அவளைப்பற்றி எழுதிட
அமர்கையில்,
மழை ஓய்ந்த
வானம் போலாகிறேன்!
எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!
மீண்டும்
அதே ஏக்கப் பெரு வலி!
உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!
தலை கவிழ்ந்த படி
அவளிடம் சொன்னேன்,
தலையை நிமிர்த்தி
சிரித்துவிட்டு செல்கிறாள்!
இதற்கு
திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள்,
அந்த நொடியே மறந்திருப்பேன்!
Tweet |
24 கருத்துரைகள்..:
ஹாஹா அருமை சகோ
எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!
>>
வேணுமின்னா ஒரு குவார்ட்டர் அடிச்சு பாரேன்.
சிரமம் தான்...
ராஜி சகோதரி ஆலோசனை - யம்மாடி...!
எப்படி எல்லாம் ஐடியா சொல்றாங்க .
அதுக்கென்ன திட்ட சொல்லிட்டா போச்சு.
// உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!//
அடடா.....
கவாட்டர் - என்ன ஐடியா?
வணக்கம்
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!
என்ன வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை வாழ்த்துக்கள்
என்னுடைய வலைத்தள முகவரி
https://2008rupan.wordpress.com
தொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா ஹா..
நல்ல கவிதை.
காதல்ல எந்த விசயத்தையும் உடனே மறந்திட கூடாதுல அதனால என்னமோ சிரிச்சுட்டு போய்டாங்க...அண்ணா..
Poruththamaana title nanbaa. Asaththal. Raji akka sonna idea try panni paarungalen. ;-)
இப்படியோ
இதற்கு
திட்டிவிட்டே சென்றிருக்கலாம்
அந்த நொடியே மறந்திருப்பேன்!
அல்லது
இப்படியோ
இதற்கு
திட்டிவிட்டே சென்றிருக்கலாம்
அந்த நொடியே மறந்திருப்பேன் - நானும்
அவள் கொடுத்த
ஏக்கப் பெருவலியை
படித்துப் பார்த்தேன்
//திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், // இந்த வரியில் வரும் அவள் மட்டும் ஒட்டவில்லை, அவளை வாசகனிடம் கொடுத்து விடுங்கள்... மற்றபடி கவிதை அருமையோ அருமை :-))))
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!
அந்த வார்த்தைகள் இன்னும் எழுத ஊக்கம் கொடுதிருக்குமே
எழுதுவதற்கு
வரவில்லை வரவில்லை
என்று சொல்லி
காதல் காவியமே
படைக்கிறீர்கள் தம்பி...
கிரேஸ் கூறியது...
ஹாஹா அருமை சகோ//
நன்றிங்க
ராஜி கூறியது...
எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!
>>
வேணுமின்னா ஒரு குவார்ட்டர் அடிச்சு பாரேன்.//
இன்னும் அந்த அளவுக்கு வளர்ச்சி இல்லைங்க அக்கா ... 90 தான் தாங்குது
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சிரமம் தான்...
ராஜி சகோதரி ஆலோசனை - யம்மாடி...!//
அக்காவோட ஆலோசனை
மயக்கம் வருதில்ல சார்
T.N.MURALIDHARAN கூறியது...
எப்படி எல்லாம் ஐடியா சொல்றாங்க .
அதுக்கென்ன திட்ட சொல்லிட்டா போச்சு.//
ஹா ஹா ஆர்வம் தான் சார்
வெங்கட் நாகராஜ் கூறியது...
// உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!//
அடடா.....
கவாட்டர் - என்ன ஐடியா?//
அக்கா டெரரா ஐடியா கொடுக்குறாங்க ..
2008rupan கூறியது...
வணக்கம்
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!
என்ன வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை வாழ்த்துக்கள்
என்னுடைய வலைத்தள முகவரி
https://2008rupan.wordpress.com
தொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
நன்றிங்க ரூபன்
Seeni கூறியது...
ஹா ஹா..
நல்ல கவிதை.//
நன்றி நண்பா
Uzhavan Raja கூறியது...
காதல்ல எந்த விசயத்தையும் உடனே மறந்திட கூடாதுல அதனால என்னமோ சிரிச்சுட்டு போய்டாங்க...அண்ணா..//
இருக்கலாம் தம்பி
பிளாகர் கோவை ஆவி கூறியது...
Poruththamaana title nanbaa. Asaththal. Raji akka sonna idea try panni paarungalen. ;-)//
அய்யயோ நான் வரல ஆட்டத்துக்கு
//திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், // இந்த வரியில் வரும் அவள் மட்டும் ஒட்டவில்லை, அவளை வாசகனிடம் கொடுத்து விடுங்கள்... மற்றபடி கவிதை அருமையோ அருமை :-))))//
யோவ் அவளை வாசகர்களிடம் கொடுத்துவிட்டு நான் என்ன பண்றது ? திருத்தம் எனக்கும் சரியாகத்தான் படுகிறது தல ...
r.v.saravanan கூறியது...
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!
அந்த வார்த்தைகள் இன்னும் எழுத ஊக்கம் கொடுதிருக்குமே//
நிச்சயமாக சார்
மகேந்திரன் கூறியது...
எழுதுவதற்கு
வரவில்லை வரவில்லை
என்று சொல்லி
காதல் காவியமே
படைக்கிறீர்கள் தம்பி...//
அய்யயோ இதெல்லாம் சின்ன சின்ன கிறுக்கல்கள் தானே அண்ணே ..
கருத்துரையிடுக