புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 25, 2011

தீண்டும் மழைத்துளி...


நந்தவனச் சோலையில் 
விரிந்து சிரிக்கும் 
மலர்களின் மேல் 
விழுந்து உடையும் 
மழைத்துளிகளாய்  
என் பால்ய நினைவுகள்!

வானவில்லை பிடித்து  
சூரியனிடம் சுகம் 
விசாரித்த காலங்கள் 
சுருங்கிப் போயின!
குடும்ப வாழ்வின் 
பரிணாம கோடுகளில்! 

அன்று என்னை 
தீண்டி மகிழ்ந்த  
அதே மழைத்துளி 
தான் இன்றும்!

அன்று சாரலில் 
சிறகு விரித்த 
நான் தான் விரட்டி 
அனுப்புகிறேன் என் 
குழந்தைகளை!

நனைந்தால் சளி பிடிக்குமென்று!

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

Post Comment

52 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

மலர்களின் மேல் விழுந்து உடையும் மழைத்துளிகளாய் என் பால்ய நினைவுகள்!
வானவில்லை பிடித்து சூரியனிடம் சுகம் விசாரித்த காலங்கள்

ஆம் பால்ய நினைவுகள் சுகம் தான் அரசன் அதை நினைக்கையில் எவ்வளவு மகிழ்ச்சி

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

குழந்தை மனதோடு நானும் நனைந்து விட்டேன் மழையில்..

அழகிய கவிதை...

இப்படித்தான் நாம் அனுபவித்தது... தற்போது தவறென்று அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறோம்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய சிந்தனை

கலை சொன்னது…

mhum...appadiyaa arasan....

paththiramaa parththukonga pillaigalai ....

rajamelaiyur சொன்னது…

Super kavithai

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதையும் பால்ய நினைவுகளும் சூப்பர்ப்...!!!!

ஹேமா சொன்னது…

இதைத்தானே சொன்னார்கள் மாறாதது மாற்றம் மட்டுமே என்று.நல்லதொரு சிந்தனை !

SURYAJEEVA சொன்னது…

சரி தான்

Prem S சொன்னது…

//சாரலில் சிறகு விரித்த நான் தான் விரட்டி அனுப்புகிறேன் என் குழந்தைகளை!
நனைந்தால் சளி பிடிக்குமென்று!//கலக்கல் வரிகள் அன்பரே இது .உண்மையை படம் போட்டு காட்டுகிறீர்கள்

*anishj* சொன்னது…

அருமையான கவிதை தல...!
பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும், அவற்றை பயன்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது...!
வாழ்த்துகள்...! :)

Unknown சொன்னது…

Nallarukku kavithai.. vallthukkal..

மகேந்திரன் சொன்னது…

ஹா..ஹா.ஹா..
நிஜத்தை நறுக்குன்னு சொல்லியிருகீங்க..
மண்ணில் வியையாடினால் அழுக்காகும்
மழையில் நனைந்தால் சளி பிடிக்கும்
இப்படி தடைக்கற்கள் போட்டு அவர்களின்
பருவத்திற்கு தடைபோட்டு...
பின்னர் நான் தொலைத்துவிட்டேன் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை என
நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லும்
அழகிய கவிதை...

M.R சொன்னது…

அன்று நாம் நனையும் பொழுதும் நமது பெற்றோர் கண்டித்திருப்பார்களே அக்கறையோடு .அதே அக்கறை தான் இப்பொழுதும் உடல்நிலை பாதிக்கும் என்று


பகிர்வுக்கு நன்றி

தமிழ் மணம் 5

Admin சொன்னது…

அரசன் வணக்கம்..இன்றுதான் உங்கள் தளத்திற்கு வர முடிந்தது..

//அன்று சாரலில்
சிறகு விரித்த
நான் தான் விரட்டி
அனுப்புகிறேன் என்
குழந்தைகளை//

உண்மை நண்பரே..

thendralsaravanan சொன்னது…

நல்ல தந்தையுள்ளம்....

சத்ரியன் சொன்னது…

ஆளுக்கொரு நியாயம் தானே, நம் சித்தாந்தம்!?

சீனுவாசன்.கு சொன்னது…

வாங்க வாங்க!
நீங்கள்ளாம் வந்து
கருத்து சொல்லாட்டி எப்பூடி?
அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!

போளூர் தயாநிதி சொன்னது…

சிறகுகள் விரித்து காற்றில் கனவுகளை விதைத்து சுகமான கனவு காண்கிறீர்கள் இனிமையான பசுமை நிறைந்த நினைவுகள் மலரட்டும் பாராட்டுகள் .....

Unknown சொன்னது…

உண்மையான வரிகள் பாசத்துடன்
வாசிக்கப்படுகிறது...

vimalanperali சொன்னது…

சளி பிடித்தால் பிடித்துவிட்டுப்போகிறது.விடுங்களேன்.
நம்மின் எதிர்மறைகளில் இடுவும் ஒன்று.

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

அன்று சாரலில்
சிறகு விரித்த
நான் தான் விரட்டி
அனுப்புகிறேன் என்
குழந்தைகளை!
நனைந்தால் சளி பிடிக்குமென்று!


வாழ்த்துக்கள் நண்பா
அருமையான பதிவு .
அன்புடன்
யானைக்குட்டி

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

ம.தி.சுதா சொன்னது…

////வானவில்லை பிடித்து
சூரியனிடம் சுகம்
விசாரித்த காலங்கள் ///

திரும்பாத ஒன்றை விரும்பிப் பார்க்கிறேன் என்ன பிரயோசனம் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

சிவரதி சொன்னது…

வானவில்லை பிடித்து
சூரியனிடம் சுகம்
விசாரித்த காலங்கள்
சுருங்கிப் போயின!
குடும்ப வாழ்வின்
பரிணாம கோடுகளில்..... அழகிய கவிதை...

சிவரதி சொன்னது…

வானவில்லை பிடித்து சூரியனிடம் சுகம் விசாரித்த காலங்கள்,,,,,
அழகிய கவிதை...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
மலர்களின் மேல் விழுந்து உடையும் மழைத்துளிகளாய் என் பால்ய நினைவுகள்!
வானவில்லை பிடித்து சூரியனிடம் சுகம் விசாரித்த காலங்கள்

ஆம் பால்ய நினைவுகள் சுகம் தான் அரசன் அதை நினைக்கையில் எவ்வளவு மகிழ்ச்சி//

உண்மை சார் ..
பால்ய நினைவுகள் பொக்கிச காலங்கள் ..
மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
குழந்தை மனதோடு நானும் நனைந்து விட்டேன் மழையில்..

அழகிய கவிதை...

இப்படித்தான் நாம் அனுபவித்தது... தற்போது தவறென்று அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறோம்..//

உண்மைதானே சார் ..
நாம் செய்யும்போது இனித்தவைகள் இப்போ நமக்கு நல்ல படிப்பினையையும்
பிள்ளைகளுக்கு அறிவுரைகளும் கொடுக்க வைத்துவிட்டது ..
நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகிய சிந்தனை//

உண்மை பாராட்டுக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

கலை கூறியது...
mhum...appadiyaa arasan....

paththiramaa parththukonga pillaigalai ....//

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ...
நன்றிங்க கலை ..

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
Super kavithai//

thank you so much sir

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
கவிதையும் பால்ய நினைவுகளும் சூப்பர்ப்...!!!!//

அண்ணே நன்றிங்க அண்ணே ..

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
இதைத்தானே சொன்னார்கள் மாறாதது மாற்றம் மட்டுமே என்று.நல்லதொரு சிந்தனை !//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

suryajeeva கூறியது...
சரி தான்//

அன்புக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
//சாரலில் சிறகு விரித்த நான் தான் விரட்டி அனுப்புகிறேன் என் குழந்தைகளை!
நனைந்தால் சளி பிடிக்குமென்று!//கலக்கல் வரிகள் அன்பரே இது .உண்மையை படம் போட்டு காட்டுகிறீர்கள்//

மனம் திறந்து பாராட்டிய உங்களுக்கு என் அன்பு நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

*anishj* கூறியது...
அருமையான கவிதை தல...!
பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும், அவற்றை பயன்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது...!
வாழ்த்துகள்...! :)//

வணக்கம் தல ..
நிறைவான வாழ்த்துக்கும் , அன்புக்கும் நன்றிங்க தல

arasan சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...
Nallarukku kavithai.. vallthukkal..//

வாங்க பாபு சார் .. ரொம்ப நாளா ஆளையே காணோம் ..
வேலை பளு அதிகமோ ..?

பாராட்டுக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
ஹா..ஹா.ஹா..
நிஜத்தை நறுக்குன்னு சொல்லியிருகீங்க..
மண்ணில் வியையாடினால் அழுக்காகும்
மழையில் நனைந்தால் சளி பிடிக்கும்
இப்படி தடைக்கற்கள் போட்டு அவர்களின்
பருவத்திற்கு தடைபோட்டு...
பின்னர் நான் தொலைத்துவிட்டேன் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை என
நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லும்
அழகிய கவிதை...//

வணக்கம் அன்பரே ...
உண்மையில் நாம் இதை எல்லாம் விளையாட்டாக இன்னும் எத்தனையோ செய்து பெற்றவர்களை
பாடாய் படுத்தி இருக்கின்றோம் என்று நாம் அந்த நிலைக்கு வந்தால் உணர முடிகிறது ...
அந்த நிலையில் இருந்து இந்த கிறுக்கலை கிறுக்கினேன் .. பாராட்டுக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

M.R கூறியது...
அன்று நாம் நனையும் பொழுதும் நமது பெற்றோர் கண்டித்திருப்பார்களே அக்கறையோடு .அதே அக்கறை தான் இப்பொழுதும் உடல்நிலை பாதிக்கும் என்று


பகிர்வுக்கு நன்றி

தமிழ் மணம் 5//

மனம் நிறைந்த பாராட்டுக்கும் , வாக்குக்கும் நன்றிங்க அன்பு நண்பரே

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
அரசன் வணக்கம்..இன்றுதான் உங்கள் தளத்திற்கு வர முடிந்தது..

//அன்று சாரலில்
சிறகு விரித்த
நான் தான் விரட்டி
அனுப்புகிறேன் என்
குழந்தைகளை//

உண்மை நண்பரே..//

வணக்கம் அன்பின் நட்புக்கு ...
உங்களின் வருகை எனக்கு மிக்க மகிழ்வு ..
அன்பு பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ...

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
நல்ல தந்தையுள்ளம்....//

அக்கா எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை ..
தந்தையின் நிலையில் இருந்து எழுத முயன்றேன் ..
அன்பின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
ஆளுக்கொரு நியாயம் தானே, நம் சித்தாந்தம்!?//

உலகமே அப்படிதான் சுழல்கிறது அண்ணே ..
என்ன பண்ணுவது .. அண்ணே ..

நன்றிங்க அண்ணே //

arasan சொன்னது…

சீனுவாசன்.கு கூறியது...
வாங்க வாங்க!
நீங்கள்ளாம் வந்து
கருத்து சொல்லாட்டி எப்பூடி?
அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!//

வருகிறேன் சார் .. நிச்சயம் வருகிறேன் ..

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"//

வாங்க சார் ,...
முதலில் வாழ்த்துக்கள் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தமைக்கு ..

நிறைய எழுதி சாதிக்க வாழ்த்துக்கள் ..

தங்களின் முதல் வருகைக்கும் , அன்பின் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றிங்க சார்

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
சிறகுகள் விரித்து காற்றில் கனவுகளை விதைத்து சுகமான கனவு காண்கிறீர்கள் இனிமையான பசுமை நிறைந்த நினைவுகள் மலரட்டும் பாராட்டுகள் .....//

அன்பு கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

கலைநிலா கூறியது...
உண்மையான வரிகள் பாசத்துடன்
வாசிக்கப்படுகிறது...//

வாங்க அண்ணே .. வணக்கம்..
அன்பின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...அண்ணே

arasan சொன்னது…

விமலன் கூறியது...
சளி பிடித்தால் பிடித்துவிட்டுப்போகிறது.விடுங்களேன்.
நம்மின் எதிர்மறைகளில் இடுவும் ஒன்று.//

விட்டு விட்டேன் சார்..
சளி பிடிக்கட்டும் ...
நிறைய எதிர்மறைகள் இன்னும் பொதிந்து உள்ளன .. சார் ... அன்பின் கருத்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...//

நிறைந்த வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ ..

arasan சொன்னது…

யானைகுட்டி @ ஞானேந்திரன் கூறியது...
அன்று சாரலில்
சிறகு விரித்த
நான் தான் விரட்டி
அனுப்புகிறேன் என்
குழந்தைகளை!
நனைந்தால் சளி பிடிக்குமென்று!


வாழ்த்துக்கள் நண்பா
அருமையான பதிவு .
அன்புடன்
யானைக்குட்டி//

அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பு நண்பரே ...

arasan சொன்னது…

PUTHIYATHENRAL கூறியது...
தமிழகத்தை தாக்கும் சுனாமி!//

புதிய தென்றலுக்கு நன்றிகள் ...

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...
////வானவில்லை பிடித்து
சூரியனிடம் சுகம்
விசாரித்த காலங்கள் ///

திரும்பாத ஒன்றை விரும்பிப் பார்க்கிறேன் என்ன பிரயோசனம் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)//

இனி கிட்டாது நண்பரே கோடி கொடுத்தாலும் அந்த சுகமான காலங்கள் .. எல்லாம் ஒரு ஏக்கம் தான்,.. நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சிவரதி கூறியது...
வானவில்லை பிடித்து
சூரியனிடம் சுகம்
விசாரித்த காலங்கள்
சுருங்கிப் போயின!
குடும்ப வாழ்வின்
பரிணாம கோடுகளில்..... அழகிய கவிதை...

௨ டிசம்பர், ௨௦௧௧ ௫:௧௦ பிற்பகல்


சிவரதி கூறியது...
வானவில்லை பிடித்து சூரியனிடம் சுகம் விசாரித்த காலங்கள்,,,,,
அழகிய கவிதை...//

இனிய வருகைக்கும் இனிப்பான கருத்துக்கும் நன்றிங்க சகோ ...