கிட்டத்தட்ட இது சுய சொரிதலே, ஆகவே நண்பர்களே, கொஞ்சம் பொறுத்தருள்க! "வாசிப்பு என்பது ஒரு போதை மச்சி, அதை ஒரு தடவை தொட்டிட்டின்னா, நீ விடணும்னு நெனச்சாலும் அது உன்னை விடாது.. அதனாலத்தான் நான் .............." என்று அளவுக்கு மீறிய குடிகாரனை விட வெகு ஜோராக பாடமெடுத்து படுத்தினான் நெருங்கிய நண்பனொருவன். அன்றிலிருந்து இன்றளவும் அவனிடம் பேசுகையில் சர்வ ஜாக்கிரதையாக பேசிக்கொண்டு இருக்கிறேன்.
"எப்படி மச்சி உன்னால மட்டும் படிக்க முடியுது, ஸ்கூல் டேஸ்ல கூட நீ இப்படி படிச்சி நான் பார்த்ததில்லையே டா... என்னால முழுசா ரெண்டு பக்கங்கூட படிக்க முடியலைடா, நீ என்னடான்னா இம்புட்டு புத்தகத்தை வாங்கி குமிச்சி வைச்சிருக்கியே மச்சி" என்று தன்னோட இயலாமையை வெளிப்படுத்தினான் இன்னொரு சிநேகிதன். இரண்டு பக்கத்திற்கு மேல் படித்தால் உறக்கம் வருகிறது என்று இவனைப் போன்று உண்மையை ஒப்புக் கொள்பவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழும்பலாம், தவறில்லை! அதை விடுத்து, வண்ணத்திரை நடுப்பக்கத்தையோ, டைம்பாஸ் புக்கையோ இல்லை ஆகாவலி எவனோ ஒருவன் எழுதியோ ஏதோ ஒரு புத்தகத்தை இடையிடையே கொஞ்சம் மேய்ந்துவிட்டோ, இல்லை எங்கேயோ யாரோ பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு வந்து, ஏதோ தமிழ் இலக்கியத்தை மட்டுமில்லாமல் அண்டவெளி இலக்கியங்களை எல்லாம் ஒரே மிடறில் குடித்தவன் மாதிரி நீட்டி முழங்கி, சும்மா இருப்பவனை தூக்கு மாட்டிக் கொள்ளலாமா என்று யோசிக்க வைத்துவிட்டு செல்லும் அரை வேக்காடுகளை வெள்ளாவியில் வைத்து வேகவைக்க வேண்டும்.
இதையெல்லாம் கடந்து இன்னொரு கர்ண கொடூரமான வகையறா ஒன்று இருக்கிறது. அவர்கள், பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தாயா? சிவகாமியின் சபதம் கண்டாயா? எனக் கேட்டு, இல்லையென்று மறுத்து நாம் தலையசைக்கையில், 'என்ன இன்னும் படிக்கலையா நீ' என்று பிறப்பிலும் இழி பிறப்பை போன்று நம்மை நோக்குகையில், ஆயிரம் "பீப்" பாடல்களை ஒருசேர எழுதி அவர்களை நோக்கி பாடக் கூடிய வல்லமை கண நேரத்தில் வழங்கிச் செல்வர்.
பெரும்பாலும் புத்தகங்கள் பற்றி எல்லோரிடத்திலும் நான் விவாதிப்பதில்லை, என் ரசனையோடும், எண்ண அலைவரிசையோடும் ஒத்துப் போகும் வெகு சிலரோடு மட்டும் புத்தகங்கள் பற்றி பேசுவது என் வழக்கம். அவ்வகையில் பதிவுலகில் மிக சொற்ப எண்ணிக்கையிலான நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். பேசாமைக்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது, படித்த நூலைப் பற்றி, அதன் உள்ளடக்க விழுமியங்களை கூறுவதை விட்டுவிட்டு, தன்னோட வாசிப்புத்திறன் பற்றிய அருமை பெருமைகளை பெருங்குரலெடுத்து பாடுவதினால், "வேணாம்டா சாமீ இந்த மன உளைச்சல்" என்று விலகி நழுவிவிடுவேன்.
ஒவ்வொருவரும், ஒவ்வொரு வெரைட்டியான சுகானுபவங்களை வழங்கிவிட்டுத் தான் போகிறார்கள். இப்போதெல்லாம் அவர்களை பேசவிட்டு கேட்பதையே ஒரு பொழுதுபோக்காக வைத்துள்ளேன் என்பது தனிக்கதை!

என்னோடு நெருக்கமாய் வாசிப்பு/படைப்பு வெளிகளில் இயங்கும் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவரை பெரும்பாலான தோழமைகளுக்கு முறையான வாசிப்புத் துவக்கம் இருந்திருக்கிறது அதை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித சிக்கல்களுமில்லை, அவ்வாறான நண்பர்கள் பலரும் வாசிப்பதில்லை என்று சொல்லக் கேட்கையில் கவலையில் உறைகிறது மனம். எனக்கோ வாசிப்பு என்பது பள்ளிப் புத்தக வாசிப்பு தான். அதன்பிறகு எப்பவாது குமுதம், குங்குமம் அவ்வளவு தான். நான் பயின்ற அரசுப் பள்ளிகளில் நூலகமென்ற ஒன்று இருந்தது தெரியாது அதுதான் உண்மை, அவ்வாறு தான் நான் பயிற்றுவிக்கப் பட்டேன். அதன் பிறகு ஊர்க்காரர் ஒருவர் உதவியுடன் செந்துறை அரசு கிளை நூலகத்தில் உறுப்பினர் ஆனேன் அத்தோடு சரி, காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும், நூலகர் தொல்லையும்! எதை வாசிக்க வேண்டும் என்ற முறையான புரிதலில்லை என்பது கூடுதல் காரணம்.
ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு ஊர்க்கார அண்ணன் சூர்யபிரகாஷ் என்பவர் வைத்திருந்த "காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்" என்ற தபு சங்கரின் கவிதைப் புத்தகம் தான் என்னோட வாசிப்புக்கு முதல் துவக்கம் என்று சொல்லலாம். அதன் பிறகு பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் போட்டிருந்த பிரம்மாண்ட புத்தக திருவிழாவில், சென்னையைப் பற்றி பெரிதான அறிமுகமின்றி தனியொருவனாய் சென்று சில புத்தகங்களை வாங்கி வந்தது தான் புத்தக சேமிப்புக்கான பிள்ளையார் சுழி! அதன் பிறகு வாங்குகிறேனோ இல்லையோ வருடா வருடம், புத்தகச் சந்தையை வேடிக்கைப் பார்க்கவாது செல்வதை வழக்கமாய் வைத்திருகிறேன். அந்த காலக் கட்டங்களில் வாங்கிய புத்தங்கள் பல தொலைக்கப்பட்டும், சிலதுகள் களவாடப்பட்டதும் போக எஞ்சியிருக்கும் நூல்களை இப்போது பார்த்தால் பயங்கர சிரிப்பாக இருக்கிறது. அப்போதைய ரசனையிலிருந்து இப்போது முற்றிலும் மாறுபட்டிருக்கிறேன்.
இப்போதெல்லாம் அலுவலகம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன், எங்கு நேரம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் என்னோட வாசிப்புக்கு தீனி போட துவங்கி விடுவேன். எனக்கு வாசிப்பதற்கென்று ஒரு தனி இடம் தேவையாய் இருந்ததில்லை. நேரமும் அதற்கான மனநிலையும் வாய்த்தால் போதும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பேன். இனியும் அப்படித்தான் தொடர்வேன் என்று நம்புகிறேன். என்னுடைய வாசிப்புக்கு அரசனும் நானே, அரக்கனும் நானே!

என்னோடு புத்தகம் வாங்க வந்தீர்கள் என்றால், இவனை மாதிரி ஒரு பைத்தியத்தை பார்க்க முடியாது என்று தலைதெறிக்க ஓடுவீர்கள் அப்படியொரு நூல் தேடலிருக்கும். அதனாலே பெரும்பாலும் தனியாக சென்று வாங்குவது தான் வழக்கம். இப்போது தான் நம்பிக்கைக்கு உரிய சிலரின் பரிந்துரையில் நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.
அதிக எண்ணிக்கையிலான நூல்கள் வாங்கியதும், வாங்கிய நூல்களை அதிகமாக வாசித்ததும் கடந்த வருடத்தில் தான். அது போல் இந்த வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன், அதுமட்டுமின்றி எங்கெங்கோ எப்படியெல்லாமோ ஓட வேண்டியவன், திசை மாறி, தடம் புரண்டு தமிழ் எழுத்துலகில் நுழைந்துவிட்டேன். கரம் பிடித்து வலையுலகில் உள் நுழைத்த காலத்திலிருந்து இன்றுவரை என்னை கரிசனத்துடனும், கவனத்துடனும் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமா என்ற உறவையும் தாண்டி பேனாவின் மூலம் எங்கள் மண்ணை அறிமுகப்படுத்திய திரு. கருணாகரசு அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, இன்னும் சில மாதங்களில், "சிறுகதைத் தொகுதி" ஒன்றை வெளியிடவும் முடிவு செய்து களமிறங்கி அதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்று கூறுவார்கள், எனவே இதுவும் சாத்தியமாகும் என்றே கருதுகிறேன்! பார்க்கலாம்....

Tweet |
12 கருத்துரைகள்..:
உங்களது வாசிப்பு தொடரட்டும். உங்களது வாசிப்பு அனுபவத்தையும் எழுதுங்கள். உங்களது ‘சிறுகதைத் தொகுதி’ பணிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்1
வாசிப்பின் தொடக்கம் கண்டதையும் வாசிக்க வைக்கும். அது ஒரு சுக அனுபவம்.பின்னர் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம் என்ற எண்ணம் உருவாகும். வாசித்தலே படைப்புகளை உருவாக்க தூண்டுகிறது.சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நண்பா!
அரசன் முதலில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் !!
கீதா: நான் வாசிக்கத் தொடங்கியது பொட்டலம் கட்டி வரும் செய்தித் தாள்கள், கதைகள் என்று. அப்படி வரும் கதைகள் முடிவு இல்லாமலோ, தொடக்கம் இல்லாமலோ இருக்கும். மனம் தேடும். இது என்ன கதை யார் எழுதியது? சிறுகதையா, நாவலா என்று. வீட்டில் இதற்கெல்லாம் பெரிய தடா. பள்ளிப் புத்தகங்கள், கல்லூரிப் புத்த்கங்களுக்கு இடையில் வைத்து வாசித்த நினைவு. ஆனால் அப்போதைய வாசித்தல் அப்படி ஒன்றும் பெரிய வாசித்தல் என்று சொல்லுவதற்கில்லை. எல்லோரும் வாசித்தப் புத்தகங்களே. தோழிகள் பரிந்துரைக்கும் புத்தகங்கள். நாவல்கள். பின்னரும் தடா. உங்கள் அளவிற்குத் தனித்தன்மையுடன் தேடி வாசித்த அனுபவம் இல்லை. ஆர்வம் அவ்வப்போது எழும். ஆனால் அடங்கிவிடும்.
ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் உங்கள் புத்தகத்தை. அதிலிருந்தாவது எனது வாசித்தல் தொடங்கி விரிகின்றதா என்று பார்ப்போம். உங்கள் கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்பது தெரியும். வாழ்த்துகள் அரசன்.
அனைத்திற்கும் ஒருங்கே “வாழ்த்துகள்”.
வாழ்த்துகள்......
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா! புத்தகம் சிறப்பாக வெளிவரவும் வாழ்த்துக்கள்! சிறுவயதில் கோகுலம், பாலமித்ரா, பூந்தளிரில் தொடங்கிய வாசிப்பு ஒரு கட்டத்தில் நிறைய இருந்து தற்போது குறைந்துவிட்டது எனக்கு வருத்தமே மழை சமயத்தில் சில நூல்கள் வாசித்தேன்! இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் தரமான நூல்களை வாசிக்க வேண்டும். இந்த வருட புத்தகத் திருவிழாவுக்கென ஒரு தொகை சேர்த்துள்ளேன் பார்க்கலாம்!
தங்களது சிறுகதை தொகுதி விரைவில் வெளிவந்து, பெரும் வெற்றியடைய முன்கூட்டிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
உங்களது வாசிப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்.
எனக்கு நிறைய வாசிக்கப் பிடிக்கும். இப்போ இங்கு புத்தகங்கள் கிடைப்பது அரிது... வாசிப்பு நின்று போச்சு... கடைசியாக வாசித்தது... ஆவியின் கவிதைகள்... கில்லர்ஜி கொடுத்தது... ஆவிப்பாதானே...
இப்போ இணையத்தில்தான் என்னோட வாசிப்பெல்லாம்....
சிறுகதை தொகுதி விரைவில் வரட்டும்... வாழ்த்துக்கள்.
vaazhththukal annaa...
//பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தாயா? சிவகாமியின் சபதம் கண்டாயா?//
அகதா கிருஷ்டி எழுதுனதை படிச்சிருக்கீங்களா? படிக்கலையா பரவாயில்ல விடு விடு.
எமிலி டிக்கின்சன் ? இல்லையா? சரி விடுங்க.
ஜே கே ரௌலிங் ? அதுவும் இல்லையா?
இதெல்லாம் படிக்காம என்னய்யா ஓட்டல் நடத்துறீங்க.
மொதல்ல மகாபாரதம்,ராமாயணம், திருக்குறள் ன்னு ரெண்டு ரெண்டு படிங்க.
இப்போதுதான் சீனு எழுதிய உங்களின் நூலுக்கான மதிப்புரையை முகநூலில் பார்த்துவிட்டு வருகிறேன்..
இங்கே பார்த்தால் ..
சரி நீங்கள் படிக்கும் நூல்களைப் பட்டியலிட்டு இருந்தால் என்மாதிரி ஆட்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் இல்லையா அரசன்..
வாழ்த்துகள் வாசிப்பதற்கு, தொடர்க வாசித்தல் பயணத்தை
கருத்துரையிடுக