புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 19, 2012

ஊர்ப்பேச்சு # 4


ஊர்ப்பேச்சு # 1                        ஊர்ப்பேச்சு # 2                                 ஊர்பேச்சு # 3

என்ன கனகசபை, என்னய்யா காலையிலே கூடையோட வர, என்ன வேலை இன்னைக்கு 


வேலை ஒண்ணுமில்ல ரத்தினம், தோட்டத்துல கொஞ்சம் சாணம் கெடந்தது அதை அள்ளி கொட்டிட்டு வாறன்...

சரி வா அந்த கல்லு பக்கம் உக்காந்து பேசுவோம், வர வர பனி அதிகமா கொட்டுற மாதிரி தெரியுதே கனகசபை 

என்ன ரத்தினம் இந்த பனிக்கே இப்படி சொன்னா எப்புடி மார்கழி, தை மாசம் கொட்டுற பனிய என்னத்த சொல்லுவ...கை கால் எல்லாம் வெறச்சி போய்டும்...

பழகிக்க வேண்டியது தான் கனகசபை, ஆமா அன்னைக்கு ஏதோ பேசிட்டு இருந்தோம் கொஞ்சம் அவசர வேலை இருக்கு என்று சொல்லிட்டு போனியே அது என்ன தான் சமாச்சாரம் கனகசபை கொஞ்சம் வெளக்கமா தான் சொல்லேன்.



அது வந்து ரத்தினம் மக்கள் வேலை இல்லாம இருக்குறாங்க, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களை வளப்படுத்தனும் என்று தான் இந்த நூறு நாள் திட்டத்தை அறிமுகபடுதுச்சு இந்த மத்திய அரசு, அதுவே நம்ம உழைப்பாளிகளை சோம்பேறி பெரிச்சாளிகளா மாத்திடுச்சி, விடிஞ்சு எழுந்துருச்சா வேலை எங்கு கெடைக்கும் என்று கூடி பேசி வேலைக்கு போயிட்டு வந்த நம்ம சனம் இப்ப என்னடானா எட்டு மணி வரைக்கும் தூங்குதுங்க, சாவகாசமா எழுந்துருச்சி பாழாப்போன இந்த வேலைக்கு கெளம்பி போயிட்டு வந்து மறுபடியும் வந்து தூங்குதுங்க. ஏதோ கொஞ்சநஞ்சம் காணி வச்சிருக்குரவங்க மட்டும் பேருக்கு அல்லாடிட்டு இருக்காங்க, இப்படியே போச்சுனா இப்ப விவசாயம் பண்ணிட்டு இருக்குற கொஞ்ச பேரும் இருக்குற பூமிய வித்துட்டு நகரத்துக்கு போயிருவாங்க, அதுக்கும் நம்ம காசி மகன் வழி காட்டிட்டான், காசி இருக்குற வரைக்கும் இந்த மண்ணுல ஓடா உழைச்சார், அவர் போனதுக்கு அப்புறம் அவர் மகன் வந்தான் இருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்!

நானும் கேள்விபட்டேன், என்ன பண்றது கனகசபை நம்மதான் கெடந்து புலம்புறோம், ஒரு பயலுக்கும் புரிய மாட்டேங்குது, சொல்றத காது கொடுத்து கேக்குறதுமில்ல, ஊரு போற போக்க பார்த்தா சரியில்லைப்பா!

நம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது, இப்ப இருக்குற இளவட்டம் அப்படி இருக்குதா, கொஞ்சம் கம்மங்கருத தூக்கிட்டு வரதுக்குள்ள என் தம்பிக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குது என்னத்த சொல்ல!

ஒண்ணுமில்ல கனகசபை இரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாளுல அதோட வலுவ இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க, பாரு வரும் சந்ததி என்ன நிலையில் இருக்குமென்று! நல்லா விளைஞ்ச மண்ண தரிசா போட்ட பாவம் சும்மா விடாது! 

நொடிச்சி நிக்கிற விவசாயத்த வர எந்த அரசும் தூக்கி நிறுத்துற வழிய கண்டு பிடிக்குறதில்ல ரத்தினம், மாறா அரிசி இலவசம், டிவி இலவசம் , காத்தாடி, இப்படி இலவசமா கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி அடுத்த நிலைய பத்தி சிந்திக்க அவகாசம் கொடுக்காம மழுங்கடுச்சி வைச்சிருக்கு, இந்த தலைமுறை இப்படி இலவசத்தை அனுபவிச்சு உழைப்பை மறந்து வைச்சிருந்தா அவர்களுக்கு பிறக்கும் புள்ளைகள் கூட சோம்பேறியா தான் இருக்குமையா! 
அதுசரி 

"மோழி புடிக்கிறவன் சரியா புடிச்சா உழவு ஏன் கோணலா போவும்" 

சரி வா கெளம்புவோம் ரத்தினம் பேச ஆரம்பிச்சம்னா நேரம் போறதே தெரியாது ...





Post Comment

20 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

இருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்!

இது தான் இப்போதைய நிலை

நம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது,

அது பொற்காலம்

சசிகலா சொன்னது…

தம்பி அடுத்த தலைமுறைக்கு கவலை பட ஆரம்பிச்சாச்சி உண்மை தான்.

ஆத்மா சொன்னது…

இரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாள் அதோட வலுவா இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க,
///////////////////////////

உண்மை உண்மை உண்மை....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நடக்கும் உண்மை நிகழ்வுகள்...

Unknown சொன்னது…

காலத்தின் கோலம் இது மனம் வருந்தும் நிகழ்வுகள் இது..

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

உண்மை நிகழ்வுகள்! புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி! நன்றி!

அருணா செல்வம் சொன்னது…

என்னத்த சொல்லுறது...
கண்ணைவித்து நம் ஆளுங்க குளிர் கண்ணாடி வாங்கி போட்டுக்கிறாங்க...
ம்ம்ம்...
கதை அருமை அரசன்.

பெயரில்லா சொன்னது…

நல்வ சேவை உணர்வு!.
வாழ்க! அரசன்!
வேதா. இலங்காதிலகம்.

வெற்றிவேல் சொன்னது…

காலத்தின் கோலம்... இப்படித்தான் இனி...

சீனு சொன்னது…

உங்கள் ஏக்கம் புரிகிறது ராசா அவர்களே, சுவாசிக்கும் காற்றுக்கும் விலை வைக்கும் காலம் இது, சோம்பேறி ஆகுகிறோம் மற்றும் ஆக்கப் படுகிறோம்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்!

இது தான் இப்போதைய நிலை

நம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது,

அது பொற்காலம்//

உண்மைதான் சார் ..

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
தம்பி அடுத்த தலைமுறைக்கு கவலை பட ஆரம்பிச்சாச்சி உண்மை தான்.//

ஆதங்கம் தான் அக்கா

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
இரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாள் அதோட வலுவா இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க,
///////////////////////////

உண்மை உண்மை உண்மை....//

புரிதலுக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நடக்கும் உண்மை நிகழ்வுகள்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Ayesha Farook கூறியது...
காலத்தின் கோலம் இது மனம் வருந்தும் நிகழ்வுகள் இது..//

எல்லாம் தேவையற்ற வளர்ச்சியின் பாதிப்பு தான் தோழமையே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
உண்மை நிகழ்வுகள்! புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி! நன்றி!//

புரிய வைக்க தான் இந்த போராட்டம் சார்

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
என்னத்த சொல்லுறது...
கண்ணைவித்து நம் ஆளுங்க குளிர் கண்ணாடி வாங்கி போட்டுக்கிறாங்க...
ம்ம்ம்...
கதை அருமை அரசன்.//

உண்மைதான் , கண்ணை விற்று குளிர் கண்ணாடி எதற்கு ?

arasan சொன்னது…

kovaikkavi கூறியது...
நல்வ சேவை உணர்வு!.
வாழ்க! அரசன்!
வேதா. இலங்காதிலகம்.//

உணர்வுக்கு நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
காலத்தின் கோலம்... இப்படித்தான் இனி...//

பார்போம் தம்பி சிலரையாவது மாற்ற முயலுவோமே

arasan சொன்னது…

சீனு கூறியது...
உங்கள் ஏக்கம் புரிகிறது ராசா அவர்களே, சுவாசிக்கும் காற்றுக்கும் விலை வைக்கும் காலம் இது, சோம்பேறி ஆகுகிறோம் மற்றும் ஆக்கப் படுகிறோம்//

சோதனையாத்தான் இருக்கு சீனு ..
பார்ப்போம்