புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 04, 2013

நானும், தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பும்!


சென்னையில் தொடர்ந்து இரண்டாம் முறையாக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு! வெளியூர்களில் இருந்து நிறைய பதிவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்! திட்டமிட்டபடி விழா நிகழ்வுகள் நடந்து முடிந்ததில் மன நிறைவு... 

இந்த வருட சந்திப்பில் நிறைய நண்பர்களை காணவேண்டும் என்றும், அவர்களோடு பேசவேண்டும் என்று பெரிய பட்டியல் வைத்திருந்தேன், அனைத்தும் தவிடு பொடியாகின! உங்களோடு பேசமுடியாமல் போனதற்கு என்னை மன்னியுங்கள் தோழமைகளே! 

இந்த சந்திப்பு சில இனிய தருணங்களை வழங்கியது! குறிப்பாக சிறப்பு விருந்தினர்களோடு சில மணித்துளிகள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு எளிமை பொதிந்துள்ளது என்பதை, அவர்களோடு நெருங்கி பேசுகையில் புரிகிறது! அவர்களின்  எழுத்துக்கள் போலவே  அவர்களும் வெள்ளந்தி மனிதர்கள்!

உற்சாகமான ஒரு நாள் முழுதையும் பதிவர்களோடு செலவிட்டது மன நிறைவை தருகிறது! எதையும் பாராமல் இணையம், தமிழ் என்ற ஒன்றுக்காக ஒரு கூரையின் கீழ் குழுமியது ஆனந்தத்தில் திளைக்க வைத்துவிட்டது!

விழா என்று ஒன்று வந்துவிட்டால் அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை மன மகிழ்வுடன் பொறுத்துக்கொண்ட தோழமைகளுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்!


(சிறப்பு உரைக்கு முன்)




(எழுத்தாளர் பாமரனுடன் நான்!)




(திரு. கண்மணி குணசேகரன் அவர்களோடு )



(விழாவிற்காக உழைத்த தோழர்கள் - சிலர் விடுபட்டுள்ளனர் )



(திரு. சதீஷ் செல்லத்துரை மற்றும் வெற்றிவேல்)


காமெடி கும்மி நண்பர்கள் பலரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது! என்ன நேரம்தான் இல்லை அவர்களோடு கொஞ்சம் பேசி மகிழ!தோழர்களே என்னை மன்னிக்க!

இன்னும் எழுதநிறைய இருக்கிறது தேவைப்பட்டால் சரியான நேரத்தில் இன்னொரு பதிவில் மிக தெளிவாக சொல்கிறேன்!

முடிவாக அனைவரும் கிளம்பிய பிறகு அவரவருக்கு கொடுத்த பணியோடு எதிர்பாராமல் சற்று சுமை கூடினாலும்  திறம்பட செய்து முடித்த மன நிறைவோடு நான், சீனு மற்றும் ரூபக் மூவரும் அவரவர் இல்லம் நோக்கி நகர்ந்தோம்! 


Post Comment

25 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

சீனு, ரூபக் மற்றும் உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. .

rajamelaiyur சொன்னது…

விழா குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

ரூபக் ராம் சொன்னது…

என் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நாள் .... வருகை தந்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி..... விழாவை சிறப்பாக நடத்திய நிர்வாகக் குழுக்கு பாராட்டுக்கள்

ரூபக் ராம் சொன்னது…

//சீனு, ரூபக் மற்றும் உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருந்தது.//

மிக்க நன்றி ராஜா

Unknown சொன்னது…

உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருந்தது

ரொம்ப நன்றி அண்ணே

aavee சொன்னது…

நண்பா.. நீங்க,சீனு,ரூபக் மூணு பேரோட எனர்ஜி பார்த்து அன்னைக்கு அசந்துட்டேன்.. நாம பேச டைம் கிடைக்கலே.. பரவாயில்ல.. இன்னொரு முறை ப்ளான் பண்ணி மீட் பண்ணுவோம்.

Admin சொன்னது…

உங்களை சந்தித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அண்ண்ண்ண்ண்ண்ணா........

விழாக்குழுவினரின் கடும் உழைப்பை நான் உணர்கிறேன்...

கோகுல் சொன்னது…

அரசன்-உங்கள் உழைப்பெல்லாம் அளப்பறியது.தூக்கமற்ற கண்களில் தெரிந்தது சந்திப்பு சிறப்புற நிகழ வேண்டுமென்ற ஆர்வம்.மனமார்ந்த பாராட்டுகள்.,

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

முதல் நாள் இரவு நீங்கள் உழைத்த உழைப்பை கண்ணார பார்த்தேன்..

அரசா.. உனக்கு நியாபகம் இருக்கா? அடுத்த நாள் காலை நீ எங்கள் ரூமுக்கு வந்த போது, எத்தனை மணிக்கு தூங்கின'ன்னு கேட்டேன்... நீ மூன்றரை மனியாச்சுன்னு சொன்னியே...

கார்த்திக் சரவணன் சொன்னது…

அரசன், உங்கள் உழைப்பு அபாரமானது.... புதியவராயினும் ரூபக் அயராமல் வேலை செய்தார்... சீனுவை என்னால் பார்க்கவே முடியவில்லை, எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் விழாவுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார்... இந்த உழைப்புக்கள் பாராட்டத்தக்கவை...

saidaiazeez.blogspot.in சொன்னது…

சிந்திய வேர்வை வீண் போகவில்லை!
மிகவும் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இது நமது குடும்ப விழா அல்லவா உழைத்த யாவருக்கும் மிக்க நன்றி...!

Unknown சொன்னது…


உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வெளியில் தெரியாத உங்கள் உழைப்பு அபாரமானது... வாழ்த்துக்கள்...

கலாகுமரன் சொன்னது…

உங்களோடு பேச முடியவில்லை.. உங்களின் உழைப்பு விழாவினை சிறப்பாக்கியது. இந்த விழாவினை நல்லதொரு நினைவாக கருதுகிறேன். உழைத்த அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

சக்தி கல்வி மையம் சொன்னது…

என்னால் பதிவர் சந்திப்புக்கு வரமுடியவில்லை. வந்திருந்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். இவ்விழா சிறக்க உழைத்த அனைத்து நட்புகளுக்கும் பாராட்டுகள்..

ராஜி சொன்னது…

காய்த்த மரம்தான் கல்லடி படும். விமர்சனக்கள் வரும்போதே நாம நல்லா செஞ்சிருக்கோம். அது யாருக்கோ பிடிக்கலைன்னுதானே அர்த்தம். அந்த கோணத்தில் பார்த்தா இது 100/100 வெற்றிதான். உங்கள் உழைப்பு உங்க கண்ணில் தெரிந்தது. மனசார சொல்றேன் வாழ்த்துகள் அரசா!

வெற்றிவேல் சொன்னது…

அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அண்ணா, விழா பணியையும் சிறப்பாக செய்துள்ளார்கள்... தங்கள் உழைப்பு மகத்தானது...

Ranjani Narayanan சொன்னது…

மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறீர்கள் இந்த திருவிழாவை. இளைஞர்களின் உழைப்பிற்கு பாராட்டுக்கள். எனக்கு உங்களுடன் பேச முடியவில்லை. அடுத்த முறை பேசுவோம்.

வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விழாவில் தங்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி தந்தது! சிறப்பாக ஒரு விழாவை நடத்தியதில் உங்கள் பங்கும் நிறைய இருந்ததை அறிந்தேன்!வாழ்த்துக்கள்!

சசிகலா சொன்னது…

இந்த அளவிற்கு அவரவர் வீட்டு விசேசத்தில் கூட யாரும் ஓடி ஆடி உழைக்க மாட்டாங்க... சகோதர உறவுகளே உங்கள் அனைவருக்கும் எனது மன மார்ந்த நன்றி.

பாலா சொன்னது…

இந்த முறை கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். அடுத்தமுறை (மதுரையோ ஈரோடோ) கண்டிப்பாக கலந்து கொள்வேன். உங்கள் உழைப்புக்கு என் பாராட்டுக்கள் நண்பரே. விரைவில் சந்திப்போம்.

ezhil சொன்னது…

எல்லோரும் அருமையாக விழா சிறப்புற உழைத்திருந்தீர்கள்..வாழ்த்துக்கள்...பேச நேரம் அமையாவிட்டாலும் நேரில் சந்தித்ததே மிகப் பெரிய வாய்ப்பு..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - விழா சிறப்புடன் நடைபெற்றது குறிந்து மிக்க மகிழ்ச்சி - விழாக் குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டது நன்று - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...