புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 08, 2012

மௌனம் ...







அன்பின் ஆழத்தை 
அழுத்தமாய் உணர்த்தும், 
       - அம்மாவின் மௌனம்!

இதய வலியை 
இயல்பாய் உணர்த்தும், 
       - காதலியின் மௌனம்!

நாளைய இரணங்களை 
நாசூக்காய் உணர்த்தும், 
     - நட்பின் மௌனம்!

பொருளாதார பொதியை 
புரிய உணர்த்தும், 
     - தந்தையின் மௌனம்!

மன்னிப்பின் மகிமையை 
மறைமுகமாய் உணர்த்தும், 
     - மனைவியின் மௌனம்!

பிரிவின் வலியை 
புதிராய் உணர்த்தும்,
     - பிள்ளையின் மௌனம்!

ஐம்புலன்களின் ஆதிக்கத்தை
அசையாமல் கட்டிவைக்கும்,
     - அதிரா மௌனம்!

இன்றைய அகங்காரத்தை,
நாளைக்கு உணர்த்தும்,
      - எதிராளியின் மௌனம்!

கடுஞ்ச்சொல்லின் காயத்தை 
காலம்தாழ்ந்து உணர்த்தும், 
    - கலையாத மௌனம்!


Post Comment

35 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

பேசும்
மனிதனுக்குள் தான் எத்தனை
மௌனங்கள்

கவிதை
வாசிப்பிற்குப் பின்
சற்று மௌனமானேன்


அது
பொருள் உணர்ந்த (உணர்த்திய )
மௌனம்

சிறந்த கவிதை பாராட்டுக்கள் நண்பா

thendralsaravanan சொன்னது…

மௌனமொழி!மனிதனின் அத்துனை நிலைகளிலும் தேவைப் படுகிறது! நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்போ சிறு பார்வையிலேயே எங்கள் அம்மா ”பெரியவங்க பேசும் போது இடத்தை விட்டு நகரு.....போய் படி.... உஸ் தொடாதே சுட்டுடும்.... உட்காருன்னு”எத்துனையோ விசயங்களை உணர்த்தியிருக்காங்க! அருமையான கவிதை தம்பி!!!

சித்தாரா மகேஷ். சொன்னது…

//கடுஞ்ச்சொல்லின் காயத்தை
காலம்தாழ்ந்து உணர்த்தும்,
- கலையாத மௌனம்!//

பேசும் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்.பேசா மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்.அருமை சகோதரா..

Meena சொன்னது…

கடுஞ்ச்சொல்லின் காயத்தை
காலம்தாழ்ந்து உணர்த்தும்,
- கலையாத மௌனம்!

உண்மையான வரிகள் .
எல்லா வரிகளுமே வாழ்க்கைத் தத்துவம். மௌனம் சிறந்தது என்றே தோன்றுகிறது

பெயரில்லா சொன்னது…

மௌனம் ....கவிதை சுப்பரா இக்குது ....
ஆனாலும் ஆயிரம் பொற்காசுகள் தர முடியாது ...என்னெண்டால் கவிதை எழுத சொன்னால் அங்கணனே கட்டம் கட்டமா போட்டு விளையாண்டி இருக்கீங்க ...

பெயரில்லா சொன்னது…

ஏன்னா இது அதிரா மௌனம் ஆ

இது ஏன்னா அதிரா அக்கா அண்டார்ட்டிக்க போயி இருக்க நேரமா பார்த்து இப்புடி எல்லாம் எழுதி போடுறிங்க ... ...

பெயரில்லா சொன்னது…

மௌனமாய் நீங்கள் எழுதிய கவிதை அருமை------- எண்டு ஒரே பெரிய புழுகளோடு கவிதாயினி ஒருவர் வருவாங்களே இன்னுமா அவவுக வரலா ...

மகேந்திரன் சொன்னது…

மௌனங்கள் ஒவ்வொன்றும்

பேசுகின்றன சகோதரரே...

உழவன் சொன்னது…

// பொருளாதார பொதியை புரிய உணர்த்தும், - தந்தையின் மௌனம்! //

அருமை சகோதரா...

Prem S சொன்னது…

மௌனம் ஒவ்வொருவரிடத்தும் எப்படி என்ற அருமையான மோனை பலவற்றோடு சிறந்த கவிதை அன்பரே

கடம்பவன குயில் சொன்னது…

பேசும் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு மௌனம் ஆயிரம் மடங்கு நமக்கு செய்திகளை சொல்லிவிடும்.

r.v.saravanan சொன்னது…

மௌனத்தின் வகைகளை வலிமையை பட்டியலிட்ட விதம் மிக அழகு அரசன்

பேச வைக்கிறது இந்த மௌன கவிதை

ஹேமா சொன்னது…

மௌனம் அழகுதான் சிலசமயங்களில் உயிரையே வதைக்கும் அதே மௌனம்.அழகான கவிதை அரசன் !

ஹேமா சொன்னது…

காக்கா சூ...சூ !

(அரசன் இது உங்களுக்கு இல்ல.விளங்கி ஒரு காக்கா பதில் சொல்லும் பாருங்களேன் !)

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

மெளனம்- அருமையான மொழி
நல்ல படைப்பு!

-காரஞ்சன்(சேஷ்)

சத்ரியன் சொன்னது…

அடடா!

மௌனத்தை மொழிபெயர்த்திருக்கும் கவிதை அழகோ அழகு அரசன்.

கீதமஞ்சரி சொன்னது…

மொழி தேவையற்ற மௌனத்தின் சிலாகிப்பு அபாரம் அரசன்.

தவிப்பு, தவிர்ப்பு, பொறுப்பு, நிராகரிப்பு, பொறுமை, பிரிவு என்று எல்லா உணர்வுகளையும் தன்னில் அடக்கி மௌனமாய் வெளிப்படுத்தும் மௌனம் ஒரு அவஸ்தைதான், அதை எதிர்கொள்பவருக்கு.

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
பேசும்
மனிதனுக்குள் தான் எத்தனை
மௌனங்கள்

கவிதை
வாசிப்பிற்குப் பின்
சற்று மௌனமானேன்


அது
பொருள் உணர்ந்த (உணர்த்திய )
மௌனம்

சிறந்த கவிதை பாராட்டுக்கள் நண்பா//

அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
மௌனமொழி!மனிதனின் அத்துனை நிலைகளிலும் தேவைப் படுகிறது! நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்போ சிறு பார்வையிலேயே எங்கள் அம்மா ”பெரியவங்க பேசும் போது இடத்தை விட்டு நகரு.....போய் படி.... உஸ் தொடாதே சுட்டுடும்.... உட்காருன்னு”எத்துனையோ விசயங்களை உணர்த்தியிருக்காங்க! அருமையான கவிதை தம்பி!!!//

உண்மைதான் அக்கா ..
எத்தனை விடயங்களை இந்த மௌனங்கள் நம்மை
பாதித்தும் , சோதித்தும், பாதுகாத்தும் வச்சிருக்கு ..

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...
//கடுஞ்ச்சொல்லின் காயத்தை
காலம்தாழ்ந்து உணர்த்தும்,
- கலையாத மௌனம்!//

பேசும் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்.பேசா மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்.அருமை சகோதரா..//

அன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

Meena கூறியது...
கடுஞ்ச்சொல்லின் காயத்தை
காலம்தாழ்ந்து உணர்த்தும்,
- கலையாத மௌனம்!

உண்மையான வரிகள் .
எல்லா வரிகளுமே வாழ்க்கைத் தத்துவம். மௌனம் சிறந்தது என்றே தோன்றுகிறது

//

பல நேரங்களின் மௌனம் மிக சிறந்த கருவி தான் மேடம் ..
சில நேரங்களில் கொலையாய் கொல்லும் .. நன்றிகள் மேடம் ..

arasan சொன்னது…

கலை கூறியது...
மௌனம் ....கவிதை சுப்பரா இக்குது ....
ஆனாலும் ஆயிரம் பொற்காசுகள் தர முடியாது ...என்னெண்டால் கவிதை எழுத சொன்னால் அங்கணனே கட்டம் கட்டமா போட்டு விளையாண்டி இருக்கீங்க ..//

நான் சரியா தான் எழுதி இருக்கேன் .
நல்லா பாருங்க கலை ..

arasan சொன்னது…

கலை கூறியது...
ஏன்னா இது அதிரா மௌனம் ஆ

இது ஏன்னா அதிரா அக்கா அண்டார்ட்டிக்க போயி இருக்க நேரமா பார்த்து இப்புடி எல்லாம் எழுதி போடுறிங்க ... ..//

சும்மா தான் கலை ..
அப்படியாவது அக்கா சீக்கிரம் வந்து உன்னுடன் சண்டை போடுவாங்க என்று தான்

arasan சொன்னது…

கலை கூறியது...
மௌனமாய் நீங்கள் எழுதிய கவிதை அருமை------- எண்டு ஒரே பெரிய புழுகளோடு கவிதாயினி ஒருவர் வருவாங்களே இன்னுமா அவவுக வரலா .//

வருவாங்க .. வருவாங்க

arasan சொன்னது…

ஏப்ரல், 2012 10:55 pm
மகேந்திரன் கூறியது...
மௌனங்கள் ஒவ்வொன்றும்

பேசுகின்றன சகோதரரே.//

என் நன்றிகள் அண்ணா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
// பொருளாதார பொதியை புரிய உணர்த்தும், - தந்தையின் மௌனம்! //

அருமை சகோதரா..//

மிகுந்த நன்றிங்க உழவரே

arasan சொன்னது…

PREM.S கூறியது...
மௌனம் ஒவ்வொருவரிடத்தும் எப்படி என்ற அருமையான மோனை பலவற்றோடு சிறந்த கவிதை அன்பரே
//

மிகுந்த நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
பேசும் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு மௌனம் ஆயிரம் மடங்கு நமக்கு செய்திகளை சொல்லிவிடும்.//

உண்மைதான் ...
மிகுந்த நன்றிகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
மௌனத்தின் வகைகளை வலிமையை பட்டியலிட்ட விதம் மிக அழகு அரசன்

பேச வைக்கிறது இந்த மௌன கவிதை//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
மௌனம் அழகுதான் சிலசமயங்களில் உயிரையே வதைக்கும் அதே மௌனம்.அழகான கவிதை அரசன் !//

உண்மைதான் சில நேரங்களில் உயிரை பிழியும் இந்த மௌனம் ..
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
காக்கா சூ...சூ !

(அரசன் இது உங்களுக்கு இல்ல.விளங்கி ஒரு காக்கா பதில் சொல்லும் பாருங்களேன் !//


புரிந்து கொண்டேன் அக்கா ..
அந்த காக்கா யாரென்று ..?

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
மெளனம்- அருமையான மொழி
நல்ல படைப்பு!

-காரஞ்சன்(சேஷ்//

என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
அடடா!

மௌனத்தை மொழிபெயர்த்திருக்கும் கவிதை அழகோ அழகு அரசன்//

அண்ணனுக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

Vairai Sathish கூறியது...
super//

Thank u sathish

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
மொழி தேவையற்ற மௌனத்தின் சிலாகிப்பு அபாரம் அரசன்.

தவிப்பு, தவிர்ப்பு, பொறுப்பு, நிராகரிப்பு, பொறுமை, பிரிவு என்று எல்லா உணர்வுகளையும் தன்னில் அடக்கி மௌனமாய் வெளிப்படுத்தும் மௌனம் ஒரு அவஸ்தைதான், அதை எதிர்கொள்பவருக்கு//

அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் அக்கா