வாகை சூட வா எனும் தரமான சினிமாவை திரையரங்கில் பார்த்து வியந்த சராசரி பாமர இரசிகன் நான், நையாண்டி என்கிற மகா கேவலத்தையும் முதல் நாளே திரையரங்கில் சென்று பார்த்து நொந்த கடைக்கோடி தமிழ் இரசிகனின் மனக்குமுறல் இது! படம் பார்த்து இத்தனை நாள் கழித்து எழுதுவதற்கு காரணம் இருக்கிறது!
தோழர் பிலாசபி பிராபகரன் சொன்னது போல் வாகை சூட வா என்னும் தரமான படத்தை திரையரங்கில் பார்க்காமல் போன பெரும்பாலானவர்கள் தான் நையாண்டியை இங்கு கிழித்து தொங்கவிட்டு இருகின்றனர்! என்னைய்யா உங்க நேர்மை?
வாகை சூடவா என்னும் நேர்த்தியான சினிமாவை வெற்றி பெற செய்யாத நாம் நையாண்டியை குறை கூறுவதில் என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நானும் எழுதாமல் இருந்தேன்! ஆனால் சில நாட்களாக என் கண்ணில் கண்ட நையாண்டி விளம்பரங்கள் மண்டையை கிறுகிறுக்க வைத்தமையால் தான் இந்த பதிவு!
நையாண்டிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் செம நையாண்டியாக இருக்கிறது அதுவேறு கதை! களவாணி என்ற சுமார் படத்தையும், வாகை சூட வா என்ற விருது படத்தையும் கொடுத்த சற்குணம் ஏன் இந்த அளவுக்கு கீழிறங்கி மட்டமான படத்தை கொடுத்திருக்கிறார் என்று சற்று யோசிக்கையில் ஒன்று மட்டும் என் புத்திக்கு தெளிவாக விளங்குகிறது!
களவாணியில் தான் இயக்குனர் என்பதை நிறுத்திக்கொண்ட சற்குணம் வாகை சூட வா வில் சிறந்த இயக்குநர் என்பதை நிருபித்தவருக்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை கவலை தான் நையாண்டி என்ற வீழ்ச்சியை எடுக்க வைத்திருக்கிறது அதற்கு ரசிகர்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்!
பெரிய பட்டாளமே வைத்துக் கொண்டு சோபிக்க தவறிய சற்குணம் அவர்களிடம் வைக்கும் சில கோரிக்கைகள் ....
மதுரைக்காரர்கள் தன்னோட படங்களில் தன் மண்ணையும், மக்களையும் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்வது போல் நீங்களும் ஆசைபடுவது தப்பில்லை நேர்த்தி தேவையாய் இருக்கிறது பிரதர்! (மதுரை, மதுரை என்று அவர்கள் கொடுக்கும் அக்கப் போர் அது வேறு கதை)
திரைக்கதை உங்களுக்கு நன்றாக வரும் என்பதை முந்தைய இரு படங்களும் உணர்த்தின, அதை தவிடு பொடியாக்கியது இந்த நையாண்டிஎன்பதை மனதில் வையுங்கள் பாஸ்!
பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை முந்தைய பட பாடல்கள் எவ்வளவு அருமையாக இருந்தது! இந்த மாதிரி குப்பை சினிமாக்களை எடுக்க தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள், குட் புக் லிஸ்டில் இருக்கும் நீங்கள் எடுக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து!
மீண்டும் ஒரு தரமான சினிமாவில் சந்திப்போம்!
Tweet |
13 கருத்துரைகள்..:
nalla sonnenga!!
வணக்கம்
நையாண்டிப் படம் நினைத்த மாதிரி வெற்றி கிடைக்காது என்பது இரசிகர்களின் கருத்தாக உள்ளது
பதிவு அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாகை சூட வா வில் சிறந்த இயக்குநர் என்பதை நிருபித்தவருக்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை கவலை தான் நையாண்டி என்ற வீழ்ச்சியை எடுக்க வைத்திருக்கிறது அதற்கு ரசிகர்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்!######factu factu factu......
//பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை//
நல்லாத்தானே இருக்கு...! ஏ லேல்லே ... இனிக்க இனிக்க ... தனுஷ் பாடுனத தவிர மற்ற பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்குங்க ....! ஒரு வேளை படத்தோட பார்க்கும்போது நல்லா இல்லையா ...?
சின்ன சறுக்கல் என்று எடுத்துக் கொள்வோம்...
எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லாத நய்யாண்டி படத்திற்கு 'நஹி'யாண்டி என்றே பெயர் வைத்து இருக்கலாம் !
வியாபார உலகம் ,அடுத்து சுத்த மசாலாப் படம் எடுத்து வெற்றி பெறுவார் சற்குணம் !
த.ம 3
மொத்ததில நம்மை நையாண்டி பண்ணிவிட்டார்... அடுத்தப் படத்திலாவது சோபிக்கிறாரா பார்ப்போம்.
தலைக்கணமா இருக்குமோ!?
யோவ் அரசா, நம்ம ஜீவன் சுப்புவ நம்பி பாட்டு கேக்காதீருமையா அவருக்கு ஆனந்தயாழை மாதிரி அற்புதமான பாட்டும் பிடிக்கும் அந்த வருசத்தோட மொக்க பாட்டும் பிடிக்கும்...
#யப்பாடி கோர்த்து விட்டாச்சு இன்னிக்கு ஒரு சண்ட இருக்கு
இதுவும் ஒரு வகையில நல்லது தான்... இனிமே சற்குணம் நையாண்டி மாதிரி மொக்கையை எடுக்க மாட்டார்... வாகை சூட வா மாதிரியான படம் எடுக்கல'ன்னாலும் களவாணி மாதிரி ஜாலி படமாச்சும் எடுப்பாரு...
அருமையான விமர்சனம்
உண்மைதான் நையாண்டி கவிழ்ந்தது.....
வாகைசூடவா, களவாணி பார்த்தேன்! நையாண்டி பார்க்கவில்லை! தப்பிச்சேன்! நல்லதொரு கேள்வி இயக்குனருக்கு!
கருத்துரையிடுக