புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 27, 2012

இனியுந்தான் வருமா?


குறுகிய வட்டமிட்டு, 
இலுப்பைகளை 
கொஞ்சமிட்டு 
வட்ட சில்லால, 
செத்தி விளையாடிய 
சிலிர்ப்பான காலம்!
                          இனியுந்தான் வருமா?

பொய்யான பூச்சாண்டிக்கும் 
புள்ளை புடிப்பவனுக்கும்,
அஞ்சி! தளர்ந்த 
தாத்தாவின், தளராத 
இறுக்கத்தில் உறங்கிய
உயிர்ப்பான காலம்!
                          இனியுந்தான் வருமா?

ஊர்த்திருவிழாவுல,
ஊதாப்பலூன் வாங்கி,
ஒய்யாரம ஓடி 
வருகையில வெடிச்சதும் 
உடைஞ்சி அழுத 
அழகிய காலம்!
                      இனியுந்தான் வருமா?

அம்மா சுழற்றும் 
திருகையில தவறாம 
தானியம் நிரப்பி 
அரைச்சி மகிழ்ந்த 
அற்புத காலம்!
                    இனியுந்தான் வருமா?

எள்ளு சங்காயம்,
கருப்பஞ்சருகு கொளுத்தி 
மார்கழி குளிரை 
மிரட்டி அனுப்பிய 
மிடுக்கான காலம்!
                 இனியுந்தான் வருமா?

பொழுதெல்லாம் ஓடியாடி 
தேஞ்சாலும், இரவுல 
மயிலிறகா வருடுது 
அந்த கனாக்கால
நினைவுகள்! ஏக்கங்களை 
சுமந்து கொண்டு ...

Post Comment

17 கருத்துரைகள்..:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா அப்பிடியே குழந்தை பருவத்துக்கே கொண்டு போயிட்டீங்க அரசன், சூப்பர்ப்....!!!

பெயரில்லா சொன்னது…

aiye superaa irukku arasan

பெயரில்லா சொன்னது…

கனவிலும் கவிதையிலும் மட்டுமே இனி நண்பரே....

இன்ட்லி...தமிழ் பட்டைக்கு மாறுங்கள்...

ஹேமா சொன்னது…

இன்னொருதரம் பிறப்போம்.நிச்சயம் வரும் அரசன் !

Prem S சொன்னது…

வராது அன்பரே

Prem S சொன்னது…

//ஊர்த்திருவிழாவுல,ஊதாப்பலூன் வாங்கி,ஒய்யாரம ஓடி வருகையில வெடிச்சதும் உடைஞ்சி அழுத அழகிய காலம்! இனியுந்தான் வருமா?//மஞ்சள் பலூன் எனக்கு !

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
அது ஒரு கனாக் காலம்.

அனுஷ்யா சொன்னது…

உங்களோட வரலாறாகும் வாழ்வு ஏற்படுத்திய ஒரு பாதிப்பை இந்த கவிதையும் ஏற்படுத்த தவறவில்லை..
மிக அருமை நண்பரே...
வாழ்த்துக்கள்...

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆஹா அப்பிடியே குழந்தை பருவத்துக்கே கொண்டு போயிட்டீங்க அரசன், சூப்பர்ப்....!!!//

மிகுந்த நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

கலை கூறியது...
aiye superaa irukku arasan//

நெஞ்சார்ந்த நன்றிகள் கலை

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
கனவிலும் கவிதையிலும் மட்டுமே இனி நண்பரே....

இன்ட்லி...தமிழ் பட்டைக்கு மாறுங்கள்...//

உண்மைதான் சகோ...
இன்ட்லி தமிழ் பட்டையை இணைக்கிறேன்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
இன்னொருதரம் பிறப்போம்.நிச்சயம் வரும் அரசன் !//

மிகுந்த நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
வராது அன்பரே//

உண்மைதான் அன்பரே

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
//ஊர்த்திருவிழாவுல,ஊதாப்பலூன் வாங்கி,ஒய்யாரம ஓடி வருகையில வெடிச்சதும் உடைஞ்சி அழுத அழகிய காலம்! இனியுந்தான் வருமா?//மஞ்சள் பலூன் எனக்கு !//

கண்டிப்பா எடுத்துக்கோங்க

arasan சொன்னது…

Rathnavel கூறியது...
அருமை.
அது ஒரு கனாக் காலம்.//

மிகுந்த நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
உங்களோட வரலாறாகும் வாழ்வு ஏற்படுத்திய ஒரு பாதிப்பை இந்த கவிதையும் ஏற்படுத்த தவறவில்லை..
மிக அருமை நண்பரே...
வாழ்த்துக்கள்...//

அன்பின் கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே

vetha (kovaikkavi) சொன்னது…

இனியெல்லாம் வராத காலங்கள் பற்றிய கவிதை நன்று. சகோதரா. வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com