புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 17, 2012

ஊர்ப்பேச்சு # 1

என் தம்பிக்கு மூளை குழம்பி கிறுக்கு புடிச்சு அலையபோறானோ? தெரியலையே என்று தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை 
அவிழ்த்துவிட்டு அமர்ந்தார் கனகசபை ... 

என்னப்பா ? யாரை சொல்ற என்றார்  அருகில் அமர்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்த ரத்தினம் ...

நான் யாரை சொல்ல போறேன்... என் தம்பியைதான் சொல்றேன்!

ஏன் என்னாச்சி அவனுக்கு? நல்லாதானே இருந்தான் என்றார் ரத்தினம் ...

அடபோப்பா இப்ப வர வர அவன் போக்கே சரியில்லை, நடு ராத்திரியில கொலைவெறி பாட்டு கேக்குறான், திடிர்னு சிரிச்சிகிட்டே
காட்டுத்தனமா ஆடுறான்.. என்னடா என்னாச்சு என்றால் ஒண்ணுமில்லை என்கிறான்! - கனகசபை...



விடுப்பா இந்த வயசுல இதெல்லாம் சகஜம்.. நம்ம வயசுல எவ்வளவு பண்ணிருக்கோம்! எத்தனை ராத்திரி ராமசாமி சினிமா கொட்டகைக்கு போயிட்டு வரப்ப நாயெல்லாம் துரத்தி விழுந்து எந்திரிச்சி வந்தோம் .. என்றார் ரத்தினம் ...

ம்ம்ம். அதுவும் ஒரு காலம்தாப்பா... எப்படில்லாம் அலைஞ்சோம், திரிஞ்சோம் இப்ப கட்டி போட்ட காளை மாதிரி போய்ட்டோம் ..
ஆனா அதெல்லாம் ஒரு வரைமுறை இருந்துச்சி பெரியாளுவுளுக்கு பயந்தோம், தப்பு தண்டா பண்ண துணிச்சல் வராது, இப்ப இருக்குற 
பசங்க அப்படியா? என்னா அழிச்சாட்டியம் பண்ணுதுக.. 

ஆமாம் கனகசபை நானும்தான் பார்த்துட்டு இருக்கேன், எல்லாம் ஒரு தலைகனத்துல திரியுதுங்க, எதைக்கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டதுங்க .. ஏன் என் மவ வூட்டு பேரன் மூணாவது தான் படிக்கிறான், அவன் பண்ற சேட்டை தாங்க முடியலைப்பா, டிவி முன்னாடியே கதியா கிடக்கான், ஓடியாடி விளையாட மாட்டேங்குறான், டிவி இல்லைனா கம்ப்யூட்டர் இதுதான் உலகம் இப்ப உள்ள பிள்ளைகளுக்கு.. என்னமோப்பா நாம பார்த்த வாழ்ந்த உலகத்த, இவனுங்க பார்க்க முடியாது போல ...

ஆமாம் ரத்தினம் இப்ப உள்ள பிள்ளைகள் உடலளவில் வளர்ந்தாலும் மனசளவில் அவர்கள் வலுவாக இல்லைப்பா .. நேத்து சேதி தெரியுமா, முருகேசன் மவன் வூட்டு பேரன் ஏதோ பரிட்சையில மார்க் கம்மியா எடுத்துட்டான்னு திட்டியிருக்காங்க அத கூட தாங்க முடியாம நாண்டுகிட்டானாம் , சாவ வேண்டிய வயசா இது .. என்னய்யா உலகமிது .. நாம எங்க இருக்கோம், நம்மளை எல்லாம் நம்மள பெத்தவுக எப்படில்லாம் அடிச்சாக அதையெல்லாம் நாம தாண்டி தானே வந்திருக்கோம், இதுங்க ஏன் இப்படி பண்ணுது என்று தெரியலையே, 

ஆமாம் கனகசபை இப்படி எல்லாம் பிஞ்சுல பழுக்க ஆசைபடுதுங்கப்பா, வளர்ப்பு முறையும் சரியில்லைப்பா, யாரை குத்தம் சொல்லி என்ன பண்றது, உசுர் போனா திரும்பி வருமா? 

சரி ரத்தினம், இதை பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம், கீழ காட்டுல மாட்டுக்கு தீனி அறுத்துட்டு வந்துடுறேன், வானம் கொஞ்சம் கருக்குற மாதிரி தெரியுது, நா வாறன் ...

ஆகட்டும் கனகசபை ....

Post Comment

29 கருத்துரைகள்..:

Admin சொன்னது…

ஊர் பேச்சு ஆரம்பமா.ம்ம் நல்லாயிருக்கு..நடத்துங்க நடத்துங்க..

Unknown சொன்னது…



ஊர்பேச்சும் உரையாடலும் இயற்கையாக அமைந்துள்ளன!
நன்று!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உரையாடலாக எழுதுவது என்பது மிகவும் கஷ்டம்... அதுவும் இது போல் எழுதுவது என்றால்... பாராட்டுக்கள் நண்பரே... நல்லா இருக்கு... தொடருங்கள்... நன்றி... (TM 6)

Seeni சொன்னது…

unmai unarthiya uraiyaadal!

சசிகலா சொன்னது…

ஊர் வம்பைத்தான் இப்படி நாகரீகமா சொன்னீர்களோ?

ஹேமா சொன்னது…

ஊர்ப்பேச்சு...தொடருமா அரசன்.சுவாரஸ்யம்தான்.பழைய விஷயங்களை அறியலாம் !

சீனு சொன்னது…

புதியா தொடரா தொடருங்கள் தொடர்கிறோம் . அருமை

Prem S சொன்னது…

கவிதை இல்லாத வேறொன்று உங்களிடமிருந்து வாழ்த்துகள் அன்பரே

சமீப அரசியல் நிகழ்வுகளை சேர்த்தால் சுவை கூடும்

Athisaya சொன்னது…

வணக்கம் சொந்தமே!நீண்ட நாட்களின் பின் தங்கள் தளம் சேர்வது மகிழ்வு.வந்ததும் இப்படி ஒருபதிவு...தொடருங்கள் தொடருங்கள்.
தொடர்ந்தும் சந்திக்கவே விருப்பம்.முயல்கிறேன் சொந்தமே!

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

பெயரில்லா சொன்னது…

ராசா ஆஆஆஆஅ ,

ஐயா ஆஆஆஆஆஆ மகா ராசா ஆஆஆஆஆஆ


எப்புரி ராசா ஆஆ இக்குரிங்க ...

நலமா ....ஊர் கதை பேசனும் னா போதுமே ....

ஏன் அரசன் உங்களுக்கு இப்படி ஒரு கொய வெறி ,,,,,

பெயரில்லா சொன்னது…

ஆனா அதெல்லாம் ஒரு வரைமுறை இருந்துச்சி பெரியாளுவுளுக்கு பயந்தோம், தப்பு தண்டா பண்ண துணிச்சல் வராது, இப்ப இருக்குற
பசங்க அப்படியா? என்னா அழிச்சாட்டியம் பண்ணுதுக///

பிச்சி பிச்சி ....இதை மீ வன்மையாகக் கண்டிக்கிறேன் ....எல்லாக் காலத்திலும் நல்லவர்களும் இருபாங்க கேட்டவர்களும் இருப்பாங்க ..

உங்க பிள்ளைகளை நீங்க தானே வளர்கீங்க ....நீங்க தானே சொல்லிக் கொடுகீங்க ....தப்பு பண்ண எல்லாம் நீங்க கற்றுக் கொடுத்ட்டு பழிய எங்க மேல போடுரதுல நியாயம் இல்ல அரசன் ...

பெயரில்லா சொன்னது…

எடுத்துட்டான்னு திட்டியிருக்காங்க அத கூட தாங்க முடியாம நாண்டுகிட்டானாம் , சாவ வேண்டிய வயசா இது .. என்னய்யா உலகமிது .. நாம எங்க இருக்கோம், நம்மளை எல்லாம் நம்மள பெத்தவுக எப்படில்லாம் அடிச்சாக அதையெல்லாம் நாம தாண்டி தானே வந்திருக்கோம்,///

ஏன் அன்பா சொல்லக் கூடாதா ...இதுல மாற வேண்டியது நீங்க தான் ...திட்டி ஒரு குழந்தைய ஏன் சாகடிக்கிரிங்க னு கேக்குறேன் அந்த குழந்தை சாகணும் அளவுக்கு முடிவேடுக்குனா அப்படி எல்லாம் அந்த குழந்தை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டு இருக்கும் ......குழந்தைகளுக்கு மன தைரியம் இருக்கணும் னு நாம பேசுறத விட பெரியவங்க பிள்ளைகளிடம் இந்த மாறி பரீட்சை நேர தோல்வி ல பிள்ளைகளுக்கு ஆறுதல இருக்க மாறனும் அய்யா ...

பெயரில்லா சொன்னது…

அரசன் காலம் மாறுது அரசன் ....சில விடயங்கள் மாறிட்டே இருக்கு ...

நம்மள விட நமக்கு அடுத்து வர சங்கதிகளுக்கு பொறுப்பு கூடுது ..நான் அந்த காலத்தில அப்படி தான் இருந்தேன் என் குழந்தையும் அப்படி தான் இருக்கும் பதினெட்டு வயசு தான் கம்பூட்டர் காண்பிப்பேன் னு சொன்னா ...என்ன அரசன் நியாயம் ...


சரி அரசன் கம்பெடுத்து என்னை அடிக்க வந்துடாதிங்கோ ...ரொம்ப நாளா உங்கட்ட சண்டை போடணும் ஆசை ...அதான் ...அரசன் திஸ் இஸ் சீரியஸ் சண்டை ...அதனால கம்பு அடியாட்கள் எல்லாம் எடுத்துட்டு களத்தில இறங்குவோம் ....எனக்கு லாம் சப்போர்ட் ஆருமே இல்லை ..தைரியமா வாங்க ...

Manimaran சொன்னது…

நல்ல சுவாரஸ்யம் ...

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
ஊர் பேச்சு ஆரம்பமா.ம்ம் நல்லாயிருக்கு..நடத்துங்க நடத்துங்க..//

நன்றிங்க சார் ...

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


ஊர்பேச்சும் உரையாடலும் இயற்கையாக அமைந்துள்ளன!
நன்று!//

நன்றிங்க அய்யா ...

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
உரையாடலாக எழுதுவது என்பது மிகவும் கஷ்டம்... அதுவும் இது போல் எழுதுவது என்றால்... பாராட்டுக்கள் நண்பரே... நல்லா இருக்கு... தொடருங்கள்... நன்றி... (TM 6)//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
unmai unarthiya uraiyaadal!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
ஊர் வம்பைத்தான் இப்படி நாகரீகமா சொன்னீர்களோ?//

சத்தமா சொல்லாதிங்க அக்கா .. தம்பி பாவம் ..

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
ஊர்ப்பேச்சு...தொடருமா அரசன்.சுவாரஸ்யம்தான்.பழைய விஷயங்களை அறியலாம் !//

தொடரலாம் என்று நம்புகிறேன் அக்கா ...
நன்றிகள்

arasan சொன்னது…

சீனு கூறியது...
புதியா தொடரா தொடருங்கள் தொடர்கிறோம் . அருமை//

ஆம் நண்பரே ... தொடர முயற்சிக்கிறேன்

arasan சொன்னது…

Athisaya கூறியது...
வணக்கம் சொந்தமே!நீண்ட நாட்களின் பின் தங்கள் தளம் சேர்வது மகிழ்வு.வந்ததும் இப்படி ஒருபதிவு...தொடருங்கள் தொடருங்கள்.
தொடர்ந்தும் சந்திக்கவே விருப்பம்.முயல்கிறேன் சொந்தமே!

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!//

நன்றிகள் அதிசயா ...
அப்ப அப்ப வாங்க இந்த பக்கமும் ..

arasan சொன்னது…

கலை கூறியது...
ராசா ஆஆஆஆஅ ,

ஐயா ஆஆஆஆஆஆ மகா ராசா ஆஆஆஆஆஆ


எப்புரி ராசா ஆஆ இக்குரிங்க ...

நலமா ....ஊர் கதை பேசனும் னா போதுமே ....

ஏன் அரசன் உங்களுக்கு இப்படி ஒரு கொய வெறி ,,,,,//

நான் நலம் .. கலை தங்களின் நலம் காண ஆவல் ..யாருக்கு கொலைவெறி ?

arasan சொன்னது…

கலை கூறியது...
ஆனா அதெல்லாம் ஒரு வரைமுறை இருந்துச்சி பெரியாளுவுளுக்கு பயந்தோம், தப்பு தண்டா பண்ண துணிச்சல் வராது, இப்ப இருக்குற
பசங்க அப்படியா? என்னா அழிச்சாட்டியம் பண்ணுதுக///

பிச்சி பிச்சி ....இதை மீ வன்மையாகக் கண்டிக்கிறேன் ....எல்லாக் காலத்திலும் நல்லவர்களும் இருபாங்க கேட்டவர்களும் இருப்பாங்க ..

உங்க பிள்ளைகளை நீங்க தானே வளர்கீங்க ....நீங்க தானே சொல்லிக் கொடுகீங்க ....தப்பு பண்ண எல்லாம் நீங்க கற்றுக் கொடுத்ட்டு பழிய எங்க மேல போடுரதுல நியாயம் இல்ல அரசன் ...//

என் பதிவை முழுசா படிச்சியா ? என்ன உளறுகிரிகள்

arasan சொன்னது…

கலை கூறியது...
எடுத்துட்டான்னு திட்டியிருக்காங்க அத கூட தாங்க முடியாம நாண்டுகிட்டானாம் , சாவ வேண்டிய வயசா இது .. என்னய்யா உலகமிது .. நாம எங்க இருக்கோம், நம்மளை எல்லாம் நம்மள பெத்தவுக எப்படில்லாம் அடிச்சாக அதையெல்லாம் நாம தாண்டி தானே வந்திருக்கோம்,///

ஏன் அன்பா சொல்லக் கூடாதா ...இதுல மாற வேண்டியது நீங்க தான் ...திட்டி ஒரு குழந்தைய ஏன் சாகடிக்கிரிங்க னு கேக்குறேன் அந்த குழந்தை சாகணும் அளவுக்கு முடிவேடுக்குனா அப்படி எல்லாம் அந்த குழந்தை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டு இருக்கும் ......குழந்தைகளுக்கு மன தைரியம் இருக்கணும் னு நாம பேசுறத விட பெரியவங்க பிள்ளைகளிடம் இந்த மாறி பரீட்சை நேர தோல்வி ல பிள்ளைகளுக்கு ஆறுதல இருக்க மாறனும் அய்யா ...//

அதைதான் நானும் சொல்கிறேன் ..
ஒரு அப்பா அம்மா சுத்தமா படிக்கவே இல்லை ..
அவர்கள் தன பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க
ஆசைப்பட்டு நிறைய செலவு பண்ணி , அந்த பிள்ளை சரியாக படிக்காமல் ஊர் சுற்றி திரியும் பொது
எந்த அப்பாவும் அம்மாவும் பிள்ளையை கோவத்தில் திட்டவும், அடிக்கவும் செய்வார்கள் என்பது நிதர்சனம் ..
அதை உணராத அந்த பிள்ளை தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் ..
எடுத்த உடனே எந்த அப்பாவும் , அம்மாவும் பிள்ளையை அடிக்கவோ திட்டவோ மாட்டார்கள் , ஆரம்பத்தில் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்து மீண்டும் அந்த பிள்ளை தவறு செய்து கொண்டே இருந்தால் வேறு என்ன பண்ணுவார்கள் ..

ஒரு விடயத்தை உணர முயற்சி செய்யுங்கள் கலை .. உங்களின் கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

கலை கூறியது...
அரசன் காலம் மாறுது அரசன் ....சில விடயங்கள் மாறிட்டே இருக்கு ...

நம்மள விட நமக்கு அடுத்து வர சங்கதிகளுக்கு பொறுப்பு கூடுது ..நான் அந்த காலத்தில அப்படி தான் இருந்தேன் என் குழந்தையும் அப்படி தான் இருக்கும் பதினெட்டு வயசு தான் கம்பூட்டர் காண்பிப்பேன் னு சொன்னா ...என்ன அரசன் நியாயம் ...


சரி அரசன் கம்பெடுத்து என்னை அடிக்க வந்துடாதிங்கோ ...ரொம்ப நாளா உங்கட்ட சண்டை போடணும் ஆசை ...அதான் ...அரசன் திஸ் இஸ் சீரியஸ் சண்டை ...அதனால கம்பு அடியாட்கள் எல்லாம் எடுத்துட்டு களத்தில இறங்குவோம் ....எனக்கு லாம் சப்போர்ட் ஆருமே இல்லை ..தைரியமா வாங்க ...//

நான் மீண்டும் சொல்கிறேன் ...

பிள்ளைகளை கட்டாய படுத்த சொல்லவே இல்லை ..
அதன் போக்கில் விடவும் முடியாது , எது சரியான பாதை என்பதை
பெற்றவர்கள் தான் காட்டவேண்டும் , காட்ட முடியும்...
அதை கட்டாயம் என்று பிள்ளைகள் நினைத்தால் பிழை பெற்றவர்கள் மீதா?

காலமாற்றம் ஆரோக்கியமாக இருந்தால் அனைவரும் ஏற்று கொள்ள தயார் ..
இங்கு உள்ள மாற்றம் பெரும்பான்மை எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்று
ஒரே ஒரு நாள் செய்தி தாளை படித்தால் போதும் புரியும் ...

உங்களோடு சண்ட போட வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள் கலை ..

arasan சொன்னது…

Manimaran கூறியது...
நல்ல சுவாரஸ்யம் ...//

நன்றிங்க சார்

சென்னை பித்தன் சொன்னது…

த.ம.8
ஊர் பேச்சு வெறும் வெட்டிப் பேச்சாக இல்லாமல்,பயனுள்ள பேச்சாகவே இருக்கிறது

உழவன் சொன்னது…

ஊர்பேச்சு நல்லாருக்கு அண்ணா...