திரும்புகிற பக்கமெல்லாம் அழகிகளாக?, சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் தான் காண கிடைக்கும் என்று நம்பி கொண்டிருந்த என் எண்ணத்தை பொய்யென்றது கும்பகோணம் நகராட்சி. திரு. ஆர் வி சரவணன் இயக்கி சமீபத்தில் வெளியான சில நொடி சிநேகம் குறும்படத்திற்கான ஷூட்டிங்கிற்காக குடந்தையில் காலடி வைத்த நொடியிலிருந்து நோக்குமிடமெல்லாம் தேவதைகளாக காட்சி அளித்த கும்பகோணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதற்காகவே இயக்குனருக்கு தனி நன்றி சொல்லியாகவேண்டும்.
தேவதைகளைப் பற்றி சொல்லுமுன் உங்களிடம் எனது முதல் நடிப்பு அனுபவத்தை சொல்லிட வேண்டுமென்று அடி மனசு அடம்பிடிப்பதால் சொல்லிவிடுகிறேன்.
பள்ளியில் கூட நாடகமென்றால் பின்னோக்கி நகரும் சுபாவம் கொண்ட நான், எந்த துணிச்சலில் குறும்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சில இரவுகளில் வியந்திருக்கிறேன் சாரி பயந்திருக்கிறேன்! சின்ன உதறலுடன் தான் குடந்தையூருக்கு பயணமானேன். இருப்பினும் அண்ணன் ஆவி, துளசிதரன் சார், மற்றும் கீதா மேடம் போன்ற அறிந்த முகங்களே இருப்பதால் கொஞ்சம் தைரியமாகவும் இருந்தது.
பதற்றத்தில் துவங்கியதால் முதல் காட்சி ஓகே ஆகவே கொஞ்சம் நேரம் பிடித்தது, பிறகு அனைவரும் இயல்பு நிலைக்கு வந்தமையால் காட்சிகள் சற்று எளிதாகவும் நினைத்த மாதிரியும் வர ஆரம்பித்தன. மதிய உணவுக்கு பிந்திய பேருந்துநிலைய இறுதி காட்சிகளில், மூணே மூணு வசனத்தை வைத்துக்கொண்டு நான் தவித்த தவிப்பை குடந்தை பேருந்து நிலையத்திடம் கேட்டாலும் சொல்லும், ஒருவழியாய் ஓகே என்று இயக்குனர் சொன்னபிறகு தான் மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.
சரி வாங்க நம்ம தேவதைகள் கதைக்கு வருவோம். ஷூட்டிங் நடைபெறும் தருணங்களில் சில தேவதைகள் எங்களை கடந்து போனாலும் கவனிக்க நேரமின்றி இருந்தமையால், மதிய உணவுக்கு முன்பு அண்ணன் ஆவி அவர்களின் காட்சிகளை பேருந்து நிலையத்தில் படமாக்க, நான் பேருந்து நிலையத்தை சற்று வலம் வந்தேன், பேருந்து நிலையம் பராமரிப்பின்றி படு கேவலமாக இருக்கிறது, ஆனால் நகரப் பேருந்து நிலையம் அருமையாக இருக்கிறது. கண்ணில் விழுந்த கன்னிகள் சிலர் தேவதைகளாகவும், பலர் தேவதைகளின் தோழிகளாகவும் இருந்தது பெரும் வியப்பு...
கண்ட முக்கால்வாசிப் பெண்கள் ஒப்பனைகளற்ற இயற்கை எழிலோடு இருப்பதால் சட்டென்று கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். அண்ணன் ஆவியும் இதே கருத்தை சொன்னதில் மனம் சந்தோசத்தில் திளைத்தது. மறுநாள் இயக்குனரின் இல்லத்தில் சுவையான காலை உணவை உண்டோம், வெகுநாள் கழித்து விருந்து உண்ட நிறைவை தந்தது.
வலங்கைமானிலிருந்து குடந்தை வரும் வழிகளில் சின்ன சின்ன கால்வாய்களும், தென்னை மரங்களுமாய் மனதை திணறடித்துக் கொண்டிருந்தது இயற்கை. சின்ன சின்ன இடைவெளிகளில் கோயில் இருப்பது கூடுதல் இனிமை. பெரிதாய் சுற்றிப் பார்க்கவில்லை என்றாலும், துண்டு துண்டுகளாய் ரியல் எஸ்டேட் கூறு போட்டதில் போக மிச்சமிருக்கும் அந்த சின்ன கிராமங்கள் இவ்வளவு அழகென்றால், ஒரு 40, 50 வருடங்களுக்கு முந்தி என்ன ஒரு எழிலோடு இருந்திருக்குமென்ற எண்ண ஓட்டங்களுடன் சென்னை நோக்கி விரைந்தது எங்களின் விரைவுப் பேருந்து .....

Tweet |
7 கருத்துரைகள்..:
மனசு வலையில் அண்ணன் குமார் குறும்பட காணொளி பகிர்ந்திருந்தார் பார்த்தேன் நல்ல நடிப்புதான்..
ஆனால் நீங்க நடிக்கறீங்க என்ற உண்மையை உங்கள் முகபாவமே காட்டி கொடுத்து விடுகிறது ஏன் என்னன்னு பார்த்தா தேவதைகளைத் தேடுகின்றன தங்கள் விழிகள் ... (சும்மா தமாசுக்கு ) எல்லாம் நலம்
சூப்பர் பதிவு! அரசன். அது சரி நாங்களும் தான் அங்க உங்க கூடத்தான் இருந்தோம்....எங்கள் கண்ணுக்குப் படாத தேவதைகளும் அவங்க தோழிகளும் உங்க கண்ணுக்கு மட்டும் எப்படிய்யா பட்டாங்க?!!! நடிக்கறா மாதிரி லுக் விட்டீங்களோ...இப்ப புரியுது நீங்க வசனம் பேசும் போது அது வராம போனதுக்கு.....
வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் கலைப் பயணம் தொடரட்டும்
தம 2
சிறப்பாக நடித்து இருந்தீர்கள்! பகிர்வுக்கு நன்றி!
குடந்தை அனுபவம் - சிறப்பாக அமைந்தது என்பது உங்கள் பதிவில் தெரிகிறது! வாழ்த்துகள் அரசன்.
நேற்று ரூமில் தனியாக கண்டேன் சிலநொடி சினேகம் நன்றாகத்தான் நடித்திருந்தீர்கள் பார்க்கலாம் அடுத்த படத்தில் தங்களது புகைப்படம் அனுப்புகிறேன் தொடர்பு கொள்க
sivappukanneer@gmail.com
கருத்துரையிடுக