தமிழனின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் முதலிடம் இந்த சினிமாவுக்கு தான் என்பதை எப்போதும் மறுக்க முடியாது, அந்த அளவுக்கு சினிமா மோகம் தலைத்தூக்கி நிற்கிறது. எந்த காலத்திலும் சினிமா மீதுள்ள மோகம் கூடுகிறதே தவிர, குறைந்த பாடில்லை. காலத்திற்கு தகுந்த மாதிரி நுட்பங்கள் மாறி திரைப்படங்களின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. அரங்கங்களும் உருமாறி வேறொரு பரிமாணத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
மாநகரங்களில் அரங்கங்கள் அதி நவீன வசதியுடன் துல்லிய ஒலி, ஒளி அமைப்புடன் நம்மை கொள்ளை கொள்கிறது... கூடவே பணத்தையும். நடுத்தர வர்க்கம் குடும்பத்துடன் இந்த மாதிரி அரங்கங்களில் சென்று பார்ப்பது சிரமம் தான்! தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன இந்த திரைப்படங்களின் இப்போதைய நிலையை கண்டு மனம் சற்று வருந்தத்தான் செய்கிறது.
எதார்த்த சினிமா, நகைச்சுவை சினிமா, கமர்ஷியல் சினிமா என்ற பல்முக வடிவில் நம்மை தாக்கினாலும் ஏதோ சில ஒன்றிரண்டு தான் நம்முள் இறங்குகின்றன! மற்றவை கவிதை எழுத முயற்சித்து கசக்கப்பட்ட தாள்கள் போலாகின்றன, அந்த வகையில் இந்த வருடத்தில் வெளியான பெரும்பான்மையான தமிழ் படங்கள் சோபிக்கவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் , பெரிய நடிகர் , பெரிய இயக்குனர் என்று பந்தாவாக வெளியாகிய பல படங்கள் பல் இளித்தன.
குறிப்பாக அரவான்,வேட்டை, சகுனி, முகமூடி, தாண்டவம், மாற்றான் இப்படி பட்ட படங்கள் வெளிவந்து பெருத்த அடிவாங்கினாலும் வழக்கு எண் 18/9, மெரீனா, நான், நான் ஈ, அட்டகத்தி ,சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை இப்படி சில படங்கள் அமைதியாக வந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தன.
எந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை, வாலிபன் சுற்றும் உலகம், பாளையங்கோட்டை, லொள்ளு தாதா இப்படி ஏகப்பட்ட படங்கள் வந்து சல்லைய கொடுக்காமலும் இல்லை. தொலைக்காட்சிக்கென்றே படமெடுக்கும் இயக்குனர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்தனர்.
இன்னும் சில படங்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன, பாப்போம் வந்து எந்த அளவுக்கு ஓடுகிறது என்று. எப்படியும் எதிர்பார்ப்பு குறைய போவதுமில்லை அவர்களும் வெளியிடாமல் இருக்கபோவதுமில்லை.
இந்த வருடத்தில் சறுக்கி காயம் பட்ட பெரிய நடிகர்களும், இயக்குனர்களும் தவறை திருத்திக்கொண்டு புதியதாய் சிந்தித்து வரும் வருடத்தில் வெற்றி பெற வாழ்த்துவோமாக....
Tweet |
11 கருத்துரைகள்..:
எந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை,
ha....ha
எதிர்பார்ப்பு குறைய போவதுமில்லை
/////////////
என் எதிர்பார்ப்பு குறைஞ்சு போச்சு..
இப்ப தமிழ் சினிமா பார்க்க மனம் இடம்கொடுக்குதில்லை சில நல்ல இயக்குனர் சிகரங்களின் படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பதாய் முடிவு பண்ணியுள்ளேன்
இரண்டு லிஸ்ட் கொடுத்துவிட்டீங்க, இரண்டிலும் பார்க்காத படங்கள் இருக்கிறது பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள்.. எப்படியும் இரண்டு படங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்று இருக்கிறேன்.
அட இப்படியெல்லாம் படங்கள் வந்ததா? நல்ல அலசல்! நன்றி!
என்னது வாலிபன் சுற்றும் உலகமா அப்படி ஒரு படம் வந்துச்சா என்ன ?
r.v.saravanan கூறியது...
எந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை,
ha....ha//
உண்மைதானே
ஆத்மா கூறியது...
எதிர்பார்ப்பு குறைய போவதுமில்லை
/////////////
என் எதிர்பார்ப்பு குறைஞ்சு போச்சு..
இப்ப தமிழ் சினிமா பார்க்க மனம் இடம்கொடுக்குதில்லை சில நல்ல இயக்குனர் சிகரங்களின் படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பதாய் முடிவு பண்ணியுள்ளேன்//
சிகரங்கள் தான் இப்போ மண்ணை கவ்வுது பாசு
semmalai akash கூறியது...
இரண்டு லிஸ்ட் கொடுத்துவிட்டீங்க, இரண்டிலும் பார்க்காத படங்கள் இருக்கிறது பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள்.. எப்படியும் இரண்டு படங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்று இருக்கிறேன்.//
பாருங்க பாருங்க ..
s suresh கூறியது...
அட இப்படியெல்லாம் படங்கள் வந்ததா? நல்ல அலசல்! நன்றி!//
வந்து படுத்தி எடுத்தது சார்
Prem Kumar.s கூறியது...
என்னது வாலிபன் சுற்றும் உலகமா அப்படி ஒரு படம் வந்துச்சா என்ன ?//
என்ன மாதிரி படம் .. ஒரு தரம் பாருங்க ..
அண்ணா! சினிமா ஒன்னும் தமிழர்களின் முதற்படப்பில்ல.. அதுக்கு மேல ஆயிரக்கணக்குல்ல இருக்கு.... இன்னைக்கு சினிமா நல்லாதான் இருக்கு ஆனா அது நல்லத கொடுக்கல,
Tamil Blog
Better Blog IN Tamil
கருத்துரையிடுக