புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 07, 2014

மானஸ்தன் வீடு ...




சட்டென்று கொட்ட
துவங்கிய கோடை மழைக்கு
ஒதுங்கினேன்,
ஊரைத்தள்ளியிருக்கும் 
"அந்த" வீட்டில்!

செம்மண் சுவர் தவிர்த்து
நான்கைந்து மூங்கில் கழிகளும்,
கூடவே மக்கிய தென்ன ஓலைகளும்,
எச்சமாய் நிற்கின்றன
இராசுவின் பெயரைச் சொல்லியபடி!

கள்ளக்காதலினால்,
மனைவியை கொன்று,
அன்றிரவே மகனோடு,
தானும் தூக்கிட்டுக் கொண்டாராம்,
மூன்று வருடத்துக்கு முந்திய 
ஐப்பசி  
அடைமழை இரவொன்றில்!

சமீபமாக பொழுது சாய்ந்தவுடன்  
அரவமற்ற வீட்டினுள் 
மூக்கை துளைக்கும்  மல்லி வாசணை,
கூடி முயங்கும் முனகல்
அடிக்கடி கேட்கமுடிறது!

கள்ளப் பதறுகளுக்கு 
புகலிடமா போச்சு ...
மானஸ்தன் வீடு 
மானங்கெட்டும் போச்சி ...


Post Comment

9 கருத்துரைகள்..:

சதீஷ் செல்லதுரை சொன்னது…

மானஸ்தன் வீட்ட அனுபவஸ்தன் சொல்லிட்டாப்ல ...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மானஸ்தனின் வீடு மானங்கெட்டுப்போச்சு! எப்படிய்யா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? அருமை!

rajamelaiyur சொன்னது…

வார்த்தையில் விளையாடுரிங்க பாஸ்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்ம்ம்ம்...

இதுக்காகவே பேய் வீடுன்னு கதை கட்டி விட்டுருப்பாங்க!

Unknown சொன்னது…

மானஸ்தனுக்கு எப்படி வந்ததோ கள்ளக்காதல் ?
த ம 5

Seeni சொன்னது…

அட..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாம் போச்சி...!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை! அருமை! கவிதைல பின்றீங்க போங்க!! ரசித்தோம்!

arasan சொன்னது…

மானஸ்தனுக்கு எப்படி வந்ததோ கள்ளக்காதல் ?
த ம 5// கள்ளக்காதல் அவருக்கில்லை , அவர் மனைவிக்கு தான் சாரே ..