புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 30, 2013

அவசர கவனம், அவசியம் தேவை ....


நம்மில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதை பற்றிய சிறு பார்வை தான் இந்த பதிவு . பெரும்பாலும் அனைவரும் இரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள். இப்போ உள்ள சூழலில் ரயிலில் பயணச்சீட்டு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் பட்சத்தில், அதற்கடுத்த வாய்ப்பு பேருந்து தான்! பேருந்தில் பயணம் செய்து வீடு திரும்புவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் களிப்பும், களைப்பும்! 

சாதாரண பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் நிலையை கண்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும்! அதுவும் எங்கள் பகுதி பேருந்தில் பயணிப்பவர்கள் நரகத்தை நான்கு முறை சுற்றி வந்த மாதிரி ஒரு வித விரக்தியில் தான் இருப்பார்கள்! கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள  மூட்டையில் பாதி இங்கு தான் இருக்கும்! பின்பகுதி முழுதும் வெறும் மூட்டைகளாகவே நிறைந்திருக்கும்! மூட்டை எது பயணி எது என்று சில நேரங்களில் நடத்துனரே குழப்பமடைந்து பின் தெளிவார்!

இது ஒருபுறமிருக்க, கோயம்பேட்டிலிருந்து செல்லும் பேருந்துகளில் பெரும்பாதி விழுப்புரத்திற்கு முன்பு உள்ள விக்கிரவாண்டி அருகே உள்ளே ஹோட்டல்களில் நிற்கும்! அங்கு உள்ள உணவகங்களின் தரம் பற்றி நானூறு பதிவு எழுதலாம்! இரவு நேர பயணத்தில் பெரும்பாலனவர்கள் அங்கு உண்பதில்லை, பகல் நேர பயணிகளின் தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது!

அங்கு உள்ள கழிப்பிடங்களின் நிலை கண்டு  இந்தியனாய் பிறந்ததிற்கு வெட்க பட தூண்டும்! பெட்ரோல் விலை ஏற்றத்தை போல் இவர்களும் நாளுக்கு நாள் ஏற்றிக்கொண்டு வரும் பயணிகளின் வயிற்றை வாயிலிலே கலக்கி உள்ளே அனுப்புகின்றனர்! கொடுமை என்னவெனில் வாங்கும் காசில் ஒரு பகுதிக்காவது கொஞ்சம் சுத்தப் படுத்த கூடாதா? ச்சே என்ன ஒரு செயல்! கேட்டால் ஒரு நாளைக்கு உங்களை மாதிரி லட்சம் பேர்  வந்து  செல்கின்றனர் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்!

இதை தவிர்க்கவே பெரும்பாலான ஆண்கள் பேருந்து நின்றதுமே நெடுஞ்சாலையை நோக்கி விரைந்து விடுகின்றனர்! பாவம் பெண்களின் நிலை, வேறு வழியின்றி அந்த நரகத்தை நோக்கி நடக்க வேண்டும்! 

இல்லாத வளர்ச்சியை வாய் கிழிய, பதவியில் இருப்பவர்கள் பேசும்போது தான் மண்டை கிறுகிறுக்கிறது! அவசர , அவசிய தேவை இதை கூட வழங்காத இவர்கள் எம்புட்டு வளர்ச்சி அடைந்து என்ன பயன்! அது வெறும் அதற்கு தான் சமம்! அவசிய தேவைகளான குடிநீர் , கழிப்பிட வசதி இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை! அவசரமாய் ஓடும் நாம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் விடுவதினால் தான் இவர்களின் அராஜகம் பெருகுகின்றது! "என் தங்கம் , என் உரிமை" அளவுக்கு இல்லாமல் போனாலும், அதில் ஒரு பாதியாவது இருந்தால் நன்றாக இருக்கும்!    


Post Comment

19 கருத்துரைகள்..:

பால கணேஷ் சொன்னது…

நிறைய டிராவல் பண்ணி நொந்து நூடுல்ஸாயிட்டிருக்கீங்க அரசன்! இந்த புலம்பல்ஸ் எனக்கும் ‌எல்லாருக்கும் பொருந்தக் கூடியது. ஆனால் கவலைப்பட வேண்டிய, சீர்திருத்த வேண்டிய அரசியல் வா(வியா)திகள்...?

rajamelaiyur சொன்னது…

உங்க ஊருல மூட்டை முடிச்சு, எங்க ஊருல மீன் கூடை தொல்லை. . . .

rajamelaiyur சொன்னது…

உணவகங்களை கொஞ்சம் சரி பன்னினா நல்லாதான் இருக்கும். யார் செய்றது???

Unknown சொன்னது…

நம்ம நாடுள்ள தான் இந்த மாதிரி கேவலமா இருக்குன்னே

சீனு சொன்னது…

அருமையான பதிவு ராசா... பலமுறை நானும் நினைத்ததுண்டு... தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற திமிரில் அங்கிருப்பவர்கள் அராகம் செய்து கொண்டுள்ளார்கள்... அவர்களை நான் அடியோடு வெறுக்கிறேன்

மகேந்திரன் சொன்னது…

நியாயமான கொந்தளிப்பு தம்பி...
பயணங்களில் இந்த அவஸ்தை
பெரும் கொடுமை....
தீர்வு காணவேண்டிய
பெருமன்னர்கள் எல்லாம்
சொகுசுக் காரில் பயணம் செய்பவர்கள்..
இதைப்பற்றி எல்லாம்
அவர்களுக்கு தெரியாதே...
அந்த உபாதை எங்கிருந்து வருகிறது
என்றே தெரியாதவர்களிடம்
என்னத்த சொல்ல...

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

அவசிய தேவைகளான குடிநீர் , கழிப்பிட வசதி இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை! அவசரமாய் ஓடும் நாம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் விடுவதினால் தான் இவர்களின் அராஜகம் பெருகுகின்றது!//

நியாயம்தான்! பகிர்விற்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பேருந்து பயணம் என்றவுடனேயே, இதை நினைத்து தான் பயமே....

சுத்தம் என்பது சுத்தமாக இங்கே இல்லை.....

இவர்கள் அடிப்பதோ கொள்ளை!

என்று திருந்துவார்கள்..... எனக் கேட்கத்தான் முடிகிறது. அதுவும் நமக்குள்ளாகவே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நியாயமான ஆதங்கம் தான்... ஒன்னும் செய்ய முடியவில்லை என்பதும் உண்மை...

VOICE OF INDIAN சொன்னது…

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
நிறைய டிராவல் பண்ணி நொந்து நூடுல்ஸாயிட்டிருக்கீங்க அரசன்! இந்த புலம்பல்ஸ் எனக்கும் ‌எல்லாருக்கும் பொருந்தக் கூடியது. ஆனால் கவலைப்பட வேண்டிய, சீர்திருத்த வேண்டிய அரசியல் வா(வியா)திகள்...?//

உண்மையில் மனம் நொந்து எழுதிய பதிவு சார்

arasan சொன்னது…

என் ராஜபாட்டை : ராஜா கூறியது...
உங்க ஊருல மூட்டை முடிச்சு, எங்க ஊருல மீன் கூடை தொல்லை. . .//

ஊருக்கு ஊர் மாறுபடும் பொருள் மட்டுமே வாத்தியாரே

arasan சொன்னது…

என் ராஜபாட்டை : ராஜா கூறியது...
உணவகங்களை கொஞ்சம் சரி பன்னினா நல்லாதான் இருக்கும். யார் செய்றது???//

எல்லாத்தும் கமிசன் கை மாறுதே வாத்தியாரே

arasan சொன்னது…

சக்கர கட்டி கூறியது...
நம்ம நாடுள்ள தான் இந்த மாதிரி கேவலமா இருக்குன்னே//

பல நாட்டுல இப்படி இருக்குண்ணே .. இங்க கொஞ்சம் அதிகம்

arasan சொன்னது…

சீனு கூறியது...
அருமையான பதிவு ராசா... பலமுறை நானும் நினைத்ததுண்டு... தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற திமிரில் அங்கிருப்பவர்கள் அராகம் செய்து கொண்டுள்ளார்கள்... அவர்களை நான் அடியோடு வெறுக்கிறேன்//

நன்றி சீனு

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
நியாயமான கொந்தளிப்பு தம்பி...
பயணங்களில் இந்த அவஸ்தை
பெரும் கொடுமை....
தீர்வு காணவேண்டிய
பெருமன்னர்கள் எல்லாம்
சொகுசுக் காரில் பயணம் செய்பவர்கள்..
இதைப்பற்றி எல்லாம்
அவர்களுக்கு தெரியாதே...
அந்த உபாதை எங்கிருந்து வருகிறது
என்றே தெரியாதவர்களிட//

உணர வேண்டும் அண்ணே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
அவசிய தேவைகளான குடிநீர் , கழிப்பிட வசதி இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை! அவசரமாய் ஓடும் நாம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் விடுவதினால் தான் இவர்களின் அராஜகம் பெருகுகின்றது!//

நியாயம்தான்! பகிர்விற்கு நன்றி!//

உண்மை தான் தோழரே

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
பேருந்து பயணம் என்றவுடனேயே, இதை நினைத்து தான் பயமே....

சுத்தம் என்பது சுத்தமாக இங்கே இல்லை.....

இவர்கள் அடிப்பதோ கொள்ளை!

என்று திருந்துவார்கள்..... எனக் கேட்கத்தான் முடிகிறது. அதுவும் நமக்குள்ளாகவே.//

எல்லோரும் கேட்க முற்பட்டால் கொஞ்சம் மாறும் என்ற நம்பிக்கை வரும் சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நியாயமான ஆதங்கம் தான்... ஒன்னும் செய்ய முடியவில்லை என்பதும் உண்மை...//

இந்நிலை மாறவேண்டும் சார்