சன்னக் குரலில் அலைபேசியில்
காதல் பேசுகிறாள்
மல்லிகை சூடிய
முன்னிருக்கை மங்கை!
மடியில் இரண்டை வைத்துக்கொண்டு
இளமை கொண்டாடுகிறது
வலப்பக்க
இருக்கை சோடிகள்!
சிணுங்கலின் சத்தம் சொல்கிறது
பின்னிருக்கை நிகழ்வை!
தடதடத்துக் கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவின் பேருந்து பயணத்தில்,
வேகங்கொண்ட மட்டும்
ஓடிய
என் சிந்தனை குதிரைகளுக்கு
இப்போது
மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது!
Tweet |
7 கருத்துரைகள்..:
அருமையா இருக்கு அரசன். வரிகளை காட்சிபடுத்தியிருக்கும் நிகழ்வை ரசித்தேன்
இதெல்லாம் பொறாமை, பொசுங்கலின் வெளிப்பாடு!!
ஆகா
தம + 1
பேருந்து பயணங்கள் - அதுவும் இரவில்.....
பார்த்தவையும் கேட்டவையும் கவிதையாக....
ரசித்தேன் அரசன்.
சிணுங்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது! அரசன்....அருமை....ரசித்தோம்! எவ்வளவு அருமையாக எழுதுகின்றீர்கள்!
சிணுங்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது! அரசன்....அருமை....ரசித்தோம்! எவ்வளவு அருமையாக எழுதுகின்றீர்கள்!
கருத்துரையிடுக