புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 14, 2014

இது போதும் மன்மதா!!!



அழுந்தப் பதிந்த நகக் கீறலில் 
குருதி கசியக் காண்கிறேன்!

திட்டமிடாத்  தீண்டலில் 
திகைத்து திளைக்கிறேன்!

சூரியத் துண்டுகளை 
நிலவெரிக்கும் நேரமிது!

தேகம் முழுதும் 
அவன் முரட்டு ரேகைகள் 
நிரம்பியிருக்கிறது!

அவனது வியர்வையை, 
கண்ணீரால் துடைக்கிறேன்!

விழுதுகளாய் செலுத்தியவனிடம் 
வீழ்ந்து போனேன்!

இதழ்களில் பனித்துளி 
விரும்பிச் சுமக்கிறேன்!

இது போதும் மன்மதா,
இனியோர் சென்மம் 
வேண்டாம் எனக்கு!!!

Post Comment

5 கருத்துரைகள்..:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அசத்திட்டீங்க நண்பரே! மன்மதனை! ரசித்தோம்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இது போதும் மன்மதா இனி ஒரு சென்மம் தேவையில்லை!// அசத்துங்க! வாழ்த்துக்கள்!

ராஜி சொன்னது…

பெண் கவிதை எழுதுற மாதிரி எழுதிட்டா இது உங்க அனுபவமில்லைன்னு நம்பிடுவோம்ன்னு நினைச்சீங்கள் மிஸ்டர் அரசன்!?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை....

பாராட்டுகள் அரசன்.

kowsy சொன்னது…

கவிதை அருமை . பாராட்டுக்கள்