புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 12, 2013

இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது...


ன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது,
மனிதப் பெருக்கத்தில்
தொலைந்து போனதாய்
சொன்னார்கள்,
நானும் வேகமாய் தலையாட்டினேன்!

சொல்லி சொல்லியே
தொலைக்கப்பட்டதே தவிர, 
எவரும்
தடுக்க முற்பட்டதில்லை!



ஏழெட்டு கிறுக்கலோடு
என் கடமை முடிந்ததாய்
எண்ணிக்கொண்டேன்!

மகளோடு சேர்த்து 
எதிர்வீட்டாரின் குழந்தைக்கும், 
மார் ஊட்டும் (மாரூட்டும்)  
மஞ்சுளா அக்கா 
இன்னும் 
உயிர்ப்போடு தான் வைத்திருக்கிறாள்!

இவளைப் போல் 
இன்னும் பலர் வைத்திருக்கலாம், 
தொலைந்து போனதாய்ச் சொல்லும் 

மனிதநேயத்தை!


Post Comment

35 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

அருமையான கவிதை ....
கடைசி வரி சூப்பர்

சீனு சொன்னது…

அசத்தல் ராசா

மாதேவி சொன்னது…

அருமை.

Seeni சொன்னது…

arumai..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நிச்சயமாய்.மனித நேயம் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. நம் கண்ணில் படுவதில்லை. என்ற உண்மையை உணர்த்தியது கவிதை

Unknown சொன்னது…


ஒரு சில இடங்களில் மனித நேயம்
இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இளமதி சொன்னது…

மனித நேயம் பற்றி மிக அழகாகக் கூறினீர்கள் கவியில்...

ஆமாம் மனிதநேயம் மறைந்து போகவில்லை... நேயமுள்ள நெஞ்சங்களில் இருப்பாய் இருக்கின்றது. அருமை!

வாழ்த்துக்கள்!

த ம. 4

Yaathoramani.blogspot.com சொன்னது…

இந்தக் கவிதையும்.....
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

இந்தக் கவிதையும்.....
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

நாய் நக்ஸ் சொன்னது…

கருத்துரையிடுக.................

நல்லா...யோசிச்சி.....
முடிவு...கூறவும்................

நான்....
நாய்...நக்ஸ்...

நக்கீரன்........

ராஜி சொன்னது…

எல்லோரிடத்திலும் மனித நேயம் இருக்கு. ஆனா, அது வெளிப்படும் நேரம்தான் குறைவு. அதனாலதான் இந்நிலை!!

வெற்றிவேல் சொன்னது…

நல்ல கவிதை...

aavee சொன்னது…

சமூகக் கருத்து பொதிந்த கவிதை இது.. விரைவில் த.ம. மகுடம் சூட வாழ்த்துகள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அருமையான கவிதை

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - கவிதை அருமை - மனித நேயம் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது - வெளிப்படுத்தப் படுவதில்லை- அவ்வளவு தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சசிகலா சொன்னது…

சமூக நோக்கோடு சிந்தித்த விதம் சிறப்பு. வாழ்த்துக்கள் இது போல நிறைய எழுத வேண்டும் சகோ.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மனிதம் எங்கோ ஒரு மூலையில் உயிரோடுதான் உலவிக் கொண்டிருக்கிறது! அருமையான கவிதையும் அழகான படமும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

r.v.saravanan சொன்னது…

வரிகள் உயிர்ப்புடன் இருக்கிறது அரசன் வாழ்த்துக்கள்

மனித நேயம் உலகில் கண்டிப்பாக இருக்கிறது

arasan சொன்னது…

என் ராஜபாட்டை - ராஜா சொன்னது…
அருமையான கவிதை ....
கடைசி வரி சூப்பர்//

மிகுந்த நன்றிகள் ஆசிரியர் சாரே

arasan சொன்னது…

சீனு கூறியது...
அசத்தல் ராசா//

நன்றி சீனு

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
அருமை.//

நன்றிங்க

arasan சொன்னது…

Seeni கூறியது...
arumai..//

நன்றி நண்பா

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
நிச்சயமாய்.மனித நேயம் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. நம் கண்ணில் படுவதில்லை. என்ற உண்மையை உணர்த்தியது கவிதை//

நன்றிங்க முரளி சார்

arasan சொன்னது…

பிளாகர் புலவர் இராமாநுசம் கூறியது...

ஒரு சில இடங்களில் மனித நேயம்
இருந்து கொண்டுதான் இருக்கிறது.//

நன்றிகள் அய்யா ..

arasan சொன்னது…

இளமதி கூறியது...
மனித நேயம் பற்றி மிக அழகாகக் கூறினீர்கள் கவியில்...

ஆமாம் மனிதநேயம் மறைந்து போகவில்லை... நேயமுள்ள நெஞ்சங்களில் இருப்பாய் இருக்கின்றது. அருமை!

வாழ்த்துக்கள்!//

தங்களின் கருத்துக்கு என் நன்றிகள் இளமதி ...

arasan சொன்னது…

Ramani S கூறியது...
இந்தக் கவிதையும்.....
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

நன்றிங்க அய்யா ...

arasan சொன்னது…

நாய் நக்ஸ் கூறியது...
கருத்துரையிடுக.................

நல்லா...யோசிச்சி.....
முடிவு...கூறவும்................

நான்....
நாய்...நக்ஸ்...

நக்கீரன்........//

எதற்கு இந்த கேள்வி என்றே புரியவில்லை அண்ணே ... உங்கள் விருப்பம் கருத்து போடுவதும் , போடாமல் இருப்பதும் ...

arasan சொன்னது…

ராஜி கூறியது...
எல்லோரிடத்திலும் மனித நேயம் இருக்கு. ஆனா, அது வெளிப்படும் நேரம்தான் குறைவு. அதனாலதான் இந்நிலை!!//

உண்மைதான் அக்கா ...

arasan சொன்னது…

வெற்றிவேல் கூறியது...
நல்ல கவிதை...//

நன்றி வெற்றி

arasan சொன்னது…

கோவை ஆவி கூறியது...
சமூகக் கருத்து பொதிந்த கவிதை இது.. விரைவில் த.ம. மகுடம் சூட வாழ்த்துகள்.//

யோவ் அந்த மகுடம் எனக்கு வேண்டாம் தல .. கருத்துக்கு என் நன்றி

arasan சொன்னது…

கிரேஸ் கூறியது...
அருமையான கவிதை//

நன்றிங்க கிரேஸ் மேடம்

arasan சொன்னது…

cheena (சீனா) கூறியது...
அன்பின் அரசன் - கவிதை அருமை - மனித நேயம் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது - வெளிப்படுத்தப் படுவதில்லை- அவ்வளவு தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
சமூக நோக்கோடு சிந்தித்த விதம் சிறப்பு. வாழ்த்துக்கள் இது போல நிறைய எழுத வேண்டும் சகோ.//

எழுதுகிறேன் அக்கா .. நன்றிங்க

arasan சொன்னது…

s suresh கூறியது...
மனிதம் எங்கோ ஒரு மூலையில் உயிரோடுதான் உலவிக் கொண்டிருக்கிறது! அருமையான கவிதையும் அழகான படமும் சிறப்பு! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
வரிகள் உயிர்ப்புடன் இருக்கிறது அரசன் வாழ்த்துக்கள்

மனித நேயம் உலகில் கண்டிப்பாக இருக்கிறது//

நன்றிகள் சார்