புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 01, 2012

இந்த கலாச்சாரம் தேவையா?


"நாளைய விடிவெள்ளி", "இந்தியாவின் அரண்", "மக்களை காக்க வந்த கடவுள்" இப்பேற்பட்ட வாசகங்களை கொண்டு போஸ்டர் அடிச்சி திரும்பும் இடமெல்லாம் ஒட்டி, மக்களை கதி கலங்க வைத்தது மட்டுமில்லாமல் பாவம் பாதி பேருக்கு கண் பார்வை பறி போகவும் காரணமாக இருந்த அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் சற்று ஒரு படி மேல் முன்னேறியுள்ளனர்! (ரொம்ப முக்கியம் இந்த முன்னேற்றம்)

அட ஆமாங்க, ரெண்டு மண்பானை, ரெண்டு மடக்கு, ரெண்டு பிளாஸ்டிக் டம்ளர் வாங்க எவ்வளவு செலவாகி இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள் தோழமைகளே! இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த அரசியல் தலிவருக்கு போஸ்டர் அடிச்சி அந்த ஏரியாவை கன்னாபின்னமாக்கிய செலவு எப்படியும் லட்சத்தை தொடும், இதே பாணியில் பக்கத்துக்கு தெருவில் ஒரு முன்னணி நடிகர்? அதகளப்படுத்தினார்! (உனக்கு ஏண்டா பொறாமை, பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான்)

வடக்குபட்டி ராமசாமியை மத்திய பிரதேசத்தில் மத்தால் அடித்து விட்டார்கள் என்கிற வதந்தி வந்தால் போதும், வடக்குபட்டி முழுதும் "ராமசாமியை அடித்தவர்களை உடனே கைது செய்!" என்கிற சுவரொட்டி தான் பல்லிளிக்கும்! ஹிந்தி காரனுக்கு எதுக்கய்யா தமிழில் சுவரொட்டி அதுவும் நம்ம ஊரில் எதற்கு! நேராக சென்று அங்கு முறையிடு அதுதானே முறை! (என் காசு நான் என்னவேணும் என்றால் பண்ணுவேன், உனக்கு எங்கே வலிக்குது)

அதை கூட ஒருவகையில் பொறுத்துக்கொள்ளலாம், இதை தான் சகித்து கொள்ள முடியவில்லை, ஒசாமாவுக்கும், ஒபாமாவுக்கும் கண்டன சுவரொட்டி ஒட்டுவது தான் உச்சபட்ச காமெடி, எங்கேயோ இருக்கும் அவர்களுக்கு இவர்கள் ஒட்டும் சுவரொட்டி எந்த பாதிப்பையும், பலனையும் தரப்போவதில்லை என்பது தான் நிதர்சன உண்மை! தன் இருப்பை நிலை நிறுத்த, இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்பதை அறிவிக்க தான் இப்படி ஒரு கலாச்சாரம்! (பெரிய அறிவாளி சொல்ல வந்துட்டார்) 

தன் கண்டங்களை பதிவு செய்ய விரும்பினால் நேரிடையாகவே உங்களது எதிர்ப்பை அளியுங்கள், இல்லை குறைந்த பட்சம் மின்னஞ்சலாவது அனுப்புங்கள், உங்களது குறைகளை அவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாவது கிட்டும், அதைவிட்டுட்டு எங்கோ இருக்கும் தலைவர்களுக்கு இங்கு சுவரொட்டி அடித்து சூழலை மாசுபடுத்துவதுடன் விளம்பரம் என்கிற பெயரில் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதிர் என்பது என் தாழ்மையான கருத்து . 


Post Comment

23 கருத்துரைகள்..:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அவங்களுக்கு இருக்கிற பொழப்பே இதான் அதை போய் குறைசென்னா எப்படி...


இதுக்கு ஒரு போஸ்டர் அடிச்சி கண்டனம் தெரிவிக்க போறாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தண்ணீர் பந்தல் அமைக்க போஸ்டர் அடீக்கிறாங்க சரி...

அதுல ஒரு நாளாவது தண்ணீரை ஊத்துறாங்களா பாருங்கா..

தண்ணீர் பந்தல் திறக்கிறதோடு சரி...

தண்ணீர் பந்தல் திறக்க விளம்பரப் படுத்த லட்சகணக்கில் செலவு செய்பவர்கள் தண்ணீரை ஊற்ற ஒரு ஆளை நியமித்தால் நல்லாயிருக்கும்..

Unknown சொன்னது…


அரசன்! இது தாழ்மையான கருத்தலல! தேவையான கருத்து!நான வழிமொழிகிறேன்.

அருணா செல்வம் சொன்னது…

அனைவரும் உணர வேண்டிய கருத்து அரசன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவரும் அறிந்து திருந்த வேண்டிய கருத்துக்கள்...

ஹேமா சொன்னது…

சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கருத்து.நல்லது நடக்கவேணும் அரசன் !

MARI The Great சொன்னது…

ஒரு சுவரொட்டி தயாரிக்க எந்த அளவு நாம் சுற்றுசூழலை மாசுபடுத்துகிறோம் என்று இவர்கள் அனைவரையும் ஒரு நாள் உட்கார வைத்து கிளாஸ் எடுக்க வேண்டும் முக்கியமாக சாப்பாடு போடாமல்..அப்பத்தான் இவர்களுக்கு உரைக்கும் (அது யாருய்யா அது உரைக்கனும்னா மிளகாய் சாப்பிடனும்னு சொல்லுறது.., சீனு தானே அது? )

r.v.saravanan சொன்னது…

இதுக்கு பேர் தன போஸ்டர் கலாச்சாரம் இப்படி சுவரொட்டி ஓட்டுறது அவங்க தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்றதுக்கு தான் அரசன்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அவங்களுக்கு இருக்கிற பொழப்பே இதான் அதை போய் குறைசென்னா எப்படி...


இதுக்கு ஒரு போஸ்டர் அடிச்சி கண்டனம் தெரிவிக்க போறாங்க...//

அப்படியாவது நான் பிரபலம் ஆகுறேன் அண்ணே ..
கொடுமை அண்ணே எல்லாம் காலக்கொடுமை

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
தண்ணீர் பந்தல் அமைக்க போஸ்டர் அடீக்கிறாங்க சரி...

அதுல ஒரு நாளாவது தண்ணீரை ஊத்துறாங்களா பாருங்கா..

தண்ணீர் பந்தல் திறக்கிறதோடு சரி...

தண்ணீர் பந்தல் திறக்க விளம்பரப் படுத்த லட்சகணக்கில் செலவு செய்பவர்கள் தண்ணீரை ஊற்ற ஒரு ஆளை நியமித்தால் நல்லாயிருக்கும்..//

திறந்து வச்ச மூணாவது நாளே ஒரு பயல காணோம்/...

arasan சொன்னது…

Seeni கூறியது...
mmmm//

Thanks for mmmm

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...

அரசன்! இது தாழ்மையான கருத்தலல! தேவையான கருத்து!நான வழிமொழிகிறேன்.//

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
அனைவரும் உணர வேண்டிய கருத்து அரசன்.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அனைவரும் அறிந்து திருந்த வேண்டிய கருத்துக்கள்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கருத்து.நல்லது நடக்கவேணும் அரசன் !//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ஒரு சுவரொட்டி தயாரிக்க எந்த அளவு நாம் சுற்றுசூழலை மாசுபடுத்துகிறோம் என்று இவர்கள் அனைவரையும் ஒரு நாள் உட்கார வைத்து கிளாஸ் எடுக்க வேண்டும் முக்கியமாக சாப்பாடு போடாமல்..அப்பத்தான் இவர்களுக்கு உரைக்கும் (அது யாருய்யா அது உரைக்கனும்னா மிளகாய் சாப்பிடனும்னு சொல்லுறது.., சீனு தானே அது? )//

ஒரு நாள் உட்கார வைச்சா குவாட்டரும் , கோழி பிரியாணியும் கேப்பாங்க தல .. என்ன பண்றது ..

(சீனு அரை கிலோ பச்சை மிளகாயோட அலையுராராம் ..)

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இதுக்கு பேர் தன போஸ்டர் கலாச்சாரம் இப்படி சுவரொட்டி ஓட்டுறது அவங்க தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்றதுக்கு தான் அரசன்/

உண்மைதான் சார்

ezhil சொன்னது…

என்ன அரசன் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டீங்களோ? அவர்கள் என்ன பிரச்சனை தீரவா சுவரொட்டியை ஒட்டுகிறார்கள். தாங்கள் இருப்பை உணர்த்தத்தான் ஒட்டுகிறார்கள்

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

//அதைவிட்டுட்டு எங்கோ இருக்கும் தலைவர்களுக்கு இங்கு சுவரொட்டி அடித்து சூழலை மாசுபடுத்துவதுடன் விளம்பரம் என்கிற பெயரில் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதிர் என்பது என் தாழ்மையான கருத்து . //
உண்மைதான் நண்பரே! நன்றி!

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

என்னுடைய வலைப்பக்கத்தில் காந்தி!
முடிந்தால் படித்து தங்களின் கருத்துரை இடுங்கள்! நன்றி!

arasan சொன்னது…

ezhil கூறியது...
என்ன அரசன் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டீங்களோ? அவர்கள் என்ன பிரச்சனை தீரவா சுவரொட்டியை ஒட்டுகிறார்கள். தாங்கள் இருப்பை உணர்த்தத்தான் ஒட்டுகிறார்கள்//

இந்த மாதிரி போஸ்டர்களை கண்டால் கொஞ்சம் உறுத்தியது அதான் இந்த பதிவு மேடம் ... நன்றி

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
//அதைவிட்டுட்டு எங்கோ இருக்கும் தலைவர்களுக்கு இங்கு சுவரொட்டி அடித்து சூழலை மாசுபடுத்துவதுடன் விளம்பரம் என்கிற பெயரில் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதிர் என்பது என் தாழ்மையான கருத்து . //
உண்மைதான் நண்பரே! நன்றி!//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
என்னுடைய வலைப்பக்கத்தில் காந்தி!
முடிந்தால் படித்து தங்களின் கருத்துரை இடுங்கள்! நன்றி!//

வருகிறேன் தோழரே