புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 04, 2014

"மருதாணி வீடு"...குடைந்தெடுத்த கற்கோயில்
போல கம்பீரமாய் வீடு,
சத்தம் கூட புகா வண்ணம்,
சரளைக்கல் சுற்றுச் சுவர்!


அந்த வீட்டை தவிர்த்து
ஊருக்குள் வழி சொல்வது கடினம்!


அங்குள்ள தென்னைகளுக்கு
நூறுக்கு மேலிருக்கும்
வயசு,
என்பார் "சுருட்டை" மெல்லும்
கருப்பு மாமா!


கடைசியாக அவ்வீட்டை
கடக்கையில்,
நான்காம் தலைமுறையின்
பேரக்குழந்தைகள் விளையாடுவதை
வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது
அவ்வீட்டின் முற்றம்!


அறுபதடுக்கு மிடுக்கைத் தாண்டியும்
அவ்வப்போது வந்து போகும்
அந்த "மருதாணி" வீடு 
அயலகத்தின் தனிமை இரவுகளில்!


மூன்று வருடம் கழிந்து 
ஊர் திரும்புகையில் 
அவ்விடம் வந்ததும் 
அனிச்சையாய் தலை திரும்ப 
அதிர்ச்சியாய் இருக்கிறது,


அவ்வீட்டைக் கொன்று
இரண்டடுக்கில் சமாதியொன்றெழுப்பி,
"இன்பகமென்று" 
பெயர் சூட்டியிருக்கிறார்கள்!....  
Post Comment

7 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


சமாதிக்குப் பெயர் இன்பகமா ?

ezhil சொன்னது…

எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி ஓர் மருதாணி வீடுண்டு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிர்ச்சியே...

Mathu S சொன்னது…

த ம மூன்று

Mathu S சொன்னது…

இன்பகம் தந்த துன்பம்...
அதிர்ச்சிதான்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அதிர்ச்சிதான்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மருதாணி வீடு.....

நல்ல பெயர் அரசன்.

இரண்டடுக்கு ச்மாதி.... :(