புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 14, 2013

ஏனெனில் நான் பதிவன் ...


எங்கு சென்றாலும் நிறைகளை விட குறைகளே கண்ணுக்கு அதிகம் தெரிவதால், ச்சே... நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எரிச்சல்  ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது ! 
சொந்த வேலையாக சில இடங்களுக்கு சென்றாலும், அங்கும் நமக்கு பதிவெழுத ஏதாவது சிக்காதா என்கிற என் பூதக் கண்கள் விரியத் தொடங்கிவிடுகின்றன. இது ஏதாவது பயங்கர நோயாக இருக்குமோ என்று மருத்துவரை பார்த்து தெளிவு கொள்வோம் என்று அங்கு சென்றேன், அங்கு செமத்தியாக ஒரு மேட்டர் சிக்கியது (பதிவெழுத தான் பாஸ், நீங்க நினைக்குற மாதிரி இல்ல)  எம் பெருமான் முருகன் விரும்பினால் அடுத்த பதிவில் காண்போம்! 

எங்கு எது நடந்தாலும் , அதை நம்ம பத்திரிக்கைகாரர்கள் பண்ணுவதைப் போல், (அது அவங்க தொழில்? )  கவர் பண்ணுவதில் குறியாக இருக்கிறேனே தவிர, ஏதாவது எம் பங்குக்கு கேட்கணும் என்கிற துணிச்சல் சுத்தமாய் இல்லையென்று தான் சொல்லவேண்டும். 

என்னையும் மீறி ஒரு வெறி பொங்கினால் நேராக அருகிலிருக்கும் இணைய சென்டரை நாடிச் சென்று , பிளாக்கிலும், பேஸ் புக்கிலும் முறையிட்டு என் சமூக கடமையை ஆற்றிக்கொள்கிறேன்! நாலு ஸ்டேடஸ் , மூணு பதிவு தேறிய நன்றியோடு அடுத்த சமூக குறைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது மனசு! 

என்னை மாதிரி ஒரு சமூக போராளியை கவனிக்காத மத்திய, மாநில அரசுகளை சில நேரங்களில் திட்ட தோன்றும், இதெல்லாம் நம் கடமை இதுக்கு போய் பலனை எதிர்பார்ப்பதா என்று ஆழ் மனசு கதறி கதறி சமாதானம் சொல்லுகையில் அமைதி கொள்கிறது மனசு ....

இம்புட்டு செஞ்சிருக்கோம், பதிலா நமக்கு இந்த இணையம் என்ன செஞ்சது என்று ஏடாகூடமா யோசிச்சு , மதிப்பற்ற இந்த பதிவுலகத்தை விட்டு விலகப் போகிறேன் என்று ஒரு பதிவை எழுதவேன், அண்டமெங்கும் நிறைந்திருக்கும் என் நலம்விரும்பிகள், தயவு செய்து விலகவேண்டாம் வேண்டுமென்றால் ஓய்வு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இதுவரை முப்பது முறைக்கு மேல் விலகவேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏற்றிருக்கிறேன் என்றால் என் பொறுமையை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம்!

எவரும் படித்திராத ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதி பெயர் வாங்கணும் என்று முடிவு பண்ணி மூணு வருசமா தேடிகிட்டு இருக்கேன், பழைய புத்தக கடை தாத்தா இந்த தெரு பக்கமே வந்துறாத என்பது போல் பல முறை பார்த்தாலும், நான் என்ன சாதாரணா ஆளா ? விடுவதாய் இல்லை! இந்த வருடத்தில் என் எண்ணம் ஈடேருமென்று அம்பலவாண சுவாமிகள் சொல்லியிருக்கிறார்!

ஆகவே இரசிக கண்மணிகளே கொஞ்சம் பொறுத்திருங்கள், இதுவரை யாரும் படித்திராத ஒரு புத்தக விமர்சனத்தோடும், யாரும் பார்த்திராத வித்தியாசமான சினிமா விமர்சனத்தோடும்  உங்களை இம்சிக்க விரைவில் வருகிறேன், அதுவரை அமைதியாக இருக்கும்படி உங்களை கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!பி. கு.:  வலைப்பூ தொடங்கி  தொடர்ந்து பதிவு எழுதி உங்களை எல்லாம் இம்சிப்பேன் என்றும், இத்தனை நண்பர்களை சேர்ப்பேன் என்றும் சத்தியமாக நினைக்கவில்லை! இது என்னோட 200 வது பதிவு. இந்த இருநூறில் படிக்கும்படி இருந்தது வெகு சொற்பமே!  நல்ல பதிவுகளை தருவதற்கு முயற்சிக்கிறேன்! ஆதரவு அளிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் , வணக்கங்களும்! 


Post Comment

59 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அரசன். ஒரு நண்பனாய் உளமார வாழ்த்துகிறேன்

வெற்றிவேல் சொன்னது…

200 பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா...

இந்த பிரச்சினைக்குத்தான் சமூக பதிவுகளை எழுதுவதில்லை...

r.v.saravanan சொன்னது…

எனக்கும் அதே தான். வெளியில் செல்லும் போது காணும் சில நிகழ்வுகள் பார்க்கும் போது நாம எழுதறதுக்கு எதுனா சிக்குமா என்று தோன்றுகிறது
ஆர்வ கோளாறு என்ன பண்றது

வெற்றிவேல் சொன்னது…

விமர்சனத்த சீக்கிரம் போடுங்கள்...

r.v.saravanan சொன்னது…

இருநூறு பதிவை அசால்டாக தொட்ட அன்பு தம்பி அரசனுக்கு வாழ்த்துக்கள்

புலவர் இராமாநுசம் சொன்னது…


200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அரசன்! வாழ்க ! வளர்க!

கோமதி அரசு சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மாதேவி சொன்னது…

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! மென்மேலும் வெற்றிகள் தொடரட்டும்.

ராஜி சொன்னது…

200க்கு வாழ்த்துகள் அரசா!!

ராஜி சொன்னது…

இம்புட்டு செஞ்சிருக்கோம், பதிலா நமக்கு இந்த இணையம் என்ன செஞ்சது என்று ஏடாகூடமா யோசிச்சு
>>
அனபான அண்ணான், தம்பி, மாமன், மச்சான், அக்கா, அம்மான்னு எத்தனை உறவுகளை தந்திருக்கு!! இதைவிட வேறென்ன வேணும் அரசா!!??

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

T.N.MURALIDHARAN சொன்னது…

இரு நூறு பதிவு சாதாரண விஷயமல்ல. வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்கள் பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் பார்க்கும் போதெல்லாம் படித்து இருக்கிறேன். கருத்துரைகள் தந்ததில்லை. இது உங்களது 200 ஆவது பதிவு என்று அறிந்தேன். எனது வாழ்த்துக்கள்!

என் ராஜபாட்டை - ராஜா சொன்னது…

வாழ்த்துக்கள் ராசா. . . 200 விரைவில் 2000 ஆக வாழ்த்துக்கள்.

என் ராஜபாட்டை - ராஜா சொன்னது…

200 அடித்த அரசன் வாழ்க. நான் பதிவைதான் சொன்னேன்.

என் ராஜபாட்டை - ராஜா சொன்னது…

200 அடித்த அரசன் வாழ்க. நான் பதிவைதான் சொன்னேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

200-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் அரசன். மேன்மேலும் பதிவுகள் தொடரட்டும்.

Seeni சொன்னது…

vaazhthukkal nanpaa...!

கிரேஸ் சொன்னது…

நூறு இரண்டை தொட்டதற்கு வாழ்த்துகள் அரசன்!

நூறு நூறையும் தாண்டி எழுதவும் வாழ்த்துகள்! :)

Uzhavan Raja சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..

Abdul Basith சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

அப்பாடா! கடமையை ஆத்தியாச்சு! :)

Ambal adiyal சொன்னது…

வாழுத்துக்கள் சகோ .இந்த இருநூறும் இன்னும் பல நூறாகப் பெருகட்டும் .
தொடர்ந்தும் எழுதி நற் புகழை அடையுங்கள் !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், ஹைக்கூ கவிதைகளையும் எதிர் ...!

வேடந்தாங்கல் - கருண் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

Bagawanjee KA சொன்னது…

#இதுவரை முப்பது முறைக்கு மேல் விலகவேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏற்றிருக்கிறேன்#
இன்னும் பதினைந்து இந்த எண்ணம் வரணும்... ஐநூறு பதிவுகள் போட வாழ்த்துக்கள் !
என் கணக்கு சரிதானா,குமாரு ?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - 200 வது பதிவினிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

Sasi Kala சொன்னது…

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி.. சமூகம் சார்ந்த பகிர்வுகளை எதிர்பார்க்கிறேன்.

ராஜ் சொன்னது…

டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.
பிற மொழி படங்கள் (பிரெஞ்ச், கொரியன்) படங்கள் பத்தி எழுதுங்க அரசன்.

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அரசன். ஒரு நண்பனாய் உளமார வாழ்த்துகிறேன்,,//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

வெற்றிவேல் கூறியது...
200 பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா...

இந்த பிரச்சினைக்குத்தான் சமூக பதிவுகளை எழுதுவதில்லை...//

நன்றி வெற்றி

அரசன் சே சொன்னது…

பிளாகர் r.v.saravanan கூறியது...
எனக்கும் அதே தான். வெளியில் செல்லும் போது காணும் சில நிகழ்வுகள் பார்க்கும் போது நாம எழுதறதுக்கு எதுனா சிக்குமா என்று தோன்றுகிறது
ஆர்வ கோளாறு என்ன பண்றது//

ஆர்வம் வேண்டும் சார்

அரசன் சே சொன்னது…

வெற்றிவேல் கூறியது...
விமர்சனத்த சீக்கிரம் போடுங்கள்.//

எலேய் தம்பி பதிவ ஒரு திரும்பி படி

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
இருநூறு பதிவை அசால்டாக தொட்ட அன்பு தம்பி அரசனுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா

அரசன் சே சொன்னது…

புலவர் இராமாநுசம் கூறியது...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அரசன்! வாழ்க ! வளர்க!//

மிகுந்த நன்றிகள் அய்யா

அரசன் சே சொன்னது…

கோமதி அரசு கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

அன்பு நன்றிங்க

அரசன் சே சொன்னது…

மாதேவி கூறியது...
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! மென்மேலும் வெற்றிகள் தொடரட்டும்.//

அன்புக்கு நன்றிங்க

அரசன் சே சொன்னது…

ராஜி கூறியது...
200க்கு வாழ்த்துகள் அரசா!!//

நன்றி அக்கா ... நிறைய உறவுகள் இதன் மூலம்தான் கிடைத்தது .. நான் ஒரு தமாசுக்கு அதை சொன்னேன்

அரசன் சே சொன்னது…

தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி பிரகாசு அண்ணே

அரசன் சே சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
இரு நூறு பதிவு சாதாரண விஷயமல்ல. வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

தி.தமிழ் இளங்கோ கூறியது...
உங்கள் பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் பார்க்கும் போதெல்லாம் படித்து இருக்கிறேன். கருத்துரைகள் தந்ததில்லை. இது உங்களது 200 ஆவது பதிவு என்று அறிந்தேன். எனது வாழ்த்துக்கள்!//

கருத்திட்டமைக்கு என் நன்றிகள் சார்

அரசன் சே சொன்னது…

என் ராஜபாட்டை - ராஜா கூறியது...
வாழ்த்துக்கள் ராசா. . . 200 விரைவில் 2000 ஆக வாழ்த்துக்கள்.//

எல்லாம் உங்கள் ஊக்கம்தான் சாரே

அரசன் சே சொன்னது…


பிளாகர் என் ராஜபாட்டை - ராஜா கூறியது...
200 அடித்த அரசன் வாழ்க. நான் பதிவைதான் சொன்னேன்.//

விரைவில் 500ம் அடிப்பேன் சாரே

அரசன் சே சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
200-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் அரசன். மேன்மேலும் பதிவுகள் தொடரட்டும்.//

நன்றிங்க வெங்கட் சார்

அரசன் சே சொன்னது…

Seeni கூறியது...
vaazhthukkal nanpaa...!//

நன்றி நண்பா

அரசன் சே சொன்னது…

கிரேஸ் கூறியது...
நூறு இரண்டை தொட்டதற்கு வாழ்த்துகள் அரசன்!

நூறு நூறையும் தாண்டி எழுதவும் வாழ்த்துகள்! :)//

வாழ்த்துக்கு நன்றிங்க கிரேஸ்

அரசன் சே சொன்னது…

Uzhavan Raja கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..//

நன்றி தம்பி ராசா

அரசன் சே சொன்னது…

Abdul Basith கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

அப்பாடா! கடமையை ஆத்தியாச்சு! :)//

கடமை ஆற்றிய பாஸித் அவர்களுக்கு என் நன்றிகள்

அரசன் சே சொன்னது…

Ambal adiyal கூறியது...
வாழுத்துக்கள் சகோ .இந்த இருநூறும் இன்னும் பல நூறாகப் பெருகட்டும் .
தொடர்ந்தும் எழுதி நற் புகழை அடையுங்கள் !//

நன்றிங்க சகோ

அரசன் சே சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், ஹைக்கூ கவிதைகளையும் எதிர் ...!//

அடுத்த பதிவாக அதுவாக கூட இருக்கும் அண்ணே .. அன்புக்கு நன்றி

அரசன் சே சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
வாழ்த்துக்கள் நண்பா...//

நன்றிங்க ஆசிர்யரே

அரசன் சே சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றிங் சார்

அரசன் சே சொன்னது…

Bagawanjee KA கூறியது...
#இதுவரை முப்பது முறைக்கு மேல் விலகவேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏற்றிருக்கிறேன்#
இன்னும் பதினைந்து இந்த எண்ணம் வரணும்... ஐநூறு பதிவுகள் போட வாழ்த்துக்கள் !
என் கணக்கு சரிதானா,குமாரு ?//

எனக்கு கணக்குன்னாலே செம அலர்ஜி அய்யா .. அதானாலதான் கணக்கு பண்றதையே விட்டுட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் .. (எப்படியோ தப்பிச்சாச்சி )

அரசன் சே சொன்னது…

பிளாகர் cheena (சீனா) கூறியது...
அன்பின் அரசன் - 200 வது பதிவினிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நன்றிங்க அய்யா

அரசன் சே சொன்னது…

முனைவர் இரா.குணசீலன் கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.//

நன்றிங்க முனைவரே

அரசன் சே சொன்னது…

Sasi Kala கூறியது...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி.. சமூகம் சார்ந்த பகிர்வுகளை எதிர்பார்க்கிறேன்.//

முடிந்த வரை முயற்சிக்கிறேன் அக்கா ...

அரசன் சே சொன்னது…

ராஜ் கூறியது...
டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.
பிற மொழி படங்கள் (பிரெஞ்ச், கொரியன்) படங்கள் பத்தி எழுதுங்க அரசன்.//

எங்கிட்டு அதெல்லாம் நமக்கு சரி வருமா ? சும்மா ஒரு பில்டப்பு தல ...