புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 12, 2013

ஊர்ப்பேச்சு # 8 ( Oor Pechu)




என்னய்யா கனகசபை உன்னை பார்த்தே ஒரு மாசமிருக்கும் போல, எங்க போயிருந்தே , ஏதேனும் வேலையா? என்ன சுகம் தானே?

வாய்யா ரத்தினம், நல்லா இருக்கேன், எனக்கென்ன குறைச்சல். 

என்ன ஆச்சு, இம்புட்டு சோர்ந்து பேசுறியே, ஏதேனும் பிரச்சினையா?

அத ஏன் கேக்குற ரத்தினம், எம் பொண்டாட்டியும், புள்ளையும் சொல்லிச்சிங்க நான் கேட்டனா?, மொரண்டு பிடிச்சி இந்த பட்டம் கல்ல (கடலை) போட்டே தீரனும்னு போட்டேன், இப்ப மொதலுக்கே மோசமா போச்சு! சித்திர மாசத்து வெயிலு மாதிரி காந்துது! மொளைச்சி  நாலு எலை கூட விடல அம்புட்டும் கருகிப்போச்சி... 

உனக்கு என்ன முன்னமே இப்படி தெரியுமா? விடுப்பா ? நம்ம தலையில என்ன எழுதி இருக்குதோ அதுதான் நடக்கும் .. இதை வுட்டா அடுத்ததுல புடிச்சிக்கலாம், நம்பிக்கைய வுட்டா எப்படி?

இப்படி நம்பி நம்பி தான் நாலு பட்டமா வெரைப்பயிர் கூட வெலைக்கு வாங்கிப்போடுறேன், ஒன்னு பேஞ்சி கெடுக்குது , இல்ல காஞ்சி கெடுக்குது. இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ ? இந்த லட்சணத்துல பொங்கல் ஒன்னு வருது, என்னத்த பண்ணுறது. ? இருக்குற அரசாங்கமும் எரியுற தீயுள எண்ணைய ஊத்துற கணக்கா இலவசம் இலவசம்னு கொடுக்குதே தவிர ஆக்கப்பூர்வமா செய்யுற மாதிரி தெரியல .

நம்ம புலம்பி என்னத்த ஆகப்போகுது, தேர்ந்தெடுக்கும் போதே நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கணும் அத வுட்டுட்டு இப்ப பொலம்புரதுல என்ன வரப்போவுது கனகசபை... என்ன நடந்தாலும் வரது வராம போய்டுமா? நம்ம மக்களும் கந்து வட்டிக்காவது கடன வாங்கி பொங்கல கொண்டாடத்தான் போறாங்க. 

நம்ம பருவ வயசுல நெல்ல அறுத்தபிறகும் ஏரியில தண்ணி குறையாம சமுத்திரம் போல நிரம்பி வழியும், இப்ப பார்த்தியா ஆடு மாடு வாய் நனைக்க கூட தண்ணி இல்லாம வறண்டு போச்சைய்யா... என்னமோ ரத்தினம் மக்கள் ஒரேயடியா மாறுன மாதிரி இயற்கையும் வெரசா மாறி போச்சி .. எங்க போய் முடிய போகுதோ?



கனகசபை அப்பவெல்லாம் மரத்தோடையும், இயற்கையோடும் மனுசன் பழகி வாழ்ந்தான், இப்ப எந்திரத்தோடு, செயற்கையோடு பழகி சீரழியுறான்!



இயற்கையோடு பழகாம இருந்தாலும் சரி, அழிக்காம இருந்தாலே போதுமய்யா, சீர்குலைஞ்சி கிடக்குறத எப்படித்தான் சீராக்குறதோ?
"வெடிச்சி கெடக்கும் வயக்காட்டு விரிசலில் ஒட்டிக்கிடக்குதையா நம்மள போல பாவப்பட்ட மக்களின் இத்தனை வருஷ சேமிப்பும் 
எஞ்சியிருக்குற சொச்ச உசுரும்"... சரிய்யா ரத்தினம் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்தை சொல்லிடு நாம கெளம்புவோம் ...

"அனைவருக்கும் தமிழர் பெருநாள் வாழ்த்துக்கள்"

Post Comment

2 கருத்துரைகள்..:

MARI The Great சொன்னது…

இனி வரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் இதுபோல் அடிக்கடி பருவமழை பொய்க்கும்,எல்லாம் காலநிலை மாறிவருவதால் ஏற்படும் விளைவுகள். இப்போதாவது நாம் நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் பூமியில் மனித இனம் அடியோடு அழிந்துபோக 90% வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது என்கிறது IPCC

r.v.saravanan சொன்னது…

"வெடிச்சி கெடக்கும் வயக்காட்டு விரிசலில் ஒட்டிக்கிடக்குதையா நம்மள போல பாவப்பட்ட மக்களின் இத்தனை வருஷ சேமிப்பும்
எஞ்சியிருக்குற சொச்ச உசுரும்"...

இன்றைய யதார்த்த நிலை வரிகளில் விதைக்கபட்டிருக்கிறது என்றால் மிகையல்ல

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அரசன்