புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 09, 2014

சோறு ...


சோறு கண்ட இடம் சொர்க்கமென்று இருந்திடாதே, என்ற வாசகம் எத்தனை முறை என் காதுகளை கற்பழித்திருக்கும் என்று கணக்கில்லை, எங்கப் பக்கம் இந்த சொலவடையை சொல்லாத வாயுமில்லை. எனக்கு சோறு புடிக்காது என்று சொல்லும் அதிசய மனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை, ஒருவேளை உங்களில் யாரேனும் கேட்டாலோ, பார்த்தாலோ தகவலுப்பனுங்கள் எனக்கு...

உணவின்றி உயிர் வாழ்தல் கூடுமா? என்றால் முடியாது என்பது தான் என்னோட தீர்க்கமான பதிலாக இருக்கும், ஏன் மூர்க்கமான பதில்னு கூட சொல்லலாம். இந்த உணவுக்காக நம்மாளுங்க படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது. அது நம்மோட பிரச்சினை இல்லையென்பதால் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு நம்ம பிரச்சினைக்கு வருவோம்.

இந்த சோற்றுக்காக பல போர்கள் நடந்திருப்பதாக பண்டைய இலக்கியத்தில் படித்ததாக நினைவு, பல சோற்று மன்னர்கள் வாழ்ந்த வீரம் செறிந்த மண்ணின் மைந்தர்களைப் பார்த்து வெறும் பிரியாணிக்காக சோரம் போய்விட்டார்கள் என்று சொல்லும் மடையர்களை? கண்டு "நகைக்க"த் தான் தோன்றுகிறது.
இவர்களை தூற்றி விட்டு பிரியாணியை சுவைக்கப் போகும் அந்த நாக்குகளைப் பற்றி நமக்கேன் கவலை?

நானொரு சோறு விரும்பி என்று சொல்லிக் கொள்வதில் எந்த வெட்கமும் எனக்கு கிடையாது. உண்பது ஒன்றும் எளிதான விசயமல்ல, அது ஒரு "பெருங்கலை" என்று சொல்ல முடியாது என்றாலும் "கலை" என்று சொல்லுவதில் தவறிருக்காது. 

நாகரீகம் கருதி நளினமாய் சாப்பிடுவார்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் செய்யும் சேட்டைகள் இருக்கே அய்யயோ ரண கொடூரம். உலக நாடுகள் கிடைத்ததை தின்றுவிட்டு நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளைகளில், நம்ம ஆட்களோ விதவிதமான உணவு பதார்த்தங்களை கண்டு பிடித்து உண்டு களித்தனர் என்பது மிக முக்கியமான வரலாற்று பதிவு.

சில நேரங்களில் ஏற்படும் கோபங்களை நான் சோற்றின் மீது தான் காட்டுவேன், எல்லோரும் தூக்கி விசிறினால், நான் வயிறு முட்ட தின்பேன். இப்படித்தான் என் கோபங்களை தணித்துக் கொள்வேன். 

வயிறு ஒரு அதிசய உறுப்பு. நாக்கும், வயிறும் இல்லையெனில் உலகில் சண்டையே நடை பெறாது. ஆனால் அவ்வளவு எளிதில் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாது. வெகு சிலரால் முடிந்த ஒன்று. ஆனால் அவர்களை காண்கையில் மண்டையில் சட்டென்று தோன்றும் , இவர்களுக்கு சுவை உணர் சுரப்பிகள் என்னவாயிருக்கும் என்று தான்.

 சாப்பிட தெரியாதவர்கள் மாதிரி நடித்து எச்சில் விழுங்குவதை விட, உண்டு உயிர் வாழலாம் என்பது என் கொள்கை.....


Post Comment

9 கருத்துரைகள்..:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

சாணளவு வயிறு படுத்தும் எவ்வளவு!!!

நல்ல கொள்கைதான்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சமையல் கலையையும் வளர்க்கின்றோம்... (!)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எண் சாண் உடம்புக்கு ஒரு சாண் வயிறே பிரதானம்.......

சீனு சொன்னது…

யோவ் எதுக்குயா இப்ப இப்படி ஒரு பதிவு...யாரு உரண்ட இழுத்தது

”தளிர் சுரேஷ்” சொன்னது…

போதும் என்ற சொல்ல வைப்பது வயிறு மட்டுமே! உழைப்பது உணவின் பொருட்டே! அருமையான பதிவு! நன்றி!

பெயரில்லா சொன்னது…

ஓவர் குசும்பு தான் .....போ ...

வெற்றிவேல் சொன்னது…

இதனால இந்த சமூகத்துக்கு என்ன தலைவரே சொல்ல வரீங்க...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்த இடுகை "பசி" என்னும் அருமையான திரைப்படத்தை நினைவூட்டியது! பசி படுத்தும் பாடு......

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

துளசிதரன், கீதா