மழையில் நனைந்து வந்திருந்தேன்
உன்னைக்காண ஒரு நாள்..
உன் தாவணி முகப்பினால் என்
ஈரத்தலையை திட்டிக்கொண்டே தான்
துவட்டி விட்டாய்..
இருந்தும்,
பாழாய் போன என் மனம்,
மழை நின்ற பிறகும் ஏங்குகிறது..
மீண்டும் எப்போ மழை வரும் என்று..
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு
Tweet |
13 கருத்துரைகள்..:
படித்தேன்..... பாராட்டுக்கள்.கவிதை மிக இயல்பாய் வந்திருக்கிறது. (எழுதி ஒட்ட வகை குறைந்த.... வாடகை கணினி... எனவே சுருக்கமாக)
கவிதை மிக அழகு......
கவிதைக்கும் உங்க முகவரிக்கும் தனித்தனி நிறம் கொடுக்கவும்.
கலக்கலான கவிதை வாழ்த்துக்கள்.... மீண்டும் மழை வர!
படைப்புக்கும் உங்க முகவரிக்கும்... எழுத்துருவில் வேறுபாடு தெரிந்தால் படைப்பு இன்னும்... மின்னும்.
நன்றிங்க மாமா...
இனி எழுத்துருவில் மாற்றம் செய்து கொள்கிறேன்..
நிறங்களையும் மாற்றி கொள்கிறேன்...
நன்றிங்க மாமா.. மிக்க நன்றி...
படித்தேன்..... பாராட்டுக்கள்.கவிதை மிக இயல்பாய் வந்திருக்கிறது. (எழுதி ஒட்ட வகை குறைந்த.... வாடகை கணினி... எனவே சுருக்கமாக)
// நன்றிங்க மாமா.. உங்களின் வாழ்த்துக்கள் என்னை இன்னும் சிறப்பாக எழுத தூண்டும் ஒரு உந்துகோலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
மிக்க நன்றிங்க மாமா//
அன்பன் அரசு,
இடைவிடாத ஏக்கம் தான் இன்னும் இன்பங்களைத் தூண்டும்.
அழகியல் கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்...! உங்கள் கவிதைகள் விருந்தாகட்டும் எங்கள் கண்களுக்கு!
மிக்க நன்றிங்க சத்ரியன் சார்..
உங்களின் வாழ்த்தும்,. ஆதரவும் இருந்தால் போதும்..
அது..அது... இதுக்காகவே மறுபடியும் வரவேண்டாமோ இந்த மழை.. எல்லோரது மனசும் இதுக்கு ஏங்கவே செய்யும்.. நல்ல கவிதைங்க அரசன்.
தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும்..
மிக்க நன்றிங்க பாலாசி...
நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்.
//கனாக்காதலன் சொன்னது…
நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்//
நன்றிங்க கனாக்காதலன் ..வருகைக்கும் வாழ்த்துக்கும்
கணவனுக்கு இது வரை தலை துவட்டி விட்டதில்லையே
என்ற ஏக்கத்தை யல்லவா உற்பத்தி செய்து விட்டது உங்கள் கவிதை
//Meena சொன்னது…
கணவனுக்கு இது வரை தலை துவட்டி விட்டதில்லையே
என்ற ஏக்கத்தை யல்லவா உற்பத்தி செய்து விட்டது உங்கள் கவிதை//
நன்றி மிக்க நன்றி ....
கணவன்கள் இதற்க்கு ஏங்குவார்கள்...
விரைவில் அவரின் ஆசையை பூர்த்தி செய்யுங்கள் மேடம்....
கருத்துரையிடுக