புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 03, 2015

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 11/10/2015, புதுக்கோட்டை


சென்னை மற்றும் மதுரையின் தொடர்ச்சியாக இந்த வருடம் புதுக்கோட்டையில் நிகழ இருக்கிறது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு. தொடர்ச்சியாக நான்காம் ஆண்டு சந்திப்பு நிகழ இருப்பது பெரும் மன மகிழ்வைத் தருகிறது. இம்முறை புதுக்கோட்டை நண்பர்கள் அதற்கான முயற்சியை முன்னெடுத்து மிகச் சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள், மேலும் விழாக் குழுவினர் பெரும்பாலானோர்  ஆசியர்கள் என்பதினால் கூடுதல் ஒழுங்கு இருக்குமென்று பெரிதும் நம்புகிறேன், அவர்களின் கலந்தாய்வு கூட்டங்களை நிகழ்த்திய விதம் அதற்கான சான்றாக இருக்கிறது. விழாக்குழுவினர் அனைவருக்கும் முன் கூட்டிய எனது வாழ்த்துகள் தோழமைகளே!முந்தைய சந்திப்புக்களில் இல்லாத அளவிற்கு சில புதுமையான திட்டங்கள் வகுத்து செயல் படுத்தவும் காத்திருக்கிறார்கள் அதற்காகவே கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது. எழுத்துக்கும், கலைக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதை பெரிதும் நம்புகிறவன் நான், அவ்வாறே விழா அரங்கினை கவிதைகளாலும், அதற்கு தகுந்த ஓவியங்களாலும் நிரம்பச் செய்ய இருக்கிறோம் என்று சென்னை சந்திப்பில் திரு. முத்துநிலவன் அவர்கள் சொன்னதிலிருந்து, அவ்வப்போது மனம் அந்த அரங்கத்தையே சுற்றி வருகிறது. 

பிரத்யோகமாக ஒரு வலைத்தளம் துவங்கி அதில் எல்லாத் தகவல்களையும் ஒருங்கிணைத்து அளிப்பதினால் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. வரும் காலங்களில் சந்திப்புக்களை நிகழ்த்தப் போகும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.உடலுழைப்பையும் தாண்டி, கணிசமான பண பங்களிப்பையும் அளித்து விழாவை நிகழ்த்த இருக்கும் நண்பர்களுக்கு முடிந்தவரை, நம்மளால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். வங்கி கணக்கிலோ அல்லது விழா நிகழ்வன்றோ கூட கொடுக்கலாம் என்று நம்புகிறேன்.மேலும் உடனுக்குடன் உங்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ள, பிரத்யோக வலைப்பக்கமான தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 2015 தளத்தை பாருங்கள், மற்றும் தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றுவது மட்டுமில்லாமல், நேர்த்தியாக ஒருங்கிணைத்து அளிக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்திலும் http://dindiguldhanabalan.blogspot.com/ பதிவர் சந்திப்பு - 2015 பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்!


இதுவரை இல்லாத அளவிற்கு சில புதுமைகளை நிகழ்த்த இருக்கும் நண்பர்களுக்கு ஆதரவளித்து, வரும் 11/10/2015 அன்று புதுக்கோட்டையில் சந்தித்து மன மகிழ்வோம் நண்பர்களே, வாருங்கள் அனைவரும்!


Post Comment

6 கருத்துரைகள்..:

'பரிவை' சே.குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சிறப்பான முன்னேற்பாடுகள் அறிவிப்புகள் ஆவலை தூண்டி உள்ளன. விழாவில் சந்திப்போம்

r.v.saravanan சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

புதுகை காரர்கள் ஒரு கை பார்க்கிறார்கள்! விழா சிறக்கட்டும்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் அரசன்! நிறைய புதிய விஷயங்கள். சென்ற முறை நாங்கள் புதிது என்பதால் நாங்கள் விழா பற்றி எதுவும் தெரியாமல் பதிவு கூட எழுதி ப்ரொமோ பண்ண முடியலை...இப்போது அப்படி இல்லை நிறைய நட்புகள். எனவே ஏதோ முடிந்த அளவில் பங்கு கொள்ள முடிகின்றது. இனி வரும் பதிவர் சந்திப்பிற்கு இது நிச்சயமாக ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை..இப்போ புதுசா ஒரு போட்டி பாத்திங்களா...விமர்சன போட்டி...

விழாவில் சந்திப்போம் அரசன்!

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!