புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 15, 2011

வரலாறாகும் வாழ்வு...


சாமத்துல உறங்கி 
சேவலுக்கு முந்தி 
முழிச்சி, கட்ட 
வெளக்கமாரால கட்டுத்தறிய 
சுத்தமாக்கி, குளிச்சி முடிச்சி 
ரெண்டுவேளைக்கும் 
கஞ்சி காய்ச்சி!
மிச்சம் வைச்ச 
சாணத்த கரைச்சி 
வீதியில தெளிச்சி 
பெருக்கி கோலமிட்டு,
பறிச்ச ஒத்த
பரங்கிப்பூவ, கொழைச்ச 
சாணியில, கோலமத்தியில
குலுங்காம வைச்சி 
நிமிர்ந்து பார்க்கையில,
இவளுக்கு முந்தி 
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!  
இப்படி வரலாறா வாழ்ந்த நிலை,
இன்னைக்கு சரத்துல 
சொருகி வைச்ச 
பழைய கடுதாசியா
கிழிஞ்சி தொங்குது 
எச்சமும், மிச்சமுமா!
பாழும் இந்த 
செயற்கை மோகத்தால!?


Post Comment

47 கருத்துரைகள்..:

Thozhirkalam Channel சொன்னது…

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நம் பாரம்பரியங்களை மறந்து வருகிறோம்...

மார்கழி பிறக்க போகிறது இப்போவதாது வாசலில் வசந்தம் வீசுகிறதா பார்ப்போ்ம்...

கோவி சொன்னது…

சரியா சொன்னீங்க..

Admin சொன்னது…

ஆதங்கம் தெரிகிறது என்ன செய்வது?

அம்பாளடியாள் சொன்னது…

அருமை!..உண்மையை மிக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் சகோ .வாழ்த்துக்கள் மென்மேலும் எம் சமூகத்தில் நிகழும் அலங்கோலத்தை வர்ணிக்கும் கவிதை வரிகள் தொடரட்டும் .மிக்க நன்றி அழகிய பகிர்வுக்கு .

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 4

Prem S சொன்னது…

//இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!//அருமை அன்பரே

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆதங்கம் நியாயமானதே
அதைச் சொல்லிச் சென்றவிதமும் அருமை அருமையே
தொடர வாழ்த்துக்கள்

அனுஷ்யா சொன்னது…

இனிமேல் கிராமங்களிலும் இவ்வாழ்க்கை காண கிடைப்பது அரிதே...மனமுருக்கிய வரிகள்..நன்றி தோழரே...

அனுஷ்யா சொன்னது…

இன்று என் வலையில்...அவள் அதுவாம்...!...

kalai சொன்னது…

அப்புடிலாம் சொல்லப்பிடாது ....
நாங்கலாம் இன்னும் கோலம் போட்டு கொண்டு தான் இருக்கோம் ....

கவிதை சுபெர்ப் ...

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை நண்பா

மகேந்திரன் சொன்னது…

///இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,////


அருமையான வார்த்தைகள் நண்பரே,
இதெல்லாம் இன்று கண்ணால் கூட காண முடிவதில்லை.

வைகறைப் பொழுதினில்
குளிச்ச சடைபோட்டு
வெள்ளிச் சலங்கைகள் ஒலிக்க
மாக்கோலமிடும் நங்கைகள்
நலிந்து போயினர்...

செயற்கைகளும்
பாழாய்ப் போன நாகரீகமும்
பொத்திவைத்த பண்பாட்டை
நாசப் படுத்தி விட்டனவே..

அழகான நெஞ்சை நிறைக்கும்
ஆதங்கக் கவிதை.

*anishj* சொன்னது…

இப்போ எல்லாம் சாணி தெளிச்சு கோலம் போடுறதை பாக்குறது ரொம்ப கஷ்டம்னு நினைக்குறேன்.. கிராமங்களில் கூட......

வரிகளில் எதார்த்ததுடன், கிராமத்தும் மணமும் சேர்ந்து தவழ்கிறது... அழகாய்... ஒரு அழகிய கோலம் போல...

வாழ்த்துகள்...!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாம பாரம்பரியங்களை இழந்து பலகாலமாச்சு, அருமையான கவிதை....!

thendralsaravanan சொன்னது…

என் இள வயது பள்ளி செல்லும் காலங்களில் நீங்கள் கூறியது போல் இனிமையான வரலாறு கூறும் வாழ்க்கை வாழ்ந்துள்ளோம் என்பதே இனிக்கிறது!
ஆனால் நகரத்தில் வாழும் வாழ்க்கை உண்மையிலேயே இனிமையைத் தொலைத்த நரக வாழ்க்கை!
என் செய்ய!

ஹேமா சொன்னது…

ஊரிலிருக்கும்வரை நானே முற்றத்தில் கோலம் போட்டிருக்கிறேன்.ஞாபகங்களைக் கிளறிவிட்டிருக்கிறீர்கள் அரசன் !

சத்ரியன் சொன்னது…

நாகரீக மோகத்தால் நல்லவைகளையும் இழந்து விக்கித்து நிற்கும் வாழவை அழகாக பதிவு செய்து போகிறது கவிதை.

பாராட்டுக்கள் அரசன்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

கோலங்களின் ஆதங்கம் அருமை அரசன்.
மாறிவரும் காலங்களில் மாறிப்போகும் பழமைகளும்..

r.v.saravanan சொன்னது…

இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!

அருமை அரசன் வாழ்த்துக்கள்

ஆதங்கம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது காலம் செய்த மாயம் இது

M.R சொன்னது…

ஆதங்கம் தான் நண்பரே

பெயரில்லா சொன்னது…

சாணி தெளித்துக் கோலம் போடுவதைச் சொல்லவே உடல் சிலிர்க்கிறது. 25 வருடத்திற்கும் மேலாச்சு. பழமை மெல்ல மெல்லத் தேய்கிறது தான். நன்றாகக் கூறப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

arasan சொன்னது…

Cpede News கூறியது...
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...//

வருகிறேன் நண்பரே

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நம் பாரம்பரியங்களை மறந்து வருகிறோம்...

மார்கழி பிறக்க போகிறது இப்போவதாது வாசலில் வசந்தம் வீசுகிறதா பார்ப்போ்ம்...//

ஏக்கத்துடன் காத்திருப்போம் கவிஞரே ..
வாழ்த்துக்கு நன்றி

arasan சொன்னது…

கோவி கூறியது...
சரியா சொன்னீங்க..//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
ஆதங்கம் தெரிகிறது என்ன செய்வது?//

ஆம் உள்ளத்தின் ஆதங்கம்... என்ன பண்றதுங்க நண்பரே ...
மாறுமா ...?

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
அருமை!..உண்மையை மிக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் சகோ .வாழ்த்துக்கள் மென்மேலும் எம் சமூகத்தில் நிகழும் அலங்கோலத்தை வர்ணிக்கும் கவிதை வரிகள் தொடரட்டும் .மிக்க நன்றி அழகிய பகிர்வுக்கு .//

அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் , வாக்குக்கும் , கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
//இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!//அருமை அன்பரே//

அன்புக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Ramani கூறியது...
ஆதங்கம் நியாயமானதே
அதைச் சொல்லிச் சென்றவிதமும் அருமை அருமையே
தொடர வாழ்த்துக்கள்//

நிறைவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
இனிமேல் கிராமங்களிலும் இவ்வாழ்க்கை காண கிடைப்பது அரிதே...மனமுருக்கிய வரிகள்..நன்றி தோழரே...//

அங்கும் நிலைமை மிக மோசம் ...அன்பரே ...
சூழல் மாறுமா என்ற ஏக்கம்தான் ... அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

kalai கூறியது...
அப்புடிலாம் சொல்லப்பிடாது ....
நாங்கலாம் இன்னும் கோலம் போட்டு கொண்டு தான் இருக்கோம் ....

கவிதை சுபெர்ப் ...//

கலை ... நீங்க ஒருத்தர் அப்படி இருந்தா போதுமா ..
அனைவரும் அப்படிதானே இருக்கணும்,...
நம் முகத்தை மறைக்கும் வேறு ஒருவரின் முகமூடி
எதற்கு என்றுதான் நான் கேட்க வருவது ...

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அருமையான கவிதை நண்பா//

மிக்க நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
///இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,////


அருமையான வார்த்தைகள் நண்பரே,
இதெல்லாம் இன்று கண்ணால் கூட காண முடிவதில்லை.

வைகறைப் பொழுதினில்
குளிச்ச சடைபோட்டு
வெள்ளிச் சலங்கைகள் ஒலிக்க
மாக்கோலமிடும் நங்கைகள்
நலிந்து போயினர்...

செயற்கைகளும்
பாழாய்ப் போன நாகரீகமும்
பொத்திவைத்த பண்பாட்டை
நாசப் படுத்தி விட்டனவே..

அழகான நெஞ்சை நிறைக்கும்
ஆதங்கக் கவிதை.//

அன்பின் நண்பருக்கு
நெஞ்சில் நித்தம் கொதிக்கும்
சில ஆதங்களை வரிகளாய்
தொடுக்க நினைத்து
இந்த வரிகளை கோர்த்தேன் ..
இப்படி எத்தனையோ
நிகழ்வுகளை , செயல்களை
நாம் மறந்தோம் , மறைத்தோம்..
எல்லாமே இந்த நாகரிக மோகம்தானே காரணம் அன்பரே ...
என்ன பண்ணுவது இந்த மக்களை ...
அன்பின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள ..

arasan சொன்னது…

*anishj* கூறியது...
இப்போ எல்லாம் சாணி தெளிச்சு கோலம் போடுறதை பாக்குறது ரொம்ப கஷ்டம்னு நினைக்குறேன்.. கிராமங்களில் கூட......

வரிகளில் எதார்த்ததுடன், கிராமத்தும் மணமும் சேர்ந்து தவழ்கிறது... அழகாய்... ஒரு அழகிய கோலம் போல...

வாழ்த்துகள்...!!//

மிக்க நன்றிங்க தல...
கிராமத்திலும் எங்கு பார்த்தாலும் ஓட்டும் கோலங்களும் , ஒவ்வாத செயற்கையும்
வந்துவிட்டது ... என்ன பண்ணுவது ...

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
நாம பாரம்பரியங்களை இழந்து பலகாலமாச்சு, அருமையான கவிதை....!//


அண்ணே வணக்கம் ..
ஆம் அண்ணே .. இழந்து பலம் காலம் ஆச்சு ..

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
என் இள வயது பள்ளி செல்லும் காலங்களில் நீங்கள் கூறியது போல் இனிமையான வரலாறு கூறும் வாழ்க்கை வாழ்ந்துள்ளோம் என்பதே இனிக்கிறது!
ஆனால் நகரத்தில் வாழும் வாழ்க்கை உண்மையிலேயே இனிமையைத் தொலைத்த நரக வாழ்க்கை!
என் செய்ய!//

நம் காலத்திலே இந்த நிகழ்வுகளை வரலாற்றில் ஏற்றி விட்ட கொடுமை இங்குதான் அக்கா..
வரும் காலத்தில் அது மறைந்தும் போகும் ...
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
ஊரிலிருக்கும்வரை நானே முற்றத்தில் கோலம் போட்டிருக்கிறேன்.ஞாபகங்களைக் கிளறிவிட்டிருக்கிறீர்கள் அரசன் !//

அக்கா வணக்கம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
நாகரீக மோகத்தால் நல்லவைகளையும் இழந்து விக்கித்து நிற்கும் வாழவை அழகாக பதிவு செய்து போகிறது கவிதை.

பாராட்டுக்கள் அரசன்.//

அன்பின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
கோலங்களின் ஆதங்கம் அருமை அரசன்.
மாறிவரும் காலங்களில் மாறிப்போகும் பழமைகளும்..//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க மேடம் ..

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இவளுக்கு முந்தி
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!

அருமை அரசன் வாழ்த்துக்கள்

ஆதங்கம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது காலம் செய்த மாயம் இது//

ஆம் சார் ... காலத்தின் கட்டாயம் இங்கு தமிழனின் நிலை படு கேவலம்..
மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

M.R கூறியது...
ஆதங்கம் தான் நண்பரே//

மிக்க நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

kovaikkavi கூறியது...
சாணி தெளித்துக் கோலம் போடுவதைச் சொல்லவே உடல் சிலிர்க்கிறது. 25 வருடத்திற்கும் மேலாச்சு. பழமை மெல்ல மெல்லத் தேய்கிறது தான். நன்றாகக் கூறப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.//

அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள சகோ ...

சசிகலா சொன்னது…

என்னைப்போல பிறந்த ஊரை ரசிப்பவர் போல
மண்வாசனை உங்கள் வரிகளில் .

உஷா அன்பரசு சொன்னது…

இயல்பு தொலைத்து ஒப்பனை வாழ்க்கைக்கு பழக்க பட்டு விட்டது உலகம்

aavee சொன்னது…

கவுத உங்களுது தானா? நல்லாயிருக்கே அதனால கேட்டேன்..

வெற்றிவேல் சொன்னது…

மாறிப்போன கலாச்சாரம்... அழகான கவிதை...

சாணத்த கரைச்சி போட்டதுக்கு பிறகுதான் சாப்பாடு எல்லாம் செய்வாங்க... முதல் வேலையே சானத்த கரைச்சி போடுறதுதான்... மாத்தி எழுதியிருக்கீங்க....

'பரிவை' சே.குமார் சொன்னது…

கிராமத்து வாசனை வீசும் அருமையான கவிதை...

காலையில் எழுந்ததும் சாணி தெளித்து கோலமிட்டபின்புதான் அடுப்பே பற்ற வைப்பார்கள்...

அந்தக் கிராமத்து வாழ்க்கைவிட்டு கோலம் கூட போடாத ஒரு நாட்டில் வாழ்க்கையாகிப் போனதுதான் விதி...

கவிதை அருமை...