புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 21, 2012

நான் செய்த நம்பிக்கை துரோகம்...


என்னடா இப்படி ஒரு தலைப்பு வச்சிருக்கானே, உண்மையைத்தான் சொல்கிறானோ இல்லை பொய் சொல்ல போறானோ என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது, சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான்! (போதும்டா உன் பில்டப்பு மொதல்ல மேட்டர சொல்லு...) 

சரி வாங்க பதிவுக்கு போவோம்(அப்படி ஏதும் இங்க இருக்கா என்று மட்டும் கேட்காதிங்க)எல்லோருக்கும் சின்ன வயசில் செய்த சேட்டைகள் அப்படியே மனசுக்குள் பசுமையான நினைவுகளாய் என்றுமே நிலைத்திருக்கும்! பின்னோக்கி பார்க்கும் தருணங்களில் நெஞ்சில் தேன் சுரக்கும் சுகமான நினைவுகள் அவை!

நான் சின்ன வயசில் சின்ன சின்ன தப்புகள் நிறைய செய்திருக்கிறேன், அதை அப்பவோ அம்மாவோ கண்டுபிடிக்காமல் இருக்க நிறைய பொய்கள் சொல்ல வேண்டி வரும், பேரும் நாடகம் நடத்தவேண்டி வரும்!(நாட்டுக்கு ரொம்ப முக்கியம்)

என்னை வீட்டில் மாட்டிவிட வாய்ப்பு தேடி திரியும் ஒரே ஒரு எதிரி யாரென்றால் அது என் தங்கை தான்!நிறைய நேரங்களில் அப்பாவிடம் தர்ம அடி வாங்க பேருதவியாய் இருந்த நல்ல உள்ளம் என் தங்கை மட்டுமே!இந்த பிரச்சினைக்கு எப்படி முடிவு கட்டுவது என தீவிரமாக மூளையை கசக்கி (பார்ரா) ஒரு நாள் நான் நைசா பேசி இனி என்னை மாட்டிவிடாதே, அது போல் உன்னையும் மாட்டி விட மாட்டேன் என்று ஒரு ஒப்பந்தம் (?!)(ரொம்ப முக்கியம்) போட்டுக்கொண்டோம் நானும் என் தங்கையும்!

சொன்னது போல் நான் உடைத்த கண்ணாடி விளக்கை பூனை தள்ளி விட்டுதான் உடைந்தது என எனக்காக பொய் சொல்லி என்னை காப்பாற்றிய என் தங்கையை, அது செய்த தவறை முதல் ஆளாய் ஓடி வந்து அம்மாவிடம் சொல்லி அடி வாங்கி கொடுத்தேன்!

இப்ப சொல்லுங்க நான் நம்பிக்கை துரோகம் செய்த எட்டப்பன் இல்லையா? (தம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா ? நீ நல்லா வருவடா , வரணும் ...)


Post Comment

25 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

நல்ல வருவா ராசா நல்ல வருவா... இப்ப தான் மெட்ராஸ் பவன் மீல்ஸ் முடிச்சிட்டு வந்தேன் ... ஹா ஹா ஹா

பட்டிகாட்டான் Jey சொன்னது…

பதிலுக்கு , ஆப்பு வரும்னுதா சென்னைக்கி எஸ் காகி வந்தீகளா?.

சசிகலா சொன்னது…

அடடா இப்படியா செய்விங்க இதுக்கு ஒரு விளம்பரம் வேற.

Admin சொன்னது…

தம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா ? நீ நல்லா வருவடா , வரணும் ...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... நன்றி... (TM 5)

Unknown சொன்னது…



உங்கள் இளமைக் கால நினைவுகள் ஒரு பதிவுக்கு உதவியது!

MARI The Great சொன்னது…

அண்ணே பிரமாதம்! (TM 8)

சென்னை பித்தன் சொன்னது…

மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்தான்!!

Seeni சொன்னது…

ithu verayaa.....

உழவன் சொன்னது…

//சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான்! (//

ஆமாம் ஆமாம்..நல்லா வருவிங்க அண்ணா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

nicE work.இதுதான் தமிழனுக்கு அடையாளம்.அப்படியே மைண்டைன் பண்ணுங்க

arasan சொன்னது…

சீனு கூறியது...
நல்ல வருவா ராசா நல்ல வருவா... இப்ப தான் மெட்ராஸ் பவன் மீல்ஸ் முடிச்சிட்டு வந்தேன் ... ஹா ஹா ஹா//

அவர் மீல்ஸ் இன்னைக்கு ரொம்ப காரம் பாஸ் ... நன்றி

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
பதிலுக்கு , ஆப்பு வரும்னுதா சென்னைக்கி எஸ் காகி வந்தீகளா?.//

அண்ணே அப்படியும் சொல்லலாம்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
அடடா இப்படியா செய்விங்க இதுக்கு ஒரு விளம்பரம் வேற.//

சும்மா ஒரு விளம்பரம் அக்கா

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
தம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா ? நீ நல்லா வருவடா , வரணும் .//

அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ஹா... ஹா... நன்றி... (TM 5)//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


உங்கள் இளமைக் கால நினைவுகள் ஒரு பதிவுக்கு உதவியது!//

ஆம் அய்யா ... நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
அண்ணே பிரமாதம்! (TM 8)//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்தான்!!//

அப்படியா அய்யா

arasan சொன்னது…

Seeni கூறியது...
ithu verayaa.....//

chummaa oru bildappu sir

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
//சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான்! (//

ஆமாம் ஆமாம்..நல்லா வருவிங்க அண்ணா...//

சரிங்க தம்பி ... வந்துடுவோம்

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
nicE work.இதுதான் தமிழனுக்கு அடையாளம்.அப்படியே மைண்டைன் பண்ணுங்க//

சீரியஸா சொல்லலையே சார்

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

இரசித்தேன்!
நன்றி!
காரஞ்சன்(சேஷ்)

ஹேமா சொன்னது…

அச்சோ...எல்லா வீட்டு அண்ணன்களும் இப்பிடித்தானோ !

ஹிஷாலி சொன்னது…

பொய்யின் அரசனே இப்போதும் பொய் சொல்கிறேர்களா