புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 30, 2013

சுமை தாங்கிகள்!எவ்வளவோ சொல்லியும்
மணம் முடிந்த
இரண்டாம் வாரமே
இடம் பெயர்ந்தோம்
தனிகுடித்தனத்திற்காய்!

திருமணம் முடிந்த 
இரண்டு மாதத்தில்
எனக்கும் அவனுக்கும் 
இது நான்காவது சண்டை!

அவனால் மூன்று,
என்னால் இன்று!

சிறு மௌனம்,
பெரிய கிள்ளு,
இறுக்கும் அணைப்பு, 
இத்தோடு இளகிடுவோம்!


வழக்கத்துக்கு மாறாய் 
இரண்டு மணிநேரத்துக்கும்
மேலாக நீள்கிறது!
மௌனப்  பேச்சு!

இத்தனை நெருக்கத்தில் 
இவன் சும்மாய் இருந்ததில்லை 
என்னிடம்! அசையாமல் 
படுத்திருக்கிறான் 
விசிறியை வெறித்தபடி!

அவன் மௌனத்தை கலைக்க  
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !
அவன் சிரித்தான்!

என் பிடிவாதத்தை 
இன்றும் இரசிக்கும்  
அம்மாவும், அப்பாவும் 
என்னுள் வந்து போனார்கள்! 

சாப்பிட்டுக் கொண்டிருந்தால் 
என்னை சுமந்த  
அந்த  உயிர்களுக்கு 
நிச்சயம் புரையேறி இருக்கும்!


Post Comment

43 கருத்துரைகள்..:

ezhil சொன்னது…

என்ன செய்வது எங்காவது ஒரு விட்டுக்கொடுத்தல் தேவைப்படுகிறது... அவனின் பிடிவாதங்களும் அங்கீகரிக்கப்பட்டதாலேயே அந்த மௌனம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மௌனம் நல்லது...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

எப்பொழுதும் பிடிவாதம் வெற்றி பெறுவதில்லையே...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிடிவாதம் மட்டுமே இருந்தால் நிம்மதி இல்லை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…


//எவ்வளவோ சொல்லியும்
மணம் முடிந்த
இரண்டாம் வாரமே
இடம் பெயர்ந்தோம்
தனிகுடித்தனத்திற்காய்!//
எவ்வளவோ சொன்னது யார்? நான் அந்தப் பெண் என்று நினைத்து விட்டேன்.

//வழக்கத்துக்கு மாறாய் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீள்கிறது! மௌனப் பேச்சு!//
அட! என்று சொல்லவைக்கும் வரிகள்

rajamelaiyur சொன்னது…

// அவன் மௌனத்தை கலைக்க
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !
அவன் சிரித்தான்//

நிஜ வாழ்விலும் இப்படிதான் நடக்கும்.

சீனு சொன்னது…

யோவ் ராசா ஓடிப்போய் கல்யாணம் பண்ணினதா மட்டும் தான சொன்னீரு.. கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு மாசம் ஆகல அதுக்குள்ள என்னவோய் சண்ட

சதீஷ் செல்லதுரை சொன்னது…

மவுனப் பேச்சு....அருமை அரசா.....

சதீஷ் செல்லதுரை சொன்னது…

மவுனப் பேச்சு....அருமை அரசா.....

aavee சொன்னது…

//யோவ் ராசா ஓடிப்போய் கல்யாணம் பண்ணினதா மட்டும் தான சொன்னீரு.. கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு மாசம் ஆகல அதுக்குள்ள என்னவோய் சண்ட//

பத்த வச்சுட்டியே பரட்டை!!

Prem S சொன்னது…

உங்களுக்குள்ள ஏதோ இருக்கு பாஸ் எங்கையோ டச் பண்ணிட்டு போங்க கலக்கல்

Seeni சொன்னது…

mmmmm...

Philosophy Prabhakaran சொன்னது…

// வழக்கத்துக்கு மாறாய்
இரண்டு மணிநேரத்துக்கும்
மேலாக நீள்கிறது!
மௌனப் பேச்சு! //

கண்களில் நீர் தழும்பிவிட்டது...

கார்த்திக் சரவணன் சொன்னது…

யாராவது ஒருத்தர் ஈகோ பாக்காம விட்டுக்கொடுங்க...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மௌப் பேச்சு அருமை
விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விட்டு கொடுத்தாலே பிரசினை ஓவர்....

வெளங்காதவன்™ சொன்னது…

//Philosophy Prabhakaran சொன்னது…

// வழக்கத்துக்கு மாறாய்
இரண்டு மணிநேரத்துக்கும்
மேலாக நீள்கிறது!
மௌனப் பேச்சு! //

கண்களில் நீர் தழும்பிவிட்டது...
///

ஏம்டேய்... அடி ரெம்ப பலமோ?

Unknown சொன்னது…

ஒவ்வொரு சண்டையிலும் நிச்சயம் பெற்றவர்களின் நினைவு வந்துதான் போகும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விட்டுக் கொடுப்பதில் மகிழ்ச்சி என்றாலும் பெண்கள்தான் முதலில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது கொஞ்சம் நெருடல்தான்! சிறப்பான படைப்பு! நன்றி!

ரூபக் ராம் சொன்னது…

//அவன் மௌனத்தை கலைக்க
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !// மனதில் பதிந்த வரி

வெற்றிவேல் சொன்னது…

யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தலே நலம்...

அழகான கவிதை...

அருணா செல்வம் சொன்னது…

“இத்தனை நெருக்கத்தில்
இவன் சும்மாய் இருந்ததில்லை
என்னிடம்! அசையாமல்
படுத்திருக்கிறான்
விசிறியை வெறித்தபடி!“

ம்ம்ம்.... ஆம்பளைக்கே உள்ள திமிரை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் அரசன்.

arasan சொன்னது…

ezhil கூறியது...
என்ன செய்வது எங்காவது ஒரு விட்டுக்கொடுத்தல் தேவைப்படுகிறது... அவனின் பிடிவாதங்களும் அங்கீகரிக்கப்பட்டதாலேயே அந்த மௌனம்//

உண்மைதான் மேடம் ...

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மௌனம் நல்லது...//

கண்டிப்பாக மௌனம் நல்லது தான் சார் ...ஆனால்
எல்லா இடங்களிலும் மௌனம் நல்லதல்ல சார்

arasan சொன்னது…

கிரேஸ் கூறியது...
எப்பொழுதும் பிடிவாதம் வெற்றி பெறுவதில்லையே...//

தற்காலிகமாக சில இடங்களில் வெற்றி பெற்று தொலைக்கிறது

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
பிடிவாதம் மட்டுமே இருந்தால் நிம்மதி இல்லை.//

பிடிவாதமும் தேவையாய் இருக்கிறது அது பொருத்தமான செயலுக்கு மட்டுமே சார்

arasan சொன்னது…

எவ்வளவோ சொன்னது யார்? நான் அந்தப் பெண் என்று நினைத்து விட்டேன்.//

சொன்னது அந்தப் பெண் தான் சார் ...

அட! என்று சொல்லவைக்கும் வரிகள் //

நன்றிங்க சார்

arasan சொன்னது…

என் ராஜபாட்டை - ராஜா கூறியது...
// அவன் மௌனத்தை கலைக்க
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !
அவன் சிரித்தான்//

நிஜ வாழ்விலும் இப்படிதான் நடக்கும்.//

நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

சீனு கூறியது...
யோவ் ராசா ஓடிப்போய் கல்யாணம் பண்ணினதா மட்டும் தான சொன்னீரு.. கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு மாசம் ஆகல அதுக்குள்ள என்னவோய் சண்ட//

ஏன்யா இப்படி கெளப்பி விடுறீர் ..

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
மவுனப் பேச்சு....அருமை அரசா.....//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

கோவை ஆவி கூறியது...
//யோவ் ராசா ஓடிப்போய் கல்யாணம் பண்ணினதா மட்டும் தான சொன்னீரு.. கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு மாசம் ஆகல அதுக்குள்ள என்னவோய் சண்ட//

பத்த வச்சுட்டியே பரட்டை!!//

அந்த ஆள் எப்பவுமே இப்படித்தான் பாஸ் ...

arasan சொன்னது…

Prem s கூறியது...
உங்களுக்குள்ள ஏதோ இருக்கு பாஸ் எங்கையோ டச் பண்ணிட்டு போங்க கலக்கல்//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Seeni கூறியது...
mmmmm...//

நண்பா நன்றி

arasan சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...
// வழக்கத்துக்கு மாறாய்
இரண்டு மணிநேரத்துக்கும்
மேலாக நீள்கிறது!
மௌனப் பேச்சு! //

கண்களில் நீர் தழும்பிவிட்டது...//

யோவ் பிரபா அடிக்கிறதுன்னா எம்புட்டு வேணும்னாலும் அடிய்யா ... ஏன் இப்படி ?

arasan சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
யாராவது ஒருத்தர் ஈகோ பாக்காம விட்டுக்கொடுங்க...//

விட்டுக்கொடுத்துருவோம்

arasan சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் கூறியது...
மௌப் பேச்சு அருமை
விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
விட்டு கொடுத்தாலே பிரசினை ஓவர்....//

உண்மைதான் அண்ணே

arasan சொன்னது…


பிளாகர் வெளங்காதவன்™ கூறியது...
//Philosophy Prabhakaran சொன்னது…//

நீங்களுமா பிரதர் .?

arasan சொன்னது…

JJ Lavanya கூறியது...
ஒவ்வொரு சண்டையிலும் நிச்சயம் பெற்றவர்களின் நினைவு வந்துதான் போகும்.//

உண்மைதான் மேடம்

arasan சொன்னது…

s suresh கூறியது...
விட்டுக் கொடுப்பதில் மகிழ்ச்சி என்றாலும் பெண்கள்தான் முதலில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது கொஞ்சம் நெருடல்தான்! சிறப்பான படைப்பு! நன்றி!//

பெண்கள் மட்டும் என்று நான் சொல்லவில்லை அண்ணே .. பெண்களும் என்று தான் சொல்கிறேன்

arasan சொன்னது…

ரூபக் ராம் கூறியது...
//அவன் மௌனத்தை கலைக்க
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !// மனதில் பதிந்த வரி//

நன்றி ரூபக்

arasan சொன்னது…

வெற்றிவேல் கூறியது...
யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தலே நலம்...//

நன்றி வெற்றி

arasan சொன்னது…

பிளாகர் அருணா செல்வம் கூறியது...
“இத்தனை நெருக்கத்தில்
இவன் சும்மாய் இருந்ததில்லை
என்னிடம்! அசையாமல்
படுத்திருக்கிறான்
விசிறியை வெறித்தபடி!“

ம்ம்ம்.... ஆம்பளைக்கே உள்ள திமிரை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் அரசன்.//

நன்றிங்க மேடம்