புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 09, 2014

ஊர்ப் பேச்சு # 16 ( Oor Pechu # 16)



கைய உள்ளார விட்டு துழாவி பார்த்து கையில சிக்கிய கொஞ்சம் கம்மஞ் சோத்தோடு தீசையையும் சுரண்டி போட்டு எரும தயிர சேத்து கரைச்சி நாலு சொம்பு உள்ள வுட்டதும் தான் கண்ணு வழி உசுர் நின்னுது கனகசபைக்கு! 

வேவாத வெயிலுல எள்ளுக்கு தண்ணி கட்டுனா என்னா ஆவுறதாம் ன்னு பொலம்பிகிட்டே தலையில இருந்த தொவர அடிக்கட்டைகள கூடையோட குப்புற கவுத்தா கனகசபை பொண்டாட்டி...

(தொவரைய வெட்டுனதுக்கு அப்புறம் அடிக்கட்டை அப்பிடியே தான் இருக்கும், மழை பேஞ்ச ஈரத்துல புடுங்குனா பூவு போல கையோட வந்துடும், வூடு கொண்டாந்துட்டா போதும் பத்து நாளைக்கு நிம்மதியா அடுப்பு எரிவுடலாம். 

என்ன வூடு சேக்கறதுக்குள்ள பாதி சீவன் போய்டும். மலைச்சிட்டு புடுங்காம வுட்டுட்டா ஏர் ஓட்டும் போது உழுவுக்காரன் காலுல கூராணி கணக்கா விசுக்குன்னு ஏறி தொலைச்சிடும். பாவம் அவன் பொழப்பு நாலு நாளைக்கு போய்டும், அதுக்கு பயந்துட்டே பாதி சம்சாரிக புடுங்கிடுவாங்க. 

டிராக்டர் வந்த பின்னாடி இந்த கவலை இல்லாம பாதி மக்க விட்டத்த பாத்து கெடக்குதுக.  மழ பேஞ்ச ஒடனே டிராக்டர முன்னாடி வுட்டு பின்னாடி வெர புட்டிய தூக்கியாந்து கடமைக்கு வீசி எறிஞ்சிட்டு போற சனங்களுக்கு எங்க தெரிய போவுது பயிர் பண்ற அருமை....) 

ஒருவேள சோத்துக்கு நேரம் தள்ளி போனதுக்கே பாழும் ஒடம்பு பாடா படுத்துதே, பாவும் நெற மாசம் புள்ளத்தாச்சி கணக்கா உடம்பெல்லாம் எள்ளுக்காயோடு தொவண்டு நிக்குற செடிவோல பாத்த பின்னும் சோறு தேடுமா? அப்படியும் மூணு பாத்திக்கு முடியாம போச்சி ... =#@@@## பய மவன் கரண்ட்ட புடுங்கிட்டான். நாளைக்கு வரைக்கும் தாங்குமான்னு தெரியல, இன்னைக்கே சுருண்டு விழுந்துர மாதிரி இருந்துச்சி ...

எள்ளு கொள்ளுன்னு கெடந்தா உடம்பு என்னாத்துக்கு ஆவுறது, விடியறத்துக்குள்ள ஒன்னும் செத்து போவாது, போயா போயி கொஞ்சம் கண்ண அசரு , ராவெல்லாம் கட்டிபுட்டு, சூரியன் உச்சிக்கு வந்துட்டான் இன்னமுட்டும் வெறும் வவுத்தோட இருந்திருக்க .. இதுல பேச்சு வேற ...

உனக்கென்னாடி ..... தெரியும். வந்து பாரு தெரியும்,

ஆமா நான் பாக்காத காடுதான் .. ஏக்கர் கணக்குல இருக்கு ... போவியா ...

சரி இரத்தினம் வரேன்னு சொன்னானே, வந்தானா? வெத சோளம் கேட்டிருந்தான், உங்கையால கொடு வெளையாத பூமியும் வெளைஞ்சி தள்ளும்...

ஆமா எங்கையில தான் எல்லாம் இருக்கு, அது அது உழைச்சா தான் வெள்ளாம பெருகும்.. வீட்ல படுத்து மோட்டு வளையையே பாத்து கெடந்தா குதிரு நொம்புமா ?

எல்லாத்துக்கும் ஒரு இராசின்னு ஒன்னு இருக்குடி.. எடுத்து வை, நான் அருவா கருக்கு வைக்க கொடுத்திருந்தேன், போயிட்டு வாங்கிட்டு வந்துடுறேன்....

சரி சரி சீக்கிரம் வந்து சேரு, அங்க யார்கிட்டயும் கத அளந்துகிட்டு நிக்க வேண்டாம், வரும்போது மருவத்தூரான் கடையில நாலு ரொட்டி கட்டிக்கிட்டு வா, புள்ள ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கான் ...

சரி சரி ...

Post Comment

7 கருத்துரைகள்..:

சதீஷ் செல்லதுரை சொன்னது…

அருமை அரசா....வழக்கம்போல அசலான மொழி ...அசத்தல்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எழுத்துக்கள் பேசுகின்றன
நன்றி நண்பரே
தம +1

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

arumai! tha,ma4

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஊர்ப்பேச்சு வழக்கம் போல அசத்தல்! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஊர்பேச்சு கிராமீய மணம் கமழுகின்றது!கிராமத்தை மனக் கண்முன் நிறுத்தியது! மிக அருமை!

உழவன் சொன்னது…

கம்மஞ்சோத்தோட துவர, எள்ளு, கொள்ளுனு படிக்க படிக்க கிராமத்து பேச்சு சூப்பரா இருக்கு...அண்ணா..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மண் மணம் வீசும் பதிவு அரசன்..