புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 25, 2014

வளைந்த பனை...




தாவுகால் போட்டு 
கிளுவை கொழுந்தை 
உன் ஆடுகள் தின்று கொண்டிருக்க,
மேல்கரையோரம் 
என் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க,


வறுத்த ஈசல் கலந்த அரிசியில் 
நாமிருவரும் பசியாறிய 
அந்த வளைந்த "பனை",
அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது  
நீயற்ற 
"என்னிருப்பை". 




Post Comment

9 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

வணக்கம் அண்ணா...

நல்ல கவிதை படிச்சி ரொம்ப நாள் ஆகுதேன்னு காலைலேருந்து நெனச்சிகிட்டே இருந்தேன்...

ஈசலோட எள் கலந்து சாப்புடுறதே ருசி, இதுல ரெண்டு பேரும் சேர்ந்து சாப்டா....!

KILLERGEE Devakottai சொன்னது…


நானும்கூட மூழ்கினேன் நண்பா, பழமை நினைவுகளில்,,, அருமை.

அருணா செல்வம் சொன்னது…

வளைந்த பனை....
உங்கள் உள்ளத்தை இன்னமும் வளைத்தே இருக்கிறது அரசன்.

அருமையான நினைவலை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஓஹோ...!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கவிதை அரசன். கவிதையை ருசித்தோம். ஆனால் இந்த வறுத்த ஈசல் கலந்த அரிசி....தான் கொஞ்சம் புரியவில்லை. எங்கேயோ சங்க இலக்கியத்தில் வாசித்த நினைவு இருக்கின்றது... கிராமத்து வழக்கமோ...நாங்களும் கிராமத்தவர்தான் ஆனால் இது தெரிந்தது இல்லை...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கிராமத்து ஏரிக்கரையை கண்முன்னே நிறுத்தியது கவிதை! ஏரிக்கரையை மட்டும் அல்ல... வாழ்த்துக்கள்!

Seeni சொன்னது…

அட டா

தினேஷ்குமார் சொன்னது…

பால்ய நினைவுக்குள் சென்றேன் தலைவரே ....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நீங்காத நினைவுகள்....

அருமை அரசன்.