புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 18, 2014

ஊர்ப் பேச்சு # 15 ( Oor Pechu # 15)




சாணியை குப்பையில கொட்டிவிட்டு கூடையில ஒட்டியிருந்த ஈர சாணத்த போக்க, கூடைய திருப்பி வைச்சி ரோட்டுல ரெண்டு தட்டு தட்டிவிட்டு தும்ப செடிக மேல போட்டுவிட்டு கெளம்பினார் கனகசபை வம்பரம் தழ ஒடிக்க...

மேல கூடை விழுந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பூவுமேல சாணி விழுந்த கவலையா இருக்கும் போல தொவண்டு ஒடைஞ்சி அழுவுதுங்க தும்ப செடிக,....

மேக்கால பக்கம் பல்லு தேக்க வேப்பங் குச்சி ஓடிச்சிட்டு இருந்த இரத்தினம் பார்த்துட்டு என்னைய்யா காலையில வம்பரம் தழ ஓடிச்சிட்டு இருக்கே ன்னு, கெள எட்டாம தாவி கிட்டு இருந்த கனகசபைய பார்த்து கேட்டார்...

ஓ, நீ தானா இரத்தினம்... ரெண்டு கோழிவோல அட வைச்சிருந்தேன், எதுல பேன் புடிச்சுதோ தெரியல, வூடெல்லாம் பேனா இருக்கு .. மேலெல்லாம் ஊரி தொலைக்குதுக, அசந்து தூங்கி ரெண்டு நாளாச்சி ...

சாய்ப்பு தான் பூச்சி மருந்து விக்கிறானே, வாங்கி வந்து போட்டியா?

எல்லா எழவையும் போட்டு பார்த்தாச்சி, அதங்குவனாங்குது? இனி கூட்ட இடிக்கிறது தான்யா மிச்சம்.. வம்பரங்கொத்து நாலு போட்டா கொஞ்சம் ,மட்டுப்படும்னு என் பொண்டாட்டி சொன்னா, சரி அதையும் போட்டு பார்த்துடலாமுன்னு வந்தேன்.. இங்க என்னடான்னா மரம் நீண்டு வளந்து நிக்குதுக...

நீ ஒரு மனுசன்யா , நாலைஞ்சி நாளுல காணாப் போற பேனுங்களுக்கு போயி கூட்டை இடிக்கனுங்கற.. வம்பரங்கொத்து போடு எல்லாம் சரியாயிரும்...

அதான் பாக்குறேன் இரத்தினம், பாலை பாலையா கத்தாழ நடுப்புற வைச்சி பொட்ட மண்ணால செஞ்ச கூடு ...

அதான் சொல்றேன் கனகசபை, ஆத்தரத்துல இடிச்சிட்டின்னா அதே மாதிரி கட்டமுடியுமா? ரெண்டு நாளைக்கு பொறு ... எல்லாம் சரியாயிரும்....
சரி ரெண்டு கோழின்னு சொன்னியே எத்தனை முட்டை வைச்ச, எத்தன பொரிஞ்சது? எத்தன கூமுட்ட ..?

ஒரு கோழிக்கு எட்டு கணக்கா, பதினாறு வைச்சேன் ... பன்னெண்டு பொரிஞ்சிடுச்சி, நாலு வெளங்காம போச்சி ..

வைச்ச எட்டையும் சம்முன்னு பொரிச்சிட்டு வூட்டையே சுத்தி வருது செவத்தது... இந்த கறுத்த சனியன் தான் வைச்சதுல நால பொரிச்சது, மீதி நாலும் கூ முட்டையா போனதுமில்லாம, பேன வேற கொடுத்து உசுர வாங்குது...

அது என்னய்யா பண்ணும், கோழியே வாங்கியாந்த மாதிரி சொல்றே, எல்லாம் படைப்பு தான் ... சலிச்சிக்காத வளக்குற வழிய பாரு.. கறிக்குன்னு வளக்குற கோழிவோ நோய பரப்புதாம்.. நாட்டுக்கோழிக்கு மவுசு கூடுது, கூடவே வெலையும்...

ஆமாய்யா, நானும் கேள்வி பட்டேன்... ஏன்யா இரத்தினம் முன்னல்லாம் கோழி கொழம்பு வைக்குற வீட்ட ரெண்டு தெரு தாண்டி நின்னாலும் கண்டுபிடிச்சுரலாம், இப்பல்லாம் சட்டிய மோந்து பாத்து கூட கண்டு பிடிக்க முடிலையே ...?

ஆமாய்யா கனகசபை, நாட்டுக்கோழி மணக்குற மணம் வேற எதுல இருக்கு சொல்லு ...? இருந்தும் அப்பல்லாம் மசாலா எல்லாம் கையில அரைச்சி போட்டாங்க ரெண்டு மூணு தெரு தாண்டியும் மணத்துச்சி ...
கடையில வாங்கி போடுற தூளுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்குதுல்ல ...

அதுவும் நெசந்தான், இரத்தினம் ... சரி சரி பேச்சி எங்க ஆரம்பிச்சி எங்கேயோ போய்டுச்சி .. கொஞ்சம் சோலி இருக்கு நாம பொறவு சாவகாசமா பேசலாம்யா ...

சரிய்யா கனகசப போயிட்டு வா ... நான் சொன்னதையும் மனசுல வைச்சுக்கோ ..  நாட்டு கோழிவோளுக்கு மவுசும், மதுப்பும் கூடிக்கிட்டே வருது .. அதனால பாத்து முடிவெடு ... 

சரிய்யா இரத்தினம் ,...
     


Post Comment

6 கருத்துரைகள்..:

சென்னை பித்தன் சொன்னது…

உயிரோடமுள்ள எழுத்து

வெற்றிவேல் சொன்னது…

நாட்டுக் கோழி ருசிக்கு ப்ராய்லர் கம்மி தான் அண்ணா. இப்போலாம் ப்ராய்லர் கோழி சாப்டனும்னாலே சொரம் வந்துடுமோன்னு பயமா இருக்கு...

நல்லாருக்கு அண்ணா...

சுகந்தி பிரபாகரன் சொன்னது…

சில ஆண்டுகளுக்கு முன்னால நான் படிச்ச இந்த நடை எனக்கு அந்த இனிமையான காலங்கள ஞாபகப்படுத்துது... அருமையா இருக்கு... தொடர்ந்து எழுதுங்க அரசன்... :)

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கோழி வளர்ப்பு பற்றி தெரியாது! ஆனாலும் ரசிக்க வைத்த பதிவு! நன்றி!

aavee சொன்னது…

நாட்டுக் கோழி நாட்டுக் கோழிதான்.. (உங்க எழுத்த சொன்னேன்)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கிராமிய் மணத்துடன் உங்கள் பதிவு. வாழ்த்துகள் அரசன்....