படம் : எங்கேயும் எப்போதும்
பாடல் : உன் பெயரே தெரியாது ...
இசை : திரு . சத்யா
வரிகள் : திரு . நா. முத்துக்குமார்
இந்த பாடல் என்னை கொஞ்சம் அதிகம் கவர்ந்த பாடல் என்றே கூறுவேன். அடிக்கடி கேட்டும் சலிக்காத சமீபத்திய பாடல்களில் கட்டாயம் இதுவும் ஒன்று. ஆரம்பிக்கும் முதல் வரி முதல் முடியும் வரை ஒரு நெருக்கத்தை கூட்டும் வரிகளை இணைத்து பாடலுக்கு இனிமை சேர்த்திருப்பார் எளிமை கவிஞர். நா. முத்துக்குமார்.
ஆரம்பமே
"உன் பெயரே தெரியாது.. உனை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்"..
மிக எளிமையான வரிகளை வைத்து, பெயர் அறிந்திடாத ஒருத்தனை எண்ணி பெண் பாடுவதாய் அமைந்திருக்கும் இந்த பாடலை இனிமை குறையாமல் அதன் வடிவம் மாறாமல்
எதிர்பார்ப்பும் குறையாமல் நம்மை பாடலின் ஊடே பயணிக்க வைத்திருப்பார் எளிமை கவிஞர்.
"பெரிதான பேரும் அதுதான்.. சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..சட்டென்று முடிந்ததே போகும்,
எப்படி சொல்வேன் நானும், மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?"
பெண்ணின் மனதை அப்படியே படம் படம்பிடித்து நம்மிடம் சுவையாய் வழங்கி கிறக்கத்தை உண்டு பண்ணிருப்பார் கவிஞர்... உதவி செய்த ஒருவனின் பெயரை கூட அறிந்து கொள்ளாமல் அவனை விட்டு பிரிந்த பின் பெண் உணரும் அந்த அவஸ்தையை, தவிப்பை மிக இயல்பாய்
நறுக்கென்று வழங்கி உள்ளார் இந்த நளின கவிஞர்...
அடுத்து இந்த படத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். படத்தில் இதே போல் நல்ல பாடல்களும் உண்டு. என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல் தான். முதல் படம் மாதிரி அல்லாமல் இயக்குனர் திரு. சரவணன் ரொம்ப திறம்பட படத்தை முடித்து அதே நேரத்தில் விபத்தின் விளைவுகளை அவ்வளவு துல்லியமாய் மக்களுக்கு அழுத்தமாய் உணர்த்திய விதம் மிகச்சிறப்பு.
இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் அற்புதமாய் தங்களது பாத்திரம் அறிந்து வாழ்ந்திருப்பார்கள். அஞ்சலி இந்த படத்தில் சற்று வித்தியாசமான பாத்திரத்தில் கச்சிதமாய்
பொருந்தி இருந்தார் . அனன்யா சொல்லவே வேண்டாம் அஞ்சலிக்கு போட்டியாக நடித்திருந்தார்
அதுவும் ஒரு புதுப் பெண் மாநகரங்களில் பயப்படும் நிலையை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தி மனதுக்குள் நுழைந்து விடுகிறார். அப்புறம் ஜெய் மற்றும் சர்வா இருவரும் நடிப்பில் தூள் பண்ணி இருப்பார்கள்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. வேல்ராஜ் அவர்களை பற்றி கூறியாகவேண்டும். நல்ல திறமையான ஒளிப்பதிவு. பேருந்து செல்லும் காட்சிகள் மற்றும் சென்னை , திருச்சி போன்ற இடங்களில் எடுத்த காட்சி அமைப்புகளை கண்டு வியந்து போனேன் ..மிரண்டும் போனேன்.
தனது கானக்குரலால் இனிமை கூட்டி வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் மதுஸ்ரீ அவர்களுக்கும், புதுமுகம் என்றாலும் பாடல்களும் சரி, பின்னணி இசையை சேர்த்திருக்கும் கவனத்திலும் மனதை கொள்ளை அடித்து செல்லும் திரு, சத்யா ..அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!
(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)
Tweet |
29 கருத்துரைகள்..:
அருமையான பாடல்
பகிர்வுக்கு நன்றி
சூப்பர் பாட்டுய்யா அசத்தலா இருக்கு...!!!
நல்ல பாடலை ரசணையோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
அருமையான பாடல்
மற்றும் படமாக்கப்பட்ட விதமும் அருமை...
ayyo ayyo
ரசனையெல்லாம் கொஞ்சம் நெருக்கமா இருக்கு போலயே. என்ன சமாச்சாரம் ராசா.?
அருமையான பாடல் தேர்வு.
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த படம் அருமையான பாடல் .பகிர்வுக்கு நன்றி
சுகமான ரசனையுடன் கூடிய பாடல் பகிர்வுக்கு நன்றி
//என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..?"//இதை விட காதலை எப்படி சொல்ல முடியும் அருமையான பாடல்
இறுதிவரை பெயர் சொல்லாத பாடல் .. அருமை
அன்புடன்
ராஜா
நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் நண்பரே .
சமீபத்தில் நான் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
பகிர்வுக்கு நன்றி
tamil manam 4th vote
இப்போ வந்த புதுப்பாடல்களில் எனக்கும் பிடித்த பாடல் !
நல்ல பாடல்...!
நீங்கள் ரசித்த பாடலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தல...!
அருமையான பாடல்... காட்சிக்கு தகுந்தாற்போல் மிக சரியாக அமைந்த பாடல்
மதுரன் கூறியது...
அருமையான பாடல்
பகிர்வுக்கு நன்றி//
மிக்க நன்றிங்க நண்பரே
MANO நாஞ்சில் மனோ கூறியது...
சூப்பர் பாட்டுய்யா அசத்தலா இருக்கு...!!!//
நன்றிங்க அண்ணே
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நல்ல பாடலை ரசணையோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..//
மிக்க நன்றிங்க கவிஞரே
மகேந்திரன் கூறியது...
அருமையான பாடல்
மற்றும் படமாக்கப்பட்ட விதமும் அருமை..//
மிக்க நன்றிங்க அன்பரே
கலை கூறியது...
ayyo ayyo//
என்னாச்சு ...
சத்ரியன் கூறியது...
ரசனையெல்லாம் கொஞ்சம் நெருக்கமா இருக்கு போலயே. என்ன சமாச்சாரம் ராசா.?
அருமையான பாடல் தேர்வு.//
உங்களை போல எனக்கும் காதல் வந்துடுச்சோ என்ற பயம் வந்துடுச்சு அண்ணே ..
மிக்க நன்றிங்க அண்ணே
angelin கூறியது...
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த படம் அருமையான பாடல் .பகிர்வுக்கு நன்றி//
மிக்க நன்றிங்க சகோ
Lakshmi கூறியது...
சுகமான ரசனையுடன் கூடிய பாடல் பகிர்வுக்கு நன்றி//
இதமான கருத்துக்கு நன்றிங்க அம்மா
சி.பிரேம் குமார் கூறியது...
//என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..?"//இதை விட காதலை எப்படி சொல்ல முடியும் அருமையான பாடல்//
உண்மைதான் மிக ரசித்தேன் இந்த இடத்தில ..
நன்றிங்க அன்பரே
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
இறுதிவரை பெயர் சொல்லாத பாடல் .. அருமை
அன்புடன்
ராஜா//
மிக்க நன்றிங்க நண்பரே ..
இறுதி வரை பெயர் சொல்லாமல் இறுதியில் கூறி முடித்த விதம் அருமை /
M.R கூறியது...
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் நண்பரே .
சமீபத்தில் நான் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
பகிர்வுக்கு நன்றி//
வாக்குக்கும் ரசனைக்கும் நன்றிங்க சார்
ஹேமா கூறியது...
இப்போ வந்த புதுப்பாடல்களில் எனக்கும் பிடித்த பாடல் !//
ஆம் அக்கா எல்லோருக்கும் பிடிக்கும் ..
நன்றிங்க அக்கா
*anishj* கூறியது...
நல்ல பாடல்...!
நீங்கள் ரசித்த பாடலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தல...!//
நன்றிங்க தல //
மாய உலகம் கூறியது...
அருமையான பாடல்... காட்சிக்கு தகுந்தாற்போல் மிக சரியாக அமைந்த பாடல்//
ஆம் நண்பரே .. இனிய பாடல்தான் அது ... நன்றிங்க நண்பரே
கருத்துரையிடுக