புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 03, 2011

நொடி மரணம்...


















பள்ளி செல்லும் உமக்கு
பகட்டு வீரமெதற்கு?-பறிகொடுத்த 
உள்ளங்களின் தவிப்பு புரியலையா?


அலுவலகம் செல்லும் அறிவீனமே?!
வீண் சாகசமெதற்கு? அன்புள்ளம்
கூறியது செவிக்குள் சேரலையோ?


நிறுத்தத்தில் ஏற மறுக்கும்
உனது கால்கள் - நகரும்
பேருந்தில் தொற்றுவது நாகரீகமா?


நடத்துனர் நட்பாய் கூறுவதை
நகைத்து மறுப்பாய்!- மறுகணமே
மரமொன்றில் உரசி வீழ்வாய்...


எதிர்பாலின கவர்ச்சி -ஏலமிடும் 
உனது வசந்தத்தை!-உன்னை 
நிறுத்தும் படி நுனியில்!


நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும் 
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே 
சாகவும் துடிப்பாய்!

கைப்பேசி வைத்து கலகம்
செய்வாய்! இமைக்கும்  பொழுதில் 
 காலன் வருவதை கவனிக்காமல்!


எத்தனை முறை சொன்னாலும் 
எதிர்த்து பேசுவாய்! எல்லாம் 
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!


பிடி நழுவி வழி தவறிய  
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...


Post Comment

59 கருத்துரைகள்..:

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே :)

மாணவன் சொன்னது…

எதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி....

மாணவன் சொன்னது…

இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கவிதையை படைத்து பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கண்ணே

மாணவன் சொன்னது…

//பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...//

கடைசியில் முடித்தது நச் வரிகள்

அன்புடன் நான் சொன்னது…

கருத்தாழமிக்க கவிதை.... பாராட்டுக்கள்.

மாணவன் சொன்னது…

//நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//

இந்த வரிகளை படிக்கும்போது நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு”

Learn சொன்னது…

//நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//

சமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

r.v.saravanan சொன்னது…

present raja

r.v.saravanan சொன்னது…

நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்

நச் வரிகள்

r.v.saravanan சொன்னது…

பாராட்டுக்கள் raja

r.v.saravanan சொன்னது…

விழிப்புணர்வு கவிதை நன்றி

3 மார்ச், 2011 3:48 pm

thendralsaravanan சொன்னது…

தம்பி என்ன ஒரு ஒற்றுமை!
இரண்டு நாட்களாக இந்த சிந்தனை என்னை வாட்டி எடுத்தது!
இளையவர்களின் இந்த செயலை கண்டித்து எழுத எண்ணிக்கொண்டிருந்தேன்.
தினமும் பேருந்துப்பயணம் பய பயணமாக சென்று கொண்டிருக்கிறது!

thendralsaravanan சொன்னது…

அருமையாய் எழுதியுள்ளீர்கள்!

குறையொன்றுமில்லை. சொன்னது…

பேரூந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் இந்தப்பதிவை படித்தால் கொஞ்சமாவது யோசிப்பார்கள். நாம் செய்வது சர்தானா என்று.

Chitra சொன்னது…

பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...


....உண்மை. உயிரின் மதிப்பு தெரியாத வகையில், நடைமுறையில் இப்படி நடக்கிறதே. :-(

அன்பரசன் சொன்னது…

நச் வரிகள் தல..

ஹேமா சொன்னது…

சமூக அக்கறையோடு நல்லதொரு கவிதை.அந்த வயதின் துடிப்பு அடுத்து வரும் நிகழ்வுகளை நினைக்காமலே பறந்துகொண்டிருப்பார்கள் !

வைகை சொன்னது…

சமூக அக்கறையான கவிதை!

வைகை சொன்னது…

ஆனால் இந்த வயது அவர்களை அப்படித்தான் செய்ய வைக்கும்..
அவர்களாக உணரும் வரை!

Unknown சொன்னது…

//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!//

உண்மையான வரிகள்

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃநிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...ஃஃஃஃ

அருமையாக உணர்ந்து வடித்திருக்கிறீர்கள் அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

சிவகுமாரன் சொன்னது…

அருமையான விழிப்புணர்வு ஊட்டும் கவிதை. இப்படி சிலர் கேட்பதுண்டு
" வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா "
அப்படியும் திருந்துவதில்லை பலர்

போளூர் தயாநிதி சொன்னது…

பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
உணர்ந்து வடித்திருக்கிறீர்கள் அருமை...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

படியில் பயணம் நொடியில் மரணம்ன்னு பேருந்துகளில் எழுதியே வைத்திருப்பார்கள். அப்படியிருந்தும் பய புள்ளைக கேட்டால்தானே...

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான கருத்துக்கள். பாராட்டுக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

நல்ல சிந்தனை கலந்த வரிகள்....


வாழ்த்துகள் அரசன்...

Revathyrkrishnan சொன்னது…

அருமைங்க

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
வணக்கம் அண்ணே :)//

அண்ணே வணக்கம்

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
எதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி....//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கவிதையை படைத்து பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கண்ணே
3 மார்ச், 2011 3:48 pm
மாணவன் சொன்னது…
//பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...//

கடைசியில் முடித்தது நச் வரிகள்//

மிக்க நன்றிங்க அண்ணே ...
சில நேரங்களில் இந்த
பசங்க பண்ணும் அட்டகாசம் தாங்க முடியல அண்ணே
அதன் ,,, விளைவு தான் இந்த கிறுக்கல்

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
கருத்தாழமிக்க கவிதை.... பாராட்டுக்கள்.//

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மாமா

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
//நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//

இந்த வரிகளை படிக்கும்போது நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு”//

மிக சரியா சொன்னிங்க

arasan சொன்னது…

தமிழ்தோட்டம் சொன்னது…
//நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//

சமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//

வாழ்த்துக்கு அன்பு நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
present raja//

thank u so much sir

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்

நச் வரிகள்//

நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
பாராட்டுக்கள் raja//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
விழிப்புணர்வு கவிதை நன்றி//

அன்புக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
தம்பி என்ன ஒரு ஒற்றுமை!
இரண்டு நாட்களாக இந்த சிந்தனை என்னை வாட்டி எடுத்தது!
இளையவர்களின் இந்த செயலை கண்டித்து எழுத எண்ணிக்கொண்டிருந்தேன்.
தினமும் பேருந்துப்பயணம் பய பயணமாக சென்று கொண்டிருக்கிறது!//

அப்படியா அக்கா...
நல்லது நீங்களும் எழுதுங்க ...
பசங்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்கிறது அக்கா ...

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
அருமையாய் எழுதியுள்ளீர்கள்!//


அன்புக்கு நன்றிங்க அக்கா ...

arasan சொன்னது…

Lakshmi சொன்னது…
பேரூந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் இந்தப்பதிவை படித்தால் கொஞ்சமாவது யோசிப்பார்கள். நாம் செய்வது சர்தானா என்று//

அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

Chitra சொன்னது…
பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...


....உண்மை. உயிரின் மதிப்பு தெரியாத வகையில், நடைமுறையில் இப்படி நடக்கிறதே. :-(//

ஆம் மேடம் ,....
உயிரின் விலை அறியா சில மூடர்கள் இப்படி
பண்ணுகிறார்கள் ...
அதை சிலர் கடைபிடிக்க ஆரம்பிக்கவும்
விட்டார்கள்

arasan சொன்னது…

அன்பரசன் சொன்னது…
நச் வரிகள் தல..//

மிக்க நன்றி தல

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
சமூக அக்கறையோடு நல்லதொரு கவிதை.அந்த வயதின் துடிப்பு அடுத்து வரும் நிகழ்வுகளை நினைக்காமலே பறந்துகொண்டிருப்பார்கள் !//

உண்மை தான் மேடம் ,...
அனால் அவர்களின் எதிர்காலம் இருட்டடிக்க
படுகிறது ...

arasan சொன்னது…

வைகை சொன்னது…
சமூக அக்கறையான கவிதை!//

வணக்கம் அண்ணே ...
மிக்க நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

வைகை சொன்னது…
ஆனால் இந்த வயது அவர்களை அப்படித்தான் செய்ய வைக்கும்..
அவர்களாக உணரும் வரை!//

மிகச்சரியா சொன்னிங்க ...
அவங்களா திருந்தினாதான் உண்டு

arasan சொன்னது…

வைகறை சொன்னது…
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!//

உண்மையான வரிகள்//

அன்பு வாழ்த்திற்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ சொன்னது…
ஃஃஃநிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...ஃஃஃஃ

அருமையாக உணர்ந்து வடித்திருக்கிறீர்கள் அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//

மிக்க நன்றிங்க சகோதரம்

arasan சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
அருமையான விழிப்புணர்வு ஊட்டும் கவிதை. இப்படி சிலர் கேட்பதுண்டு
" வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா "
அப்படியும் திருந்துவதில்லை பலர்//

அன்புக்கு நன்றிங்க நண்பா ,....
நீங்கள் சொல்வதும் நிதம் நடக்கும்
ஒரு நிகழ்வு தான் ,..
அதவும் இங்கு சென்னையில்
நிறைய முறை காதில் விழும் இந்த வார்த்தை

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
உணர்ந்து வடித்திருக்கிறீர்கள் அருமை...//

நிறைவான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
தோழமையே

arasan சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது…
படியில் பயணம் நொடியில் மரணம்ன்னு பேருந்துகளில் எழுதியே வைத்திருப்பார்கள். அப்படியிருந்தும் பய புள்ளைக கேட்டால்தானே...
//


அதை எங்கு படிக்கிறது ..
அவர்களுக்கு தொங்குவதர்க்கே நேரம் போதாது ...

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
அருமையான கருத்துக்கள். பாராட்டுக்கள்.//

வளமான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
நல்ல சிந்தனை கலந்த வரிகள்....


வாழ்த்துகள் அரசன்..//

அண்ணே வணக்கம் ,...
அன்பு கலந்த வாழ்த்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

reena சொன்னது…
அருமைங்க//

முதல் வருகைக்கும்
வாழ்துக்கும் மிக்க நன்றிங்க

தூயவனின் அடிமை சொன்னது…

நல்ல சாட்டை அடி, திருந்துவார்களா இவர்கள்?

சக்தி கல்வி மையம் சொன்னது…

டீன்ஏஜ் சார்...

arasan சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
நல்ல சாட்டை அடி, திருந்துவார்களா இவர்கள்?//

anbukku nandringa nanbare ..
thiruntha muyalattum

arasan சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…
டீன்ஏஜ் சார்...//

adhaan avanga pandra thappu avangalukke theriya mattenguthu sir...

TamilTechToday சொன்னது…

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

ரிஷபன் சொன்னது…

சாகசங்களைக் காட்ட வேண்டியது எதில் என்று புரிபடாத வயசு!