புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 23, 2011

இந்த வருடத்தில் நான்....! (தொடர்பதிவு)



படித்ததில் பிடித்தது ?

நிறைய படித்தேன்... நெஞ்சில் அதிகம் ஒட்டியது சுஜாதா அவர்களின் எப்போதும் பெண் என்ற புத்தகம் தான்... அத்தனை நுணுக்கம் .. 

வாங்கிய பொருள் ?

நீண்ட நாள் நான் தேடி தேடிக்கொண்டிருந்த ஒரு கைக்கடிகாரம். திடிரென ஒரு எதிர்பாராமல் ஒரு கடையில் பார்த்தேன் வாங்கிவிட்டேன். வாங்கிய மூன்றாவது வாரம் என்கையை விட்டு பிரிந்து விட்டது... (ம்ம்ம் நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் )

சென்ற இடம் ?

இந்த வருடத்தில் நான் இரண்டு முறை திருப்பதி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை நண்பர்கள் நான்கு பேர் செல்லலாம் என்று முன்கூட்டியே இணையத்தில் பதிவு செய்து இறுதியில் நானும் இன்னொரு நண்பனும் செல்லும்படி ஆனது ... இருந்தாலும் சிறப்பான பயணம் தான் ... 
மற்றொருமுறை நானும் என் தோழனும் சென்று வந்தோம் .. இரண்டுமே இந்த வருடத்தில் மறக்க இயலா பசுமை நினைவுகள் ...

இரசித்த திரைப்படம் ?

எங்கேயும் எப்போதும் 
ஆரண்ய காண்டம்...
ஆடுகளம் 

உருகிய திரைப்படம் ?

தென்மேற்கு பருவகாற்று 
முத்துக்கு முத்தாக 
வாகை சூட வா 

சிரித்து மகிழ்ந்த திரைப்படம் ?

போட்டா போட்டி 50  : 50
போராளி 

பிடித்த பாடல் ?

உன் பெயரே தெரியாது - எங்கேயும் எப்போதும் 
ராசாத்தி போல - அவன் இவன் 
ஜில்லா விட்டு ஜில்லா -  ஈசன் 

மனதில் நின்ற பாடல் ?

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - தென்மேற்கு பருவகாற்று 

மிகப்பெரிய சந்தோஷம் ?

நான்கு வருடங்களுக்கு பிறகு பழைய பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து பயின்ற பள்ளியில் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது ... அப்புறம் இந்த அணியின் உலககோப்பை கனவு நனவானது ... 


புதிய நண்பர்கள் ?

நிறைய இந்த வருடத்தில் புதிய நண்பர்களுடன் கைக்குலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் , மற்றும் பணிபுரியும் இடங்களில்...

சாதனை ?

இன்னும் அந்த அளவுக்கு வளரவே இல்லைங்க... சாதனை செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டுமாம் ... நான் இன்னும் சின்ன பையன்தான் ... 

வருத்தம் ?

நிறைய ஏக்கங்களையும் , சோகங்களையும் குறைவில்லாமல் வழங்கியது இந்த வருடம் அந்த அளவுக்கு மன உறுதியையும் , நம்பிக்கை தரும் நல்ல உள்ளங்களின் நட்பையும் கொடுத்ததினால் இந்த வருத்தத்திற்கு இடமில்லை ..

ஆச்சர்யம் ?

நானும் வலைப்பூவில் தொடர்ந்து கிறுக்கி வருவது தான் ...

பெருமை ?

எங்கள் ஊரின் மண்ணின் மைந்தர்கள் கடந்த பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் நிறைய மதிப்பெண்களோடு தேர்ச்சி அடைந்தது ...



(இந்த தொடர்பதிவு எழுத அழைத்த அன்பு நண்பர் திரு. மயிலன் (மயிலிறகுஅவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்)

Post Comment

41 கருத்துரைகள்..:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அமர்களம்...

அப்புறம் அந்த வாட்ச் மறுபடியும் வேறு எங்காதவது பார்த்தா வாங்கிடுங்க

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒரு வருஷ சரித்திரத்தை சொல்லிட்டீங்க, இனி அடுத்த வருஷம் என்ன செய்யப்போறீங்கன்னும் சொல்லி இருக்கலாமே...!!! வாழ்த்துக்கள்...!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒரு வருஷ சரித்திரத்தை சொல்லிட்டீங்க, இனி அடுத்த வருஷம் என்ன செய்யப்போறீங்கன்னும் சொல்லி இருக்கலாமே...!!! வாழ்த்துக்கள்...!!

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

மாணவன் சொன்னது…

Nice....
:-)

பெயரில்லா சொன்னது…

நிறைப படிச்சிங்களா ...எடுத்தவுடநே பொய்யா ...
நீங்க சுட்ட வாட்சை உங்கட்டைருந்து யாரோ சுட்டுட்டாங்க ,,,வெரி bad
திருப்பதிக்கு போனிங்க சந்தோசம் ,,ரெண்டு தடவையும் மொட்டை போட்டிங்களா
நீங்க சொல்லுற பாதிப் படம் பெயர் இப்போதான் கேளிவிப் படுறான்...
சாதனை பண்ண சாக்குபோக்கா ......சின்னப் பையனா --திரும்படியும் பொய்யா ...
புதிய நண்பர்கள் கிடைப்பாங்க,புதிய நல்ல நண்பர்களா ???/
நல்லாத்தான் எழுதுறிங்க ஆச்சரியப் படாதிங்க ...
அந்தப் பிள்ளக கஷ்டப்பட்டு படிச்சி பாஸ் பண்ணி இருக்காங்க ..என்னோவூ நீங்க படிச்சி பாஸ் பண்ணிய மாறி சீனு ...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
புதிய வருடத்தில் ,சந்தோசத்தோடும் நல்ல உடல் நலத்தோடும் இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ...

Prem S சொன்னது…

ம் அனைத்தையும் அருமையாக சொல்லி இருக்கீறீர்கள்

கோகுல் சொன்னது…

வாட்சை இனிமே வாட்ச் பண்ணுங்க.
இதே போல அடுத்த வருடமும் சுவாரஸ்யமாக தொடர வாழ்த்துகள்.

மகேந்திரன் சொன்னது…

தங்கள் உள்ளம் உரைத்த காலக்கண்ணாடி இந்தப் பதிவு..

அனுஷ்யா சொன்னது…

அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி தோழரே...
பகிர்வு அருமை...
:):))))))

thendralsaravanan சொன்னது…

தம்பி,
சென்ற வருடம் அழகானதாக அமைந்தது சிறப்பு!
வரும் காலங்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

r.v.saravanan சொன்னது…

இந்த வருடத்தை பற்றிய தொடர் பதிவு படித்தேன் அரசன் அருமையாய் சொல்லியிருகின்றீர்கள் மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்த வருடத்தின் நிகழ்வுகள் ..

வாழ்த்துக்கள்..

ஹேமா சொன்னது…

ஒருவரின் முகம் காட்டும் அவரின் எழுத்துக்கள் என்பதுபோலான பதிவு இது அரசன் !

கீதமஞ்சரி சொன்னது…

சென்ற வருடத்தை சீர்தூக்கிப் பார்த்த எழுத்துக்கள் அருமை. வரும் வருடமும் நலமாய் அமைய வாழ்த்துகிறேன்.

vetha (kovaikkavi) சொன்னது…

புதிய ஆண்டும் சிறப்பாக மலரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

*anishj* சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தல...!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...!!

ரிஷபன் சொன்னது…

நிறைய இந்த வருடத்தில் புதிய நண்பர்களுடன் கைக்குலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் , மற்றும் பணிபுரியும் இடங்களில்...

தொடரட்டும் மகிழ்ச்சி..

அம்பாளடியாள் சொன்னது…

புத்தாண்டும் தங்களுக்கு நல்ல பொலிவான விடயங்களை சொல்லக்கூடிய சிறந்த ஆண்டாக
அமையட்டும் .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .

Unknown சொன்னது…

இவருடத்தில் நிறையவே கிடைத்திருக்கிறது.. அடுத்த வருடத்திற்கும் தொடரட்டும்
+
சுஜாதா இபோதும் வசீகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

இந்த வருடம் சந்தித்த நண்பர்களில் நானும் ஒருவனாய் உங்களுக்கு....

உங்கள் வாழ்வு சிறக்க என் மனதார நல்வாழ்த்துகள் தம்பி...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அமர்களம்...

அப்புறம் அந்த வாட்ச் மறுபடியும் வேறு எங்காதவது பார்த்தா வாங்கிடுங்க//

நன்றிங்க நண்பரே ...
தேடிட்டே இருக்கேன் .. கிடைத்தால் உடனே வாங்கி விட வேண்டியது தான் ...

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஒரு வருஷ சரித்திரத்தை சொல்லிட்டீங்க, இனி அடுத்த வருஷம் என்ன செய்யப்போறீங்கன்னும் சொல்லி இருக்கலாமே...!!! வாழ்த்துக்கள்...!!//

நன்றிங்க அண்ணே ,...
அதையும் சொல்லிருக்கலாம் அண்ணே .. பதிவு கொஞ்சம் பெருசா ஆனா மாதிரி இருந்தது அண்ணே ... அதான் ..

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.//

நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
Nice....
:-)// thank u brother

arasan சொன்னது…

கலை கூறியது...
நிறைப படிச்சிங்களா ...எடுத்தவுடநே பொய்யா ...
நீங்க சுட்ட வாட்சை உங்கட்டைருந்து யாரோ சுட்டுட்டாங்க ,,,வெரி bad
திருப்பதிக்கு போனிங்க சந்தோசம் ,,ரெண்டு தடவையும் மொட்டை போட்டிங்களா
நீங்க சொல்லுற பாதிப் படம் பெயர் இப்போதான் கேளிவிப் படுறான்...
சாதனை பண்ண சாக்குபோக்கா ......சின்னப் பையனா --திரும்படியும் பொய்யா ...
புதிய நண்பர்கள் கிடைப்பாங்க,புதிய நல்ல நண்பர்களா ???/
நல்லாத்தான் எழுதுறிங்க ஆச்சரியப் படாதிங்க ...
அந்தப் பிள்ளக கஷ்டப்பட்டு படிச்சி பாஸ் பண்ணி இருக்காங்க ..என்னோவூ நீங்க படிச்சி பாஸ் பண்ணிய மாறி சீனு ...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
புதிய வருடத்தில் ,சந்தோசத்தோடும் நல்ல உடல் நலத்தோடும் இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ...//

என்னங்க ஆச்சு ,,, ஏன் இவ்வளவு கோவம் என்மேல ..
உண்மையா சொன்னா நம்பனும் .. இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா அப்புறம் நான் சொல்ல வந்தத மறந்துடுவேன் ...

ஒரு முறை தான் மொட்டை தான் போட்டுகிட்டேன் ..
நன்றிங்க உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
ம் அனைத்தையும் அருமையாக சொல்லி இருக்கீறீர்கள்//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

கோகுல் கூறியது...
வாட்சை இனிமே வாட்ச் பண்ணுங்க.
இதே போல அடுத்த வருடமும் சுவாரஸ்யமாக தொடர வாழ்த்துகள்//

கண்டிப்பா வாட்ச் பண்றேன் ...அந்த வாட்ச ...

நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
தங்கள் உள்ளம் உரைத்த காலக்கண்ணாடி இந்தப் பதிவு..//

நன்றிங்க அண்ணே ..

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி தோழரே...
பகிர்வு அருமை...
:):))))))//

அன்பின் அழைப்புக்கும் , வாழ்த்க்கும் நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
தம்பி,
சென்ற வருடம் அழகானதாக அமைந்தது சிறப்பு!
வரும் காலங்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!//

நன்றிங்க அக்கா ...
உங்களுக்கும் இந்த வருடம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இந்த வருடத்தை பற்றிய தொடர் பதிவு படித்தேன் அரசன் அருமையாய் சொல்லியிருகின்றீர்கள் மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்//


நன்றிங்க சார் ...

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
இந்த வருடத்தின் நிகழ்வுகள் ..

வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
ஒருவரின் முகம் காட்டும் அவரின் எழுத்துக்கள் என்பதுபோலான பதிவு இது அரசன் !//

அன்பின் வருகைக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

கீதா கூறியது...
சென்ற வருடத்தை சீர்தூக்கிப் பார்த்த எழுத்துக்கள் அருமை. வரும் வருடமும் நலமாய் அமைய வாழ்த்துகிறேன்.//

அன்புக்கு நன்றிங்க மேடம் ...

arasan சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...
புதிய ஆண்டும் சிறப்பாக மலரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com//

அன்பின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சகோ ..

arasan சொன்னது…

*anishj* கூறியது...
பகிர்வுக்கு நன்றி தல...!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...!!//

மிக்க நன்றிங்க தல.. உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல வாழ்த்துக்கள் தல ..

arasan சொன்னது…

ரிஷபன் கூறியது...
நிறைய இந்த வருடத்தில் புதிய நண்பர்களுடன் கைக்குலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் , மற்றும் பணிபுரியும் இடங்களில்...

தொடரட்டும் மகிழ்ச்சி..//

அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
புத்தாண்டும் தங்களுக்கு நல்ல பொலிவான விடயங்களை சொல்லக்கூடிய சிறந்த ஆண்டாக
அமையட்டும் .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .//

அன்பின் வருகைக்கும், உளமார வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சகோ...

arasan சொன்னது…

சாய் பிரசாத் கூறியது...
இவருடத்தில் நிறையவே கிடைத்திருக்கிறது.. அடுத்த வருடத்திற்கும் தொடரட்டும்
+
சுஜாதா இபோதும் வசீகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.//

உண்மைதான் .. நண்பரே ..
இப்போதும் சுஜாதா எழுத்தே தனி தான் ...
நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
இந்த வருடம் சந்தித்த நண்பர்களில் நானும் ஒருவனாய் உங்களுக்கு....

உங்கள் வாழ்வு சிறக்க என் மனதார நல்வாழ்த்துகள் தம்பி...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...//

உண்மைதான் ,... அண்ணே ...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் அண்ணே ...