புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 27, 2012

கண்கொத்திப் பறவை...(பதிவரின் நூல்)



நம்மில் பலர் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வந்தாலும், வெகு சிலரே அதை தொகுத்து புத்தகமாக்குகின்றனர், அந்த வரிசையில் நமது சக பதிவர், என் மனதிற்கினிய அண்ணன் மனவிழி சத்ரியன் அவர்கள் தனது கவிதைகளை தொகுத்து "கண்கொத்திப் பறவை" என்கிற பெயரில் முதல் தொகுப்பாக  வெளியிட்டுள்ளார். அவ்வப்போது ஒன்றிரண்டு கவிதைகளை வலைத்தளத்தில் வாசித்தாலும் மொத்தமாய் ஒரு புத்தகமாய் படிக்கும் சுகமும், சுவையும் தனிதான். 


நடுநிசியில் மனம் மயக்கும் மெல்லிசை போல், உள்ளம் நிறைக்கும் காதல் ராகம் இதில் நிறைய பாடியிருந்தாலும், கூடவே சமூகம் பற்றிய தன் கோபங்களை 'வரி'ச் சாட்டைக்கொண்டு சுழற்றி இருக்கிறார். எளிய தமிழில் புதுக்கண்ணோட்டத்தில் புனையப் பட்ட மென்மை கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. இந்த புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருப்பவர் நம் நண்பர் மின்னல்வரிகள் திரு. பால கணேஷ் அவர்கள்.  புலவர். ராமானுசம் அய்யா அணிந்துரை வழங்கி புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்கி வாசித்து கவிஞரின் முயற்சிக்கு ஊக்கம் அளியுங்கள் தோழமைகளே!

புத்தகம் கிடைக்குமிடம்:-

Discovery Book Palace Pvt Ltd.,
K. K. Nagar, Chennai - 600 078. (near Pondichery Guset House)
Ph: 044 - 6515 7525  www. discoverybookpalace.com

ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்கவும் 

Post Comment

9 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

நூல் வெளியிடும் நண்பர் சத்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சதீஷ் செல்லதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்..நண்பருக்கு.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

குறையொன்றுமில்லை. சொன்னது…

சத்ரியன் கவிதை நூல் வெலியிட்டுடீங்களா வாழ்த்துகள்.

சீனு சொன்னது…

நிச்சயம் ராசா.... சத்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அருணா செல்வம் சொன்னது…

நுாலாசிரிர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Prem S சொன்னது…

வாழ்த்துக்கள் அன்பருக்கு !...

பால கணேஷ் சொன்னது…

வலையில் அவ்வப்போது படித்திருந்தாலும் மொத்தமாய் கவிதைச் சோலையில் நுழைந்து உலா வருகையில் கிடைக்கும் இன்‌பமே தனிதான். எனக்கும் இந்தக் கவிதைகளை எல்லாம் சேர்த்துப் படிக்கையில் இதுதான் மனதில்பட்ட உணர்வு அரசன்! அழகாச் சொல்லியிருக்கீங்க. சிறப்பான வடிவமைப்புன்னு எனக்கு பாராட்டையும் வழங்கியிருக்கீங்க. மனமகிழ்வுடன் என் நன்றி!

ஆத்மா சொன்னது…

கவிஞர் சத்திரியனுக்கு வாழ்த்துக்கள். அவரின் நூலினை அறிமுகப்படுத்திய உங்களுக்கு ஒரூ சல்யூட்....