எப்படி நடந்த
நிகழ்வோ புரியவில்லை!
எத்தனை கனவுகளை
சுமந்த உயிரோ,
விளங்கவில்லை!
சாலையோரத்தில்
குருதிப்பெருக்கில்
கரைந்து கொண்டிருந்த
அந்த முகத்தின்
வடிவம், இன்னும்
மறையவில்லை!
தாமதமாய் சென்றால்
சம்பளத்தில் துண்டு
விழும் என்ற தவிப்பில்
எட்டி பார்த்துவிட்டு
தாண்டி தான் சென்றேன்!
வேலை முடிந்து
திரும்புகையில் அதே
இடத்தில் காண்கிறேன்
கொஞ்சம் ரத்தக்கறையும்,
ஈக்கள் மொய்க்கும்
தசை துணுக்களும்,
கூடவே,
என் மனித நேயத்தையும்!
Tweet |
25 கருத்துரைகள்..:
கூடவே,
என் மனித நேயத்தையும்!
சில சமயங்களில் நம்மைக் குறித்தே நமக்கு ஒரு தீர்ப்பு கிடைத்து விடும். சுடும் உண்மையாய். அருமையான கவிதை !
சில
தருணங்களில் நாம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கப்டுவோம்
அது நமக்குள் மனிதநேசம் இல்லாமல் அல்ல
எப்படிச் சொல்ல அந்த தர்மசங்கடத்தை ...
மனம்
இழகியும் கரம் நீட்டாத
குற்ற உணர்வு
வரிகளில் காணமுடிந்தது
கஸ்டமான தருணங்களையும் கடந்துகொண்டுதானிருக்கிறோம் !
நேரில் பார்த்ததை போன்ற உணர்வு உங்கள் கவிதையில் ..நிஜ சம்பவமா ?
குற்ற உணர்வு மிகுந்த கவிதை வரிகள்..அண்ணே
என்ன தலைவரே இப்புடி பண்ணிப்புட்டீங்க? இவளோ கெட்டவரா நீங்க?
கசப்பான உண்மைதான் நண்பரே..
நமக்கு மனித நேயம் மரத்துவிட்டது..
//கூடவே,
என் மனித நேயத்தையும்!//
அரசன்,
இவ்வரியில் “என்” என்பதற்கு பதிலாக “நம்” சேர்த்தால் இன்னும் பொருத்தமாகவே இருக்கும்.
செவிட்டில் அறையும் உண்மை. நெருடுகிறது.
இறுதி வரி கொஞ்சம் என்னை உறுத்திப் போனது நிஜம்
பல சமயங்களில் நானும் அப்படி இருக்க நேர்ந்திருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
கலங்கவைத்த பதிவு!
-காரஞ்சன்(சேஷ்)
ரிஷபன் கூறியது...
கூடவே,
என் மனித நேயத்தையும்!
சில சமயங்களில் நம்மைக் குறித்தே நமக்கு ஒரு தீர்ப்பு கிடைத்து விடும். சுடும் உண்மையாய். அருமையான கவிதை !//
உண்மைதான் நண்பரே ..
சில நேரங்களில் யோசித்தால் பல நிகழ்வுகளை நெஞ்சுக்குள்
தூவி செ(கொ) ல்கிறது .. என் நன்றிகள
செய்தாலி கூறியது...
சில
தருணங்களில் நாம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கப்டுவோம்
அது நமக்குள் மனிதநேசம் இல்லாமல் அல்ல
எப்படிச் சொல்ல அந்த தர்மசங்கடத்தை ...
மனம்
இழகியும் கரம் நீட்டாத
குற்ற உணர்வு
வரிகளில் காணமுடிந்தது//
உங்களின் கருத்தோடு நானும் ஒத்துபோகிறேன் தோழரே ..
ஆனால் அந்த நிகழ்வின் தாக்கம் சலனத்தை உண்டு பண்ணுவதை தவிர்க்க முடிவதில்லை ..
ஹேமா கூறியது...
கஸ்டமான தருணங்களையும் கடந்துகொண்டுதானிருக்கிறோம் !//
உண்மைதான் அக்கா
PREM.S கூறியது...
நேரில் பார்த்ததை போன்ற உணர்வு உங்கள் கவிதையில் ..நிஜ சம்பவமா ?//
நிஜ சம்பவம் இல்லை நண்பரே ..
நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் ...
Uzhavan Raja கூறியது...
குற்ற உணர்வு மிகுந்த கவிதை வரிகள்..அண்ணே//
வாங்க தம்பி... கருத்துக்கு என் நன்றிகள் ..
மயிலன் கூறியது...
என்ன தலைவரே இப்புடி பண்ணிப்புட்டீங்க? இவளோ கெட்டவரா நீங்க?//
ஐயோ அண்ணாச்சி நான் அநியாயத்துக்கு கெட்டவன்
மயிலன் கூறியது...
கசப்பான உண்மைதான் நண்பரே..
நமக்கு மனித நேயம் மரத்துவிட்டது..//
உண்மைதான் தலைவரே ..
என்ன பண்ண எல்லாம் பொருளாதாரம் பற்றிய தேடல் தான் இத்தனை இழப்புக்கும் ஒரு காரணமாய் இருக்கும் ..
சத்ரியன் கூறியது...
//கூடவே,
என் மனித நேயத்தையும்!//
அரசன்,
இவ்வரியில் “என்” என்பதற்கு பதிலாக “நம்” சேர்த்தால் இன்னும் பொருத்தமாகவே இருக்கும்.//
அண்ணே அடிக்க வந்துட்டா ? அதான் என் என்றே போட்டுக்கொண்டேன் ..
பாலா கூறியது...
செவிட்டில் அறையும் உண்மை. நெருடுகிறது.//
உண்மை கசக்கும் தான் நண்பரே .. என் நன்றிகள்
Ramani கூறியது...
இறுதி வரி கொஞ்சம் என்னை உறுத்திப் போனது நிஜம்
பல சமயங்களில் நானும் அப்படி இருக்க நேர்ந்திருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்//
அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் சார்
Seshadri e.s. கூறியது...
கலங்கவைத்த பதிவு!
-காரஞ்சன்(சேஷ்)//
என் நன்றிகள் சார்
மிக அருமையான, யதார்த்தமான கவிதை!
இறுதிவரிகள் அறைகின்றன!
ஜீ... கூறியது...
மிக அருமையான, யதார்த்தமான கவிதை!
இறுதிவரிகள் அறைகின்றன!//
அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் சார்
கருத்துரையிடுக