரச்சினைக்கு கொடுத்திருந்தால் கூட படம் ஓரளவு அதன் பாதையில் பயணித்திருக்கும். எப்ப பார்த்தாலும் மோடு முட்டிக சண்டை போட்டுக் கொண்டு திரியும் ஊர்க்கார பயலுகள, நம்மாளு நாயகன் கடைசியில நாலே நாலு வசனம் பேசியதும், ஊரானுங்க கர்நாடாக காவேரித்தண்ணி மேட்டர பேசுற அளவுக்கு புத்திசாலியா ஆக்கின உங்க நரித்தந்திரத்தைக் கண்டு வியக்குறேன் ஜி!

அப்புறம் காதலிகிறாளா இல்லையா என தெரியாமலையே ஆப்பிள் போனை வாங்கி கொடுத்துவிட்டு, ஹீரோ பழைய சைக்கிளில் ஊரை வலம் வருவது கண் கொள்ளா காட்சி! கம்பீரமா திரிஞ்ச மில்லுக்காரனை கடைசியில் இப்படி காட்டுவீங்கன்னு யாருமே நினைச்சி கூட பாக்காத டிவிஸ்ட். அதுக்கு அப்புறமும் கொடுத்தீங்க பாருங்க அஞ்சாறு கிளைமேக்ஸ் சாமீ இதுதான் படைப்பின் உச்சம். 

தேர்ட் அம்பையர், ஒரு கையில்லாத மனிதர் கடைசியாக தண்ணீர் அள்ளி பருகுவது, பொங்கல் கொண்டாட்டம் இப்படி சின்ன சின்ன சுவாரிசயம் தவிர்த்து படம் சின்ன கிச்சு கிச்சை கூட மூட்டவில்லை.

சொந்த ஊரில் படம் எடுத்துவிட்டு, ஊர்க்காரர்களை பயன்படுத்தாம போனா சாமீ குத்தம் வந்துடும்ன்னு, பல ஆட்கள் சினிமாவுக்கே பழகாத முகத்தை பயன் படுத்தியது சிறப்பு, அதைவிட சிறப்பு அவர்கள் டையலாக் பேசுகையில் முகத்தை காட்டாமல் போனது.   

இந்த மாதிரி சவ சவ என்று நகர்ந்து கதைகளை தூக்கி பிடிப்பது பாடல்கள், அதையும் எந்த இடத்தில் பாடலை வைக்க வேண்டுமென்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் பாடல் வைத்த உணர்வை தந்தது எனக்கு மட்டுந்தானா என்று தெரியவில்லை. இட்லிக் கொத்து மாதிரி இம்புட்டு பொத்தலா சினிமா எடுத்ததுக்கு எதுக்குன்னே இத்தன உதவி இயக்குனர்கள் இந்த படத்துல வேலை செஞ்சாங்க? அவசரத்துல எடுத்த படம் மாதிரி தெரியல, தல கணத்துல எடுத்த மாதிரி இருந்தது.

கடேசியா ஒரே ஒரு கேள்வி, எதுக்கு பாஸ், சண்டி வீரன்னு தலைப்பு வைச்சிங்க அதை மட்டுமாவது நியாயப் படுத்துங்க உங்களுக்கு புண்ணியமா போவும்? 

  

Post Comment

5 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…

நொண்டி வீரன் அப்படினு பெயர் வச்சிருக்கலாமோ... ?

மலரின் நினைவுகள் சொன்னது…

களவானியையும் வா.சூ.வா.யையும் நம்பி மொத நாள் அம்மணியோட நய்யாண்டி போக, நம்ம பொழப்பு நாய் பொழப்பாச்சு.
நல்லவேளை சண்டிக்கு வார்னிங் குடுத்துட்டீங்க..., புண்ணியமாப் போவும்...!!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி! ஆனாலும் நான் படத்த்துக்கு போயிட்டாலும்....!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அப்ப ஊத்திக்கிச்சா...

கார்த்திக் சரவணன் சொன்னது…

நல்ல தரமான படம் இயக்கிய ஒரு இயக்குனரிடம் நாம் அடுத்த முறை எதிர்பார்ப்பது தான். அதை அவரே உணர்ந்து பூர்த்தி செய்திருக்க வேண்டும். அடுத்த படத்தில் எழுந்து விடுவார் என்று நம்புவோம்...