நண்பர் திரு. ஆர் வி சரவணன் இயக்க, ஆவியும், நானும் நடித்த "சில நொடி சிநேகம்" குறும்பட ஷூட்டிங்கில் தான் திரு. துளசிதரன் அவர்களை முதன்முதலில் சந்தித்தேன். அவரின் இயல்பான பேச்சு, எளிதில் அவரோடு ஒன்றிவிடலாம். துளசி சார் தேர்ந்த "கதைசொல்லி" என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவர், என்னைப்பொறுத்தவரை அவரொரு தேர்ந்த நடிகர், பிறகுதான் கதை சொல்லி மற்ற எல்லாமும் என்பேன்! புதிய நபர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதில் சிலவற்றை இவரிடமிருந்து சிலவற்றை கற்றிருக்கிறேன்.
ஆசிரியர் என்பதாலோ என்னவோ ரொம்ப எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை இருக்கிறது. இந்த வசனத்தை இப்படித்தான் சொல்லவேண்டும், இந்தக் காட்சிக்கு இப்படித்தான் முகபாவனை இருக்கவேண்டும் என்று மிகவும் நாசூக்காக சொல்லி தருவதில் வல்லவர் என்று சொல்லலாம்! கும்பகோண பேருந்து நிலையத்தில் மிகுந்த படபடப்புடன் இருந்த என்னை, அமைதிப் படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த பெரிதும் உதவியதும் இவரே! அடுத்து திரு. ஆவி அவர்கள் இயக்கிய "காதல் போயின் காதல்" என்ற குறும்பட ஷூட்டிங் தினத்தன்று சற்று அதிகமாக பேசி மகிழ நேரம் கிடைத்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன்!
வருடம் ஒரு குறும்படம் என்ற கொள்கையில் இந்த வருடம் இயக்கியிருக்கும் படம் "Poet the Great". நண்பர்களையும், சக பதிவர்களையும் நடிக்க வைத்து எடுத்திருக்கிறார், இதில் எனக்கொரு வாய்ப்பும் தருவதாக சொன்னார், என்னால் தான் இம்முறை கலந்து கொள்ள இயலாமல் போனது (மன்னிக்கவும் சார், நிச்சயம் அடுத்த படைப்பில் இணைந்து கொள்கிறேன்).
"Poet the Great"
வரலாறுகளை பெரும்படமாக பண்ணுவது என்பதே வெகு சிரமம், அதை குறும்படமாக சுருக்கி பண்ணுவதின் கஷ்டம் நாமறிந்ததே, அந்த வகையில் இந்த முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பெரிய அனுபவம் இல்லாதவர்களை கொண்டு ஓரளவிற்கு நேர்த்தியான படைப்பாக்கியதில் தெரிகிறது இவரின் அனுபவம். புதிய நடிகர்கள், சின்ன சின்ன தொழில் நுட்ப குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் முழுமையான படைப்பு தான். மேலும் அடுத்தடுத்த படைப்புக்களில் இன்னும் சற்று சிரத்தை எடுத்து தரமான படைப்பாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்! எங்களின் எல்லா முயற்சிகளிலும் "பில்லராக" இருக்கும் கீதா ரங்கன் அவர்கள் இந்தப் படத்தின் ஆணி வேர் மட்டுமல்ல நடிக்கவும் செய்திருப்பது நிறைவைத் தருகிறது!
வரலாறுகளை பெரும்படமாக பண்ணுவது என்பதே வெகு சிரமம், அதை குறும்படமாக சுருக்கி பண்ணுவதின் கஷ்டம் நாமறிந்ததே, அந்த வகையில் இந்த முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பெரிய அனுபவம் இல்லாதவர்களை கொண்டு ஓரளவிற்கு நேர்த்தியான படைப்பாக்கியதில் தெரிகிறது இவரின் அனுபவம். புதிய நடிகர்கள், சின்ன சின்ன தொழில் நுட்ப குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் முழுமையான படைப்பு தான். மேலும் அடுத்தடுத்த படைப்புக்களில் இன்னும் சற்று சிரத்தை எடுத்து தரமான படைப்பாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்! எங்களின் எல்லா முயற்சிகளிலும் "பில்லராக" இருக்கும் கீதா ரங்கன் அவர்கள் இந்தப் படத்தின் ஆணி வேர் மட்டுமல்ல நடிக்கவும் செய்திருப்பது நிறைவைத் தருகிறது!
மிகச் சிறந்த உடல்மொழியும், வசன உச்சரிப்பகளுமாய் படத்தின் முதுகெலும்பாகிய எங்கள் தலைவர் திரு. துளசி அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக் கொள்கிறேன்!
படத்தினை நீங்களும் பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிருங்கள், அடுத்தடுத்த படைப்புகளுக்கு உதவியாக இருக்கும்!
இப்படத்தில் நடித்திருக்கும் எங்களின் வாத்தியார் பாலகணேஷ் அவர்களுக்கும், திரு. R V சரவணன் அவர்களுக்கும், கலைப்பெட்டகம் திரு. ஆவி அவர்களுக்கும், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
லிங்க்:
Part - 1
Part - 2
Tweet |
13 கருத்துரைகள்..:
Have to watch and share my review
வணக்கம், துளசி அய்யா அவர்களின் குறும்படத்தை தாங்கள் சொன்ன விதம் அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
இந்த முறை பங்கு கொள்ள முடியவில்லை... அடுத்த முறை நாம் இருவரும்...
அரசன் முதலில் உங்களுக்கு எங்கள் இருவரின் நன்றிகள் பல! படத்தைப் பற்றி நேர்மையான விமர்சனம் சொல்லியமைக்கு. இன்னும் சற்று நேர்மையாக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.....சொல்ல வந்தது சில மறைவில் இருப்பது போல ஒரு எண்ணம் எழுகிறது....நீங்கள் சொல்லி இருக்கும் குறைகளை நிச்சயமாக மனதில் கொண்டு அடுத்த முறை அவை எழாமல் செய்கின்றோம். வலைத்தள நண்பர்கள் உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு, கருத்து, நட்பு எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது என்றால் மிகையல்ல.....
மீண்டும் மிக்க மிக்க நன்றி அரசன்!
கீதா: ஹா ஹஹ துளசியைப் பற்றி மிக அழகான துல்லியமான ஜட்ஜ்மென்ட். அத்தனையும் மிகச் சரியே. மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.....நண்பரைப் பெருமைப் படுத்திச் சொல்லியதற்கு.
ம்ம்ம்ம்ம் என்னைப் பற்றித்தான் மிகைப்படுத்தியதாகத் தோன்றுகின்றது அரசன். ரொம்பவே.... உண்மையாக நான் எதுவும் செய்யவில்லை. நம் குழுவிலும் கூட. இப்படி எல்லாம் புகழ்ந்தால் மிகவும் கூச்சமாக இருக்கிறது சத்தியமாய்....
ஐயோ அரசன் இந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை...ஹஹஹஹ சும்மா நின்றேன் வாயசைத்தேன் அவ்வளவுதான்..அதுவும் துளசியின் வற்புறுத்தலால்...
..மிக்க நன்றி அரசன்...!
ஆவி கலைப்பெட்டகம் தான் சந்தேகமே இல்லை....
வணக்கம் அரசன்,
துளசி அய்யா பற்றிய விரிவான அறிமுகத்திற்கு நன்றிகள்.
இந்தப் பயணம் தொடரவேண்டும்.
குழுவினரின் பெயர் குறும்பட வரலாற்றில் பதிவாக வேண்டும் ..
அனைவர்க்கும் இதயப்பூர்வ வாழ்த்துக்கள்
தம +
குறும்படம் முதல் பகுதி பார்த்தேன். துளசிதரன் அவர்களின் நடிப்பு அட்டகாசம். அதுவும் கொலை செய்ய தூண்டும் வசனங்களில் பின்னி எடுக்கிறார்.
குறும்பட குழுவிற்கு வாழ்த்துகள்
வேலூர் புத்தக விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சியுற்றேன்
இன்னும் பார்க்கவில்லை அரசன். திருச்சியில் இணையத் தொடர்பு படுத்துகிறது! :( தில்லி திரும்பியதும் பார்க்கிறேன்.
இணைய வேகம் குறைவாக இருப்பதால் உடனடியாக பார்க்க முடியவில்லை! பகிர்வுக்கு நன்றி! பார்த்து கருத்திடுகின்றேன்! நன்றி!
நானும் பார்த்தேன்...
சின்னக் குறைகள் இருந்தாலும் வரலாற்றை படமாக்கும் முயற்சிக்கு துளசி சாருக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
குறும்படம் பார்த்தேன் சகோ. பெரும் முயற்சி, நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்!
படத்தில் ஒருவரை நீங்களோ என்று ஒரு நொடி நினைத்துப் பின் இல்லை என்று நினைத்தேன். உங்கள் பதிவைப் பார்த்தவுடன் நீங்கள் தானோ என்ற ஐயத்தில் வந்தேன் :)
அடுத்த படத்தில் உங்களையும் DD அண்ணாவையும் பார்க்கலாம் என்பதறிந்து மகிழ்ச்சி
பகிர்வுக்கு நன்றி அரசன் நீங்களும் இதில் பங்ககேற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
கருத்துரையிடுக