புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 10, 2013

ஊர்ப்பேச்சு # 9 ( Oor Pechu)



என்ன இரத்தினம் எங்கைய்யா போயிட்டே இத்தனை நாளா ? ஆளையே புடிக்க முடியலையே. ?

வா கனகசபை நான் எங்கேயும் போகலை, இங்க தான் இருந்தேன் மனசு கொஞ்சம் சரியில்லை அதான் வெளிய எங்கேயும் தலை காட்டல! சரி எப்படி போவுது பொழப்பு!

எனக்கென்ன, போவுது ஒரு வழியா. இப்பத்தான் முந்திரி கொட்ட பொறிக்கிட்டு வாறன். 

இந்த வருசம் எப்படி மவசூல், பரவா இல்லையா ? இல்ல போன வருச சங்கதி தானா ? 

இல்லையா இந்த முறை பரவாயில்லை, என்ன இந்த குரங்குங்க அட்டகாசம் தாங்க முடியல, மரத்துல இருக்குற பழத்த பறிச்சி தின்னா கூட பரவாயில்ல, அத தூக்கி கொண்டு வெளிய போட்டுதுதுக, கொட்டைகள தேடி எடுக்குறதுக்குள்ள சீவன் போய்டுமாட்டுக்கு...



என்னைய்யா பண்றது, காயுற காய்ச்சல்ல அதுகளும் என்ன பண்ணும். முன்னெல்லாம் காடுகளில் கடந்ததுக இப்ப வூடு பூந்து சோத்துப் பானைய உருட்ட ஆரம்பிச்சிடுச்சி!

மனுசங்க பாடே திண்டாட்டமா இருக்குறப்ப, பாவம் அதுகளும் என்ன பண்ணும்? போற போக்க பாத்தா என்ன நடக்குமுன்னே ஊகிக்க முடியல!

அப்புறம் இரத்தினம் நம்ம கொளஞ்சி கடப்பக்கம் ஏதோ வெளம்பரம் கண்ணுல பட்டுதே, நீ பார்த்தியா ?

பாத்தேன் பாத்தேன்! மண்ணை கொண்டு போய் கொடுத்தா அதை பரிசோதிச்சி அதுக்கேத்த பயிர் பண்ற வழிமுறைகளை சொல்லுதாம் அரசாங்கம்!

இழுத்துகிட்டு கடந்த உசுரு தண்ணி ஊத்த வக்கில்ல, இப்ப வந்து எல போட்டு சோறு போட போறானுவுளா ? இனி பண்ணினா என்ன பண்ணாட்டா என்ன ? பாதிய சுண்ணாம்பு கல்லு வெட்டி எடுக்க எழுதி கொடுத்துப்புட்டானுவோ? மிச்சத்த தருசா போட்டுட்டு வெள்ளையும் சொள்ளையுமா பவுசு காட்டி திரியுறானுவோ ? இப்ப வந்து இந்த ஈர வெங்காயம் வெளம்பரமா ?

அப்புறம் ஆபிசர்களும் கடமையை செஞ்சதா காட்டி வயிற நெரப்பனும்ல! சரி ஒம்பொண்ணு பரீட்சை எழுதி இருந்துதே என்னாச்சி ? பாசாயிட்டுதா ? எம்புட்டு மார்க்கு ? 

பத்து எழுதி இருக்கய்யா , இந்த மாச கடைசியில தான் முடிவு வருதாம், பாப்போம், கவனத்த செலுத்தி தான் பரிச்சை எழுதினேன் னு சொல்லுது ... 

நல்ல முடிவு தாம்யா வரும் , வெசனப்படாதே! சரி கனகசபை, முந்திரி கொட்ட வாங்க ஆளு வரன்னுக்குறான், காயப்போட்ட கொட்டைகளை அள்ளி வைக்கிறேன்!

சரிய்யா நல்ல வெலையா வந்தா கொடு , அவசரப்படாத! ஒன்னும் வீனாப்போவாது, இருக்க இருக்க மவுசு கூடும்! 

சரி கனகசபை, பாக்கலாம்!   


Post Comment

4 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

ரொம்ப நாளாச்சு ஊர் பேச்சு கேட்டு நல்லாருக்கு அரசன்

கீதமஞ்சரி சொன்னது…

விவசாயிகள் பாடு என்றைக்கும் வேதனையான பாடுதான் போலும். ஊர்ப்பேச்சு கேட்க ஊருக்கே ஒரு நடை சென்றுவந்தாற்போல் உள்ளது. நன்றி அரசன்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

நல்லாருக்கு....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காட்டை அழிச்சிட்டே வந்தா... இன்னும் என்னென்ன வருமோ...?