புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 25, 2013

காதல்! (எனக்கு நேர்ந்த பயண அனுபவம்)


னிதருள் எத்தனை சுய விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் இந்த காதல் என்ற ஒன்றின் கீழ் எப்படியாவது இணைந்துவிடுகிறான்! "காதல்" எத்தனை வலிமையான, வசீகரமிக்க ஏகாந்த சொல்! இன்றளவும் காதல் என்ற ஒன்றை நோக்கியே பெரும்பால மனித மனங்கள் சுழலுகின்றன, என்பதை அடிக்கடி ஏதாவது ஒரு வினோத செய்தி, செய்கைகளின் மூலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன! சமீப காலமாக அதன் வடிவம் மாறுகின்றதே தவிர மூலமான "காதல்" இன்னும் கற்புடனே இருக்கிறது என நம்புகிறேன்!



(கேடி பில்லா இவரே தான் )



காதலை வெளிப்படுத்தி அதை முன்னெடுத்து செல்வதில் நகரத்துக்கும், கிராமத்துக்கும் சற்று மாறுதல் இருக்கிறதே தவிர, காதலில் அல்ல! என்ன நகரத்தில் சந்தித்து பேசிக்கொள்ள வாய்ப்பு எளிது, கிராமத்தில் சற்று சிரமம்! தொழில் நுட்ப வளர்ச்சியால் அதுவும் எளிதான மாதிரி தெரிகிறது! இருந்தும் சில கட்டுப்பாடுகள் நகரங்களை  விட கிராமங்களில் சற்று அதிகம்! சமீபத்தில் ஊருக்கு சென்றிருக்கையில் பேருந்தில் கண்ட ஒரு தலைக்காதல் அப்படியே உங்களுக்கும்...

அம்மிணி, கூட ரெண்டு புள்ளைங்களோட வந்து  பஸ்ல ஏறிச்சி, ஒரு கையில நோட்டு, இன்னொரு கையுல மொபைல் , கண்ணுல காதலோட ஒரு வாலிப முறுக்குடன் இளந்தாரிப்பய ஒருத்தன் ஏறினான்! அவன பார்த்த வுடனே சொல்லிப்புடலாம், காதல் வெறியில கண்டமேனிக்கு திரியுறான்னு  அப்படியொரு கள அய்யா முகத்துல! அம்புட்டும் காதல் வெறி ! சரி, மூணு புள்ளைங்க இருக்கே இதுல எது தலைவரோட ஆளா இருக்கும்ன்னு சின்னதா நோட்டம் விட்டேன். ஒரு மண்ணும் வெளங்கல! பொழுது போகணுமில்ல நடப்பதை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன்! டப்புன்னு ஒரு சந்தேகம் பய புள்ள மூனையும் ஒரே நேரத்துல கட்டைய கொடுக்குறானோன்னு! 


அங்கிட்டு மூணுல, ஓன்னுத்தான் பதினாறு வயதினிலே மயிலு கணக்கா பயல, மாவா அரைச்சுது, மத்த ரெண்டும் எந்த மாரியம்மன நெனச்சிக்கிட்டு இருந்ததோ யாருக்கு தெரியும்! எடையில கொஞ்சம் கூட்டம் கொறைஞ்சதும், ஏன்டா தம்பி நிக்குற அதான் எடம் இருக்குதுல்ல செத்த உக்காரலமுள்ள என்று பெருசு ஒன்னு சல்லைய கூட்ட (எல்லா பஸ்லயும் இப்படி ஒரு பெருசு ஏறிடும் போல, திருந்துங்க சாமிகளா !!!), நம்ம தம்பி, பெருசுக்கு பார்வையிலே பதிலச் சொல்லிட்டு பட்டைய கெளப்ப ஆரம்பிசிட்டாப்ள! வந்த வேலை முக்கியமுல்ல! 

திடிர்னு நினைவு வந்தவனாய் கையிலிருந்த கொரியன  (தான் நினைக்குறேன்) சீண்ட காதுக்கே நுழையாத இந்தியில பாட ஆரம்பிச்சிட்டாப்ள! காதல் வந்தா கண்ணு தெரியாதும்பாங்க இங்க என்னடான்னா காதும் கேக்காது போல! அங்கன மயிலும் பயலுக்கு பார்வையாலே வெறி ஏத்த பரவச நிலைக்கு போயிட்டாப்ள!  அஞ்சாறு பாட்டு ஓடியிருக்கும் அதுல ஒன்னு கூட தமிழுல இல்ல, சிலது இந்தி , இன்னொன்னு என்னா மொழின்னு வெளங்கல. இப்படியொரு சங்கீத கச்சேரி நடத்தி தான் தமிழன் என்பதை அட்சரசுத்தமாய் நிருபித்தான்! (ஆமா அவனும்  அந்த புள்ளைய பாக்குறான் , அந்த புள்ளையும் அவன  கொஞ்சுது . அப்புறம் என்னா கருமத்துக்கு? இந்த பாட்ட போட்டிருப்பான் ? இன்னும் விடை கெடைக்கல எனக்கு !!!)           

ரெண்டு பேரோட ஊரு வந்திருக்கும் போல, நாயகனும், மயிலும் இறங்கி கொள்ள பேருந்தே காலியானது போல உணர்ந்தேன்! பின்ன பொழுதுக்கும் பொழுதும் போச்சி, பதிவும் ஒன்னு தேருச்சில்ல. இதிலும் பாருங்க அவன் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவளும் தான்! இருந்தும் இரண்டு பேரின் முகத்திலும் ஒரு இனம்புரியா பிரகாசம்! இதுதான் காதலின் வலிமை. வேறு எந்த உறவுக்கும் கிடைத்திடாத கிளர்ச்சி, வீரியம் இந்த காதலுக்கு தான் உண்டு! காதல் எண்ணங்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்தாலே போதும் எத்தனை மாற்றங்கள் மனிதருள்! நல்ல காதலுக்கு கரம் கொடுத்து வலு சேர்த்திடுவோம் நண்பர்களே ! 

      

Post Comment

14 கருத்துரைகள்..:

கார்த்திக் சரவணன் சொன்னது…

ஹிஹி... நான் எலக்டிரிக் டிரைன்ல தினமும் போறதால இதே மாதிரி நிறைய பாக்கிறேன்... இதப்பத்தி கூட ஒரு பதிவு எழுதலாமே சரவணா....

aavee சொன்னது…

சம்முகம், எடுறா கட்டைய !!

ரூபக் ராம் சொன்னது…

// நல்ல காதலுக்கு கரம் கொடுத்து வலு சேர்த்திடுவோம் நண்பர்களே ! // இது என்னமோ உள் குத்து இருக்கற மாதிரி தெரியுதே.
அரசனும் அடிக்கடி ஊர் பக்கம் போறாரு. சங்கம் கவனிக்க !

Unknown சொன்னது…

பிரமாதம்யா... :)))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஜூப்பரு...!@

rajamelaiyur சொன்னது…

விவேக் போல ஒரு குருப்பை வைத்துகொன்டு காதலர்களுக்கு உதவ ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமே???

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அடாடா... என்ன ஒரு ரசனை! :)

Unknown சொன்னது…



முடிவில் தெரிந்தது உம் தலைக்
காதல்! சங்கம் விசாரித்து ஆவன செய்க!

ராஜி சொன்னது…

பஸ்சுல போனோமா?! நீயும் ஒரு பொண்ணை ரூட்டு விட்டமான்னு இல்லாம!! இதென்ன ஊரான் காதலை வேவு பாக்குறது!?
திஸ் ஈஸ் டூ பேட்!!

உழவன் சொன்னது…

அண்ணன் காதல் விசாரனையில் இறங்கியுள்ளார்!!!

Unknown சொன்னது…

காதல் என்பது அலுக்கவே அலுக்காத ஒன்று, இப்படி எல்லாம் பார்க்கும்போதுதான் நாம் எல்லாம் எப்படி நடந்து கொண்டு இருந்திருப்போம் என்று புரிகிறது ! :-)

பதிவர் திருவிழாவில் உங்களை பார்த்தேன், ஆனால் பேச முடியவில்லை, உங்களது பதிவுகளை படிப்பவன் நான், நன்றாக எழுதுகிறீர்கள் ஜி !

மாதேவி சொன்னது…

வழமையாக கவிதையில் காதல் மயக்கும்.இப்போது நேரடி ரிப்போட்:)))

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பஸ்ஸில் பயணிக்கையில் இது போன்ற நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன்! சுவையாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

Seeni சொன்னது…

athu sari...