புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 29, 2012

ஊர்ப்பேச்சு # 2


இதன் முதல் பகுதி: ஊர்ப்பேச்சு # 1

என்னப்பா கனகசபை எப்படி இருக்கே, பாத்து ஒரு வாரமாச்சே, என்ன வேலை நடக்குது காட்டுல,என்ன போட்டுருக்கே மேல காட்டுல என்று கேட்டுக்கொண்டே வாயில வச்சிருந்த வேப்பங்குச்சிய ரெண்டா கிழிச்சி நாக்கு வழிக்க ஆயத்தமானார் ரத்தினம்,

அட ஏம்ம்ப்பா என் கதையை கேக்குற, அடிச்சி புடிச்சி மேல காட்டுல நிலக்கடல போட்டேன், ரெண்டு வெளாவுக்கு பயிர் பத்தாம பக்கத்தூரு பரமசிவதுக்கிட்ட அப்பவே ஓடி ரெண்டு மரக்கா வாங்கியாந்து போட்டேன்,

ஏ என்னப்பா சொல்ற, பயிர் முளைச்சு வந்துச்சா, இல்லையா பத்து நாளா மழ தண்ணி இல்லையே ஊர்ல!

அட அத ஏன் ரத்தினம் கேக்குற , போட்ட பயிற நாயும் , பறவைகளும் தின்னது போக ஏதோ அங்கொன்னும், இங்கொன்னுமா முளைச்சிருக்கு, இப்ப பார்த்தா பயிர விட கோரையும், அருவும் மண்டி கிடக்குது, இதுல எங்கிட்டு நான் கள கொத்தி பயிர கண்டுபிடிக்கிறது! நாலு நாளா நானும் எம் பொஞ்சாதியும் கொத்தி பார்க்கிறோம் இன்னும் ரெண்டு மென கூட தாண்டல, என்னத்த சொல்றது!

ஏன் கனகசபை இப்ப மழையும் இல்ல இதுல கள கொத்துற, காயுற காய்ச்சல்ல பயிறு வதங்கி போச்சுனா என்ன பண்ணுவ, மழ தூரட்டுமே அப்புறம் வெட்டினா என்ன?

இல்ல ரத்தினம் இப்பவே பயிர விட கள தான் மிஞ்சி நிக்குது, இன்னும் கொஞ்ச நாள் போச்சுனா, பயிர கண்ணுல கூட பாக்க முடியாதுப்பா! மழ தூறும் எங்கிற நம்பிக்கைதான் ரத்தினம்!

ஏன் கனகசபை நீயும் , உன் பொஞ்சாதியும் சேந்து காட்டுல உழளுரிங்க, கூலிக்கு நாலு ஆள வச்சு வேலையா முடிச்சாதான் என்னப்பா? ஏதாவது ஒண்ணுனு படுத்துகிட்டா பொழப்ப யார் பாக்குறது!

நீ சொல்றது வாஸ்தவம் தான் ரத்தினம், நான் என்னா வந்தா வேண்டாமின்னா சொல்ல போறேன், ஒருத்தரும் கூலி வேலைக்கு வர தயாரா இல்லையப்பா!

என்ன சொல்ற கனகசபை என்னாச்சு, நம்ம ஊரு ஆளுவோ தான் கூலி வேலைக்கு வருவாங்களே, அதை வைச்சி தான்  பாதி குடும்பமே நடக்குது!

நீ சொல்றது எல்லாம் ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ரத்தினம் , நீ வெளி நாட்டில இருந்ததுனால இங்க நடக்குற சங்கதி தெரியாம இருக்குது, வந்து பத்து நாளு தானே ஆவுது போவ போவ நீயே தெரிஞ்சிக்குவ!

என்னப்பா சொல்ற , ஒன்னும் புரியலையே , கொஞ்சம் வெளக்கமாதான் சொன்னாதான் என்ன?

இல்ல ரத்தினம் இன்னைக்கு கால கரண்டு மாட்டுக்கு மாவு அரைக்க போவனும், இல்லைனா கரண்டு போயிரும் அது எப்ப வருது போவுதுனு தெரியல இன்னைக்காவது அரச்சிக்கிட்டு வந்துடுறேன், நாம இன்னொரு நாள் இத பத்தி பேசுவோம்!

சரிப்பா கனகசபை சீக்கிரம் போ மில்லுக்கு, கரண்டு நின்னுட போவுது!


Post Comment

25 கருத்துரைகள்..:

கோவை நேரம் சொன்னது…

உங்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி

Admin சொன்னது…

கனக சபை மில்லுக்கு போறத்துக்குள்ள நான் வந்துட்டேன்..

சசிகலா சொன்னது…

மரக்கா இந்த பெயரெல்லாம் எங்க ஊர்ல கேட்டதோட சரி நல்ல பகிர்வு.

இரா. தேவாதிராஜன் சொன்னது…

ஆஹா...அருமை அரசனே...
என்ன ஒரு எதார்த்தமான ஊரில் இருவரும் பேசிக்கொள்ளும் அந்த காட்சியை சிறிதும் பிறழாமல் அப்படியே மண்வாசனையோடு படிக்கும்போதே என் நாசியில் நெடி சற்றே ஏரியும் விட்டது என்றால் பாருங்களேன்.... நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது அரசனே...அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அரசனுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்...

பாராட்டுக்கள் ஊருக்கு எல்லோரையும் அழைத்து சென்று கனகசபை மற்றும் ரத்தினம் இருவரும் பேசியதை நேரடியாக காண்பித்து மீண்டும் அவரவர் இடத்தில் கொண்டுவந்து சேர்த்ததற்கு.....பத்து பைசா செலவில்லாமல். இதுதான் முக்கியமாக சொல்லவேண்டிய ஒன்று...

MARI The Great சொன்னது…

யோசிக்க வைக்கும் பதிவு நண்பரே! கிராமத்தின் தற்போதைய நிலையை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் (TM 4)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது வேதனைக்குரியது. மண் வாசம் வீசும் பதிவு

பட்டிகாட்டான் Jey சொன்னது…

அரசா... எப்பா எப்படி.... இன்ப அதிர்ச்சி.... இதுக்கு முன்னாடி நீ எழுதுனத முழுசும் படிக்கிர ஆர்வத்த தூண்டிட்ட போ....

உன்னோட தனி பாணியா இருக்கட்டும் தொடரவும்..., தி.ஜா வெல்லாம் ஆரம்பிச்சிருக்காங்க....

இந்த மண்வாசையோட பேசுற வட்டார வழக்கு கிராமத்துலேயே குறைஞ்சிகிட்டு வருது.... அடுத்த தலைமுற இப்படி எழுதுனத பாத்து தெரிஞ்சிகிட்டாதான் உண்டு...

வெரி குட் .. கீப் இட் அப்.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

// T.N.MURALIDHARAN கூறியது...
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது வேதனைக்குரியது. மண் வாசம் வீசும் பதிவு /

100 நாள் வேலைதிட்டம்!!!!????
கம்மாக்ரைல போய் அரை மணிநேரம் மம்பட்டில அங்க இங்கனு லைட்டா.. கொத்திட்டு... பக்கத்து மரத்தடில ஆறு மணி நேரம் துக்கிட்டு வந்தா 100 ரூவா... எங்கூர்ல அதுதான் 100நாள் வேலைதிட்டத்துல நடக்கிரது...

rajamelaiyur சொன்னது…

அழகான எழுத்து நடை ...

Prem S சொன்னது…

மண் வாசனை பதிவு தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... தொடர
வாழ்த்துக்கள்... (TM 7)

உழவன் சொன்னது…

கிராமத்தின் தற்போது நிலைமையை மண்வாசம் குறையாமல் சொல்லிய விதம்..சூப்பர் அண்ணே...

arasan சொன்னது…

கோவை நேரம் கூறியது...
உங்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி//

எனக்கும் தான் நண்பரே .. உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி சந்திததில்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
கனக சபை மில்லுக்கு போறத்துக்குள்ள நான் வந்துட்டேன்..//

ஹா ஹா .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
மரக்கா இந்த பெயரெல்லாம் எங்க ஊர்ல கேட்டதோட சரி நல்ல பகிர்வு.//

ஆம் அக்கா .. எல்லாமே ஊரில் பேசிக்கொள்ளும் விஷயங்கள் தான் இப்படி பதிவா போட்டிருக்கேன் ...

arasan சொன்னது…

இரா. தேவாதிராஜன் கூறியது...
ஆஹா...அருமை அரசனே...
என்ன ஒரு எதார்த்தமான ஊரில் இருவரும் பேசிக்கொள்ளும் அந்த காட்சியை சிறிதும் பிறழாமல் அப்படியே மண்வாசனையோடு படிக்கும்போதே என் நாசியில் நெடி சற்றே ஏரியும் விட்டது என்றால் பாருங்களேன்.... நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது அரசனே...அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அரசனுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்...

பாராட்டுக்கள் ஊருக்கு எல்லோரையும் அழைத்து சென்று கனகசபை மற்றும் ரத்தினம் இருவரும் பேசியதை நேரடியாக காண்பித்து மீண்டும் அவரவர் இடத்தில் கொண்டுவந்து சேர்த்ததற்கு.....பத்து பைசா செலவில்லாமல். இதுதான் முக்கியமாக சொல்லவேண்டிய ஒன்று...//


உள்ளம் திறந்து பாராட்டிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ..

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
யோசிக்க வைக்கும் பதிவு நண்பரே! கிராமத்தின் தற்போதைய நிலையை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் (TM 4)//

மிகுந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது வேதனைக்குரியது. மண் வாசம் வீசும் பதிவு//

மிகுந்த நன்றிகள் சார் .. ஆம் இப்போ யாரும் வேலைக்கு வர தயாரா இல்லை ..

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
அரசா... எப்பா எப்படி.... இன்ப அதிர்ச்சி.... இதுக்கு முன்னாடி நீ எழுதுனத முழுசும் படிக்கிர ஆர்வத்த தூண்டிட்ட போ....

உன்னோட தனி பாணியா இருக்கட்டும் தொடரவும்..., தி.ஜா வெல்லாம் ஆரம்பிச்சிருக்காங்க....

இந்த மண்வாசையோட பேசுற வட்டார வழக்கு கிராமத்துலேயே குறைஞ்சிகிட்டு வருது.... அடுத்த தலைமுற இப்படி எழுதுனத பாத்து தெரிஞ்சிகிட்டாதான் உண்டு...

வெரி குட் .. கீப் இட் அப்.//

வாங்க அண்ணே .. வணக்கம் .. இது ஒரு பதிவுக்காங்க முயற்சி அண்ணே .. என் ஊரை பற்றி இணையத்தில் பதிவு செய்ய எடுத்துக்கொண்ட தொடக்கம் தான் .. மேலும் தொடர்கிறேன் அண்ணே ..

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
// T.N.MURALIDHARAN கூறியது...
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது வேதனைக்குரியது. மண் வாசம் வீசும் பதிவு /

100 நாள் வேலைதிட்டம்!!!!????
கம்மாக்ரைல போய் அரை மணிநேரம் மம்பட்டில அங்க இங்கனு லைட்டா.. கொத்திட்டு... பக்கத்து மரத்தடில ஆறு மணி நேரம் துக்கிட்டு வந்தா 100 ரூவா... எங்கூர்ல அதுதான் 100நாள் வேலைதிட்டத்துல நடக்கிரது...//

வரும் அண்ணே அடுத்த தொடர்ச்சி அதான் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் தான் ,, ரொம்ப கொடுமையான விஷயம் அண்ணே .. என்ன அரசாங்கம் இது .. மண்ணு போல மவுனமா இருக்கு .. என்னத்த சொல்ல ..

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அழகான எழுத்து நடை ...//

நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
மண் வாசனை பதிவு தொடருங்கள்//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... தொடர
வாழ்த்துக்கள்... (TM 7)//

மிகுந்த நன்றிகள் தனபாலன் சார்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகவும் அருமையான நடையில் சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

ஹேமா சொன்னது…

வித்தியாசமா இருக்கு அரசன் !