புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 07, 2014

அஞ்சலை - கண்மணி குணசேகரன்




சென்ற ஆண்டு நடைபெற்ற பதிவர் சந்திப்பின் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராகத்தான் அண்ணன் கண்மணி அவர்களின் அறிமுகம் கிட்டியது. மண் சார்ந்த படைப்பாளி என்று உருவத்தை வைத்தே கணித்துவிடுமளவிற்கு எளிமையான மனிதர். அன்றைய உரையில் எந்த குறிப்புகளுமின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேல் இனிமையான உரையாற்றிய பின் இவரின் மேல் கூடுதல் ப்ரியம் உண்டானது என்னுள்! வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வியலை நேர்த்தியாக பதிவு செய்வதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே!

வாசித்து முடித்த அடுத்த சில நாட்களில் எல்லாம் பல நூல்களை மறந்திருக்கிறேன். ஆனால் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் "அஞ்சலை" என்னும் நாவலை வாசித்து ஆறுமாதம் ஆகியும் இன்னும் அதன் தாக்கம் மனதின் ஓரத்தில் வேர் கொண்டுள்ளது. எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது என்பது தனிக்கதை! 

கற்பனைகளை தவிர்த்த நிதர்சனத்தின் பதிவு என்று அஞ்சலை என்னும் நாவலை நான் சொல்வேன். அஞ்சலை என்னும் பெண்ணை கொண்டு, அவளை சுற்றி நிகழும் வாழ்வியல் சூழலை மிக நுட்பமாய், எழுத்தில் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதை அண்ணன் தனக்கே உரிய நடையில் எழுதி, வென்றிருக்கிறார் என்பதை எண்ணி இன்னும் வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது!

குறிப்பாக அஞ்சலை நெல் கட்டு சுமந்து வருவதையும், அவள் தாளடிக்கும் முறையையும், அவளை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தி களத்து மேட்டுக்கு வந்த பின் அவளின் வெட்கத்தையும், மன தவிப்பையும் படித்துக் கொண்டிருக்கையில், காட்சியாக கண் முன் வந்து போகிறது. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் காட்சியாக வருவதை படித்தவர்கள் உணர்ந்திருப்பர்.

திருமணம் என்ற பெயரில் பெண் ஒருத்தி ஏமாற்ற பட்டு, அதன்பின் அவளின் இன்னல் சூழ் வாழ்வினை மிக அழுத்தமாய் பேசியிருக்கும் இந்த நாவலில் கற்றுக் கொள்ள ஏகப்பட்ட விடயங்கள் பொதிந்துள்ளன. நான் கண்ட, வாழ்ந்த கிராமத்து வாழ்வினை எழுத்தாய் வாசிக்கையில் கூடுதல் சுகம் சேர்கிறது!

எங்கேனும், யாரேனும் அஞ்சலை என்று அழைத்தால், மின்னல் மணித்துளிகளில் இந்நூலின் ஆணி வேரான நாயகி அஞ்சலை சட்டென்று வந்து போகிறாள் என்னுள். இதுதான் எழுத்துக்கும், எழுத்தாளனுக்கும் கிடைக்கும் வெற்றியென கருதுகிறேன்....

இன்னும் இன்னும் சொல்லப்படாமல் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வாழ்வுகளையும், அதை வாழ்ந்த மனிதர்களையும் எழுத்தில் கொண்டு வருமாறு அண்ணன் கண்மணி குணசேகரன் அவர்களை வேண்டிக் கொள்கிறேன். 

தமிழினி பதிப்பகத்தின் வாயிலாக வந்திருக்கும் இந்நூல் வாழ்க்கையில் தவற விடக்கூடாத நூல், வாசித்துப் பாருங்கள் தோழமைகளே!

ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்குங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ்         


Post Comment

6 கருத்துரைகள்..:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

புதிய ஒரு அறிமுகம்! நல்ல அழகான, மிகவும் ரசித்து எழுதப்பட்ட விமர்சனம். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றது!

பகிர்வுக்கு மிக்க நன்றி! அரசன்!

பால கணேஷ் சொன்னது…

கண்மணி குணசேகரனின் எழுத்தை நேரில் சந்தித்த போது நீ சொல்லிய விதத்திலேயே படிக்கணும்னு நெனச்சிருந்தேன். அஞ்சலையப் பத்தி இப்ப நீ எழுதியிருக்கறது இன்னும் ஆவலைத் தூண்டி விட்டுட்டது. பார்க்கறேன். (ஆனாலும் இதை வாசகர்கூடத்துல எழுதாம இங்க வெளியிட்டதுக்காக என் ஆழ்ந்த அனு... ச்சே, கண்டனங்கள்!)

ராஜி சொன்னது…

படிக்கும் ஆவலை தூண்டி விட்டாய் அரசா! சீகிரம் வாங்கி படிக்குறேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே
தம + 1

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான ஒரு நாவலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல புத்தகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி அரசன்.