உன் கைகோர்த்து
நள்ளிரவில் நெடுந்தூரம்
நடந்திட ஆசை!
உன் ஈரக்கூந்தலின்
சாரலில் நனைந்து
விட ஆசை!
மார்கழி குளிரில்
கோலமிடும் உன்னழகை
காண ஆசை!
கழனியின் நடுவே
களைப்பு நீங்க
களித்திட ஆசை!
முற்றத்து திண்ணையில்
உன்னுடன் பல்லாங்குழி
விளையாட ஆசை!
உன் தோள்
சாய்ந்து பேருந்தில்
பயணிக்க ஆசை!
உன் கைப்பிடி
சோற்றில் பசியாறி
குட்டிக் குழந்தையாய்
உன் மடியில் துயில ஆசை!
உன் கன்னக்குழியில்
முத்தங்களை புதைக்கவும்
புதைத்த முத்தங்களை
நித்தம் தேடவும் ஆசை!
ஆண்டுக்கு ஒருமுறையேனும்
இருவரும் இணைந்து
குளித்திட ஆசை!
விலகாத விசைகளாய்
இருவரும் ஆண்டுகள்
நூறு வாழ்ந்திட ஆசை!
Tweet |
36 கருத்துரைகள்..:
நியமான
ஆசைதான் நண்பா
முதலில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ங்க
எல்லா ஆசையும் நிறைவேறும்
ஆண்டுக்கு ஒருமுறையேனும்
இருவரும் இணைந்து
குளித்திட ஆசை!
இந்த ஆசை கொஞ்சம் ஓவரா தெரியல ...(:
மீ தி second
நள்ளிரவில் நெடுந்தூரம்
நடந்திட ஆசை////////////////
நடு இரவில் லா ..அப்போடினா நீங்க என்ன கொள்ளிவாய் பிசாசு ஆ
கோலமிடும் உன்னழகை
காண ஆசை!//////////
கண்டிப்பா எந்த பொன்னும் குளிரில லாம் எந்திரிச்சி கோலம் போடாது ...
கோலாமே போடாதாம் ...அப்புரமேங்குட்டு குளிளிரி ...
ஓவர் ஆசை தான் அரசன் உங்களுக்கு
அரசன் எல்லாத்துக்குமே மீ கிராஸ் கேள்விகள் நிறைய வருது ...
இருந்தாலும் கவிதை சுப்பரா இருக்கு என்ட காரணத்தினால் உங்களுக்கு இருக்கும் கொஞ்சம் மானத்தையும் வாங்காமல் போறானாக்கும் ....
கொஞ்ச காலம் காதல் கவிதைகள் எழுத வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம் இது போல் எதாவது ஒன்று கண்ணில் பட்டு கொன்றுவிடுகிறது... என்ன செய்ய.. பேனாவை எடுத்துவிட்டேன்... :)
காதல்...காதல்...காதல்...நிரம்பி வழிகிறது...
ஆசைகளின் வகைகளை பட்டியலிட்டால் பக்கம் நீளும் போல் தெரிகிறதே அரசன்
நியாயமான ஆசைகள் தான்
//விலகாத விசைகளாய்
இருவரும் ஆண்டுகள்
நூறு வாழ்ந்திட ஆசை!//
அருமையான கவிவரிகள் நண்பரே..வாழ்த்துக்கள்.
//உன் கன்னக்குழியில் முத்தங்களை புதைக்கவும் புதைத்த முத்தங்களை நித்தம் தேடவும் ஆசை!//ஏகப்பட்ட முத்தம் கிடைக்கும் என்னமோ அருமை
உங்களுடைய எல்லா ஆசைகளும் விரைவில் நிறைவேற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....
அருமையான ஆசைக்கவிதை.
ஆசையாசையாய்
அவிழ்த்துவிட்ட ஆசைகள்..
அழகோ அழகு சகோதரரே..
மையநோக்கு விசையின் ஈர்ப்பு போல
ஈர்க்கிறது கவிதை..
ஆசை’கள்’ அரசே!
பேருந்து ஆசை தான் கொஞ்சம் பெரிசா தெரியுது. (பேருந்து பயணச்சீட்டு விலையை கணக்கில் கொண்டால் விமானப் பயணம் மலிவு போல ஹ்டெரியுது.)
என்ன நண்பா கல்யாண ஆசை வந்துடுச்சு போல...இதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணனும் சொல்றது..என்ன நண்பா பொண்ணு பாக்க போலாமா?
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?
பாராட்டுக்கள் அரசன்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
எல்லாமே நடக்கக்கூடிய ஆசைதான்.கவலையே இல்லை நடத்துங்க அரசன் !
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
செய்தாலி கூறியது...
நியமான
ஆசைதான் நண்பா
முதலில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ங்க
எல்லா ஆசையும் நிறைவேறும்
ஆண்டுக்கு ஒருமுறையேனும்
இருவரும் இணைந்து
குளித்திட ஆசை!
இந்த ஆசை கொஞ்சம் ஓவரா தெரியல ...(:
//
மிகுந்த நன்றிகள் நண்பரே ...
ஓவராக இருந்தாலும் அதில் தான் எனக்கு மிகவும் ஆசை.. நண்பரே ..
ஹா ஹா ஹா
கலை கூறியது...
மீ தி second//
மீதி செகண்ட் சென்சார் கட் ..
கலை கூறியது...
நள்ளிரவில் நெடுந்தூரம்
நடந்திட ஆசை////////////////
நடு இரவில் லா ..அப்போடினா நீங்க என்ன கொள்ளிவாய் பிசாசு ஆ
//
ஆம் தேவதையை ஆராதிக்கும் பிசாசு என்றும் கூறலாம் கலை
கலை கூறியது...
கோலமிடும் உன்னழகை
காண ஆசை!//////////
கண்டிப்பா எந்த பொன்னும் குளிரில லாம் எந்திரிச்சி கோலம் போடாது ...
கோலாமே போடாதாம் ...அப்புரமேங்குட்டு குளிளிரி ...
ஓவர் ஆசை தான் அரசன் உங்களுக்கு//
எழுந்து கோலம் போட வைப்பேன் ..
அப்போ என்ன பண்ணுவிங்க ...
அதற்கெல்லாம் நாங்கள் சில பல வித்தைகள் வைத்திருப்போம் ,,
கலை கூறியது...
அரசன் எல்லாத்துக்குமே மீ கிராஸ் கேள்விகள் நிறைய வருது ...
இருந்தாலும் கவிதை சுப்பரா இருக்கு என்ட காரணத்தினால் உங்களுக்கு இருக்கும் கொஞ்சம் மானத்தையும் வாங்காமல் போறானாக்கும் ....//
இந்த எடைக்கு மடக்கு கேள்விகளுக்கு அசராம பதில் சொல்வேன் ..கலை ..
மயிலன் கூறியது...
கொஞ்ச காலம் காதல் கவிதைகள் எழுத வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம் இது போல் எதாவது ஒன்று கண்ணில் பட்டு கொன்றுவிடுகிறது... என்ன செய்ய.. பேனாவை எடுத்துவிட்டேன்... :)//
காதல் என்றைக்கு தான் நண்பா நம்மை நிம்மதியா இருக்க விட்டிருக்கு ..
ஒன்று மிஞ்சும் , இல்லை கெஞ்சும் ../
இரண்டும் நாமே தான் ... வருகைக்கு என் நன்றிகள்
ரெவெரி கூறியது...
காதல்...காதல்...காதல்...நிரம்பி வழிகிறது...//
உங்களுக்கு தெரியுது சார் .. ஆனா..?
மிகுந்த நன்றிகள் சார்
r.v.saravanan கூறியது...
ஆசைகளின் வகைகளை பட்டியலிட்டால் பக்கம் நீளும் போல் தெரிகிறதே அரசன்
நியாயமான ஆசைகள் தான்
//
அது இன்னும் நீளும் சார் ... கொஞ்சம் தான் இதில் வெளியிட்டு இருக்கேன் .. இன்னும் இருக்கு ..
வருகைக்கு என் நன்றிகள் சார்
சித்தாரா மகேஷ். கூறியது...
//விலகாத விசைகளாய்
இருவரும் ஆண்டுகள்
நூறு வாழ்ந்திட ஆசை!//
அருமையான கவிவரிகள் நண்பரே..வாழ்த்துக்கள்.//
அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் சகோ...
PREM.S கூறியது...
//உன் கன்னக்குழியில் முத்தங்களை புதைக்கவும் புதைத்த முத்தங்களை நித்தம் தேடவும் ஆசை!//ஏகப்பட்ட முத்தம் கிடைக்கும் என்னமோ அருமை//
அதை குறித்து வைக்க தான் தாள் இல்லை நண்பரே ..
ஏராளம்..
மிகுந்த நன்றிகள் அன்பரே
கடம்பவன குயில் கூறியது...
உங்களுடைய எல்லா ஆசைகளும் விரைவில் நிறைவேற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....
அருமையான ஆசைக்கவிதை.//
அன்பின் வருகைக்கும் , நிறைவான கருத்துக்கும் என் நன்றிகள் மேடம்
கீதமஞ்சரி கூறியது...
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html//
தங்களின் அங்கீகாரத்துக்கு என் நன்றிகள் மேடம் ..
வருகிறேன்
மகேந்திரன் கூறியது...
ஆசையாசையாய்
அவிழ்த்துவிட்ட ஆசைகள்..
அழகோ அழகு சகோதரரே..
மையநோக்கு விசையின் ஈர்ப்பு போல
ஈர்க்கிறது கவிதை..//
இனிமையான வாழ்த்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் அண்ணா
சத்ரியன் கூறியது...
ஆசை’கள்’ அரசே!
பேருந்து ஆசை தான் கொஞ்சம் பெரிசா தெரியுது. (பேருந்து பயணச்சீட்டு விலையை கணக்கில் கொண்டால் விமானப் பயணம் மலிவு போல ஹ்டெரியுது.)//
அன்பின் அண்ணே ..
உங்களின் கருத்துக்கு மற்றும் வாழ்த்துக்கு என் நன்றிகள்..
பேருந்தில் கூட்டம் குறைவாக இருக்குமே அதற்காகத்தான் .. அண்ணே ..
உழவன் ராஜா கூறியது...
என்ன நண்பா கல்யாண ஆசை வந்துடுச்சு போல...இதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணனும் சொல்றது..என்ன நண்பா பொண்ணு பாக்க போலாமா?
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?//
வாங்க போவோம் ..
நல்ல பொண்ணா பார்த்து சைட் அடிச்சி ரொம்ப தாமதா கல்யாணம் பண்ணிக்கலாம் ..
தமிழ்த்தோட்டம் கூறியது...
பாராட்டுக்கள் அரசன்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//
மிக்க நன்றிங்க நண்பரே
ஹேமா கூறியது...
எல்லாமே நடக்கக்கூடிய ஆசைதான்.கவலையே இல்லை நடத்துங்க அரசன் !//
அக்கா சொல்லியாச்சு என்றால் மறு பேச்சு உண்டா ?
மிகுந்த நன்றிங்க அக்கா
கீதமஞ்சரி கூறியது...
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html//
மீண்டும் என்னை அங்கீகரித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் சகோ..
kadhal kavidhai arumai aanaalum konjam ovar sinungal.
கருத்துரையிடுக