புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 10, 2014

எரியுலை நீர்தான் என்னிலை...
னம் படபடக்கிறது,
கணக்கு முடிவாண்டு என்பதால் 
அலுவலகத்தில் 
இனிவரும் நாட்கள் 
எரியுலை நீர்தான் என்னிலை,
கூடவே இந்த தொல்லையும்.

கோபத்தில் சொன்னாலும்  
வரமால் போனால்  
வாழ்வே பெருந்தொல்லை!

அம்மா இல்லா சுமையை 
இந்த நாட்களின் இரவுகள் 
உணர்த்திக் கொல்கின்றன!

மாதமொருமுறை 
சிறகொடிந்து, 
சிறகு முளைக்கும் 
விசித்திர 
பெண் பட்டாம்பூச்சி நான்!

நாசி நெறிக்கும் 
புகை வீதிகளைக் கடந்து,
மாநகரப் பேருந்தின் நெரிசலில் 
மார்புடைந்து கீழ் இறங்குகையில் 
நசுங்கிய வேப்பம்பழமாகிறது 
மனசும் - உடலும்!

தேனீர் இடைவேளையில், 
அலுவலக சன்னல் கம்பிகளுக்கு வெளியே 
சிறுமியொருத்தி சில்லாடுவதைக் கண்டு, 
மனம் நசிந்து விரைகிறேன் 
இருக்கையை நோக்கி!

வாழ்க்கை சுகமானதுதான், 
எப்போதும் 
சுவையாய் இருப்பதில்லை!


Post Comment

3 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வாழ்க்கை பற்றிய கடைசி வரிகள் கலக்கல்! சிறப்பான கவிதை! நன்றி!

kowsy சொன்னது…

உண்மைதான் .சுவையாய் மாற்ற முயல்வதுவே வாழும் வழி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்றுமே இனிமையாக இருந்துவிட்டாலும் சலித்து விடும்.....

நல்ல கவிதை அரசன்.