புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 10, 2012

இப்படியும் சில அதிமேதாவிகள் ...

                      
                 செழியனும் அவனது அப்பாவும் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள், இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் வந்து சேரும் என்று அறிவிப்பு வந்தது , ரயில் வந்ததும் அவர்களுக்குரிய பெட்டியில் ஏறி இருக்கை எண்ணை சரி பார்த்து அமர்ந்து கொண்டார்கள் 

செழியனின் அப்பா சன்னலோர இருக்கையிலும் , செழியன் அவருக்கு எதிரில் நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டார்கள்! காலை நேர டிபன் விற்பனையாளர்கள் சற்று அதிகம் அடிக்கடி வந்து போனார்கள்! ஏதும் சாப்பிட வாங்கவா என்று தன் அப்பாவிடம் கேட்டான் செழியன், அவர் ஒன்றும் வேண்டாம் என்றதும் தான் கொண்டுவந்த பேக்கில் உள்ள புத்தகத்தை எடுத்தான்! 

அருகில் அமர்ந்திருந்த அந்த நபர் என்ன 
புத்தகம் என்று கேட்டார். 
அவனும் அந்த புத்தகத்தை அவரிடம் காட்டினான், அவர் உடனே வாங்கி பார்த்துவிட்டு ஐயோ இதை படிக்க முடியாது, நெஞ்சு வலிக்கும் என்று கூறிவிட்டு செழியனிடமே நீட்டி விட்டார், செழியனும் வாங்கி அதை படிக்க புரட்டினான்! 

சற்று நேரம் கழித்து மெல்ல பேச்சு கொடுத்தார் அந்த நபர்!

"தம்பி நீங்க எந்த குருப்பு"

எனக்கு புரியலை சார் என்றான் செழியன்!

இல்லை நீங்க அணிந்திருக்கும் பனியன் ஒரு வண்ணத்தில் உள்ளது!
புத்தகமும் அதை சார்ந்து உள்ளது! நீங்க ..... அவரோட குருப்பா? இல்லை இன்னொரு கோமாளி குருப்பா?

இல்லை சார் நான் தமிழ் உணர்வாளன், நான் யாரையும் சார்ந்திருக்க வில்லை , என்றான் செழியன்!

இல்லை தம்பி சும்மா சொல்லுங்க என்றார் அந்த மனிதர்!

மீண்டும் இல்லை என்றுதான் சொன்னான் செழியன்!

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர் மேலும் தொடர்ந்தார் , நீங்க எதிலும் சார்ந்தவரில்லை என்பதில் சந்தோஷம், 
இந்த மாதம் நாங்க தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க ஒரு மாநாடு நடத்த போகிறோம் உங்களை போன்ற உணர்வாளர்கள் வர வேண்டும் என்றார்!

ஐயோ சார், எந்த அரசியல் சாயமும் எனக்கு வேண்டாம், என் வழியில் நான் பயணித்து கொண்டிருக்கின்றேன்,ஆளை விடுங்க போதும் என்றான் செழியன்!

அவர் விடுறமாதிரி தெரியவில்லை, அதிக மூளைசலவை செய்ய ஆரம்பித்தார், எங்கள் தலைவர் சமயோசித புத்தி கொண்டவர், 
அறிவாளி, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்தவர், அது இது என்று கதை அளக்க ஆரம்பித்தார்!(அதான் ஊருக்கே தெரியுமே...)

செழியன் சட்டென்று எனக்கு விருப்பம் இல்லை விட்டுடுங்களேன் என்றான்!

அவரும் பேச்சை மாற்றி மீண்டும் பிடிக்காத அரசியல் தலைகளை திட்ட ஆரம்பித்தார்! கோமாளிகள், குரங்குகள் என்று வசைபாடினார்.சுற்றி இருப்பவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு வந்தார்கள்...  

அவன் தான் ஈழத்தை உருவாக்க வந்தவன், இன்னொருவன் நான் இல்லையென்றால் ஈழம் இருக்காது என்கிறான் என்று அவரின் ஏசுதலில்
அவரின் தங்க தலைவரை மட்டும் விட்டு விட்டு அனைவரையும் திட்ட ஆரம்பித்து விட்டார்! 

இன்னும் இவர்களின் ஈழத்தை வைத்து செய்யும் அரசியல் முடியாது போலும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே 

பொறுமை இழந்த செழியன் உங்கள் விருப்பம் அதுவாக இருப்பின், அதை அடுத்தவரின் மேல் திணிக்க முயலுவது சரியில்லை!
ப்ளீஸ் இதை பற்றி பேசுவதை முதலில் நிறுத்துங்கள், இது உங்களின் வயதுக்கு தகுதியில்லை என்றான். 

தலைவன் மேல் கொண்ட பற்று ஒரு மனிதனை எந்த பாடு படுத்துகின்றது, தலைவன் தவறே செய்து இருந்தாலும் அதை சரி என்று நியாய படுத்தும் அளவுக்கு அவரின் பேச்சுக்கள் இருப்பதாய் செழியன் மனதுக்குள் எண்ணிகொண்டான்! 

தனக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் செழியனின் அப்பா அடிக்கடி அவனை பார்த்துகொண்டிருந்தார்!அவனுக்கு அது மேலும் சங்கடத்தையும் 
அந்த நபரின் மேல் கோபத்தையும் அதிகரித்து கொண்டே வந்தது!

எப்போடா இந்த ஆள் இடத்தை காலி செய்வார், நம்மளை நிம்மதியாக பயணம் செய்ய விடுவார் என்பதிலே செழியனின் எண்ணங்கள் அலை பாய்ந்தன, அதற்கு தகுந்த மாதிரி டிக்கட் பரிசோதகர் வந்தார், அவரின் waiting list டிக்கட் அடுத்த பெட்டியில் confirm பண்ணி தருவதாய் சொன்னதும் தான் செழியனுக்கு பெரும் நிம்மதி வந்தது, அப்போதான் தெரிந்தது அவருடன் மனைவி மற்றும் மகன் வந்திருப்பது!
இவரின் செய்கை அவர்களை எவ்வளவு உறுத்தி இருக்கும் என்பது அவர்களின் பார்வைகளிலே கண்டான் செழியன்...

இந்த மாதிரி மனிதர்களும் இப்பூமியில் உலவுகிறார்கள், எப்படி எல்லாம் கண் மூடித்தனமான நம்பிக்கை, பாவம் இந்த மனிதர்களை எவ்வகையில் சேர்ப்பது, இவர்கள் மாறுவார்களா? நாம் தான் ஒதுங்கி கொள்ளணுமா? இப்படி ஏகப்பட்ட சிந்தனைகளை கண்ணை மூடி யோசித்து வந்த செழியனை அப்பா எழுப்பி விட ரயிலை விட்டு இறங்கி நடந்தார்கள்! நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும் என்று சிந்தித்துக்கொண்டே நடந்தான் செழியன்.... 

(ஏனய்யா ஏன் ... பாருங்க நம்ம செழியன் பைத்தியம் பிடிக்காத ஒரு குறையா அலையுறான்... போதும் அதிமேதாவிகளே நிறுத்திக்கொள்ளுங்கள் ...)

Post Comment

22 கருத்துரைகள்..:

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

சில நேரங்களில் பயணம் செய்யும் போது நானே இப்படி சங்கடப் பட்டிருக்கிறேன் மூடபக்தி போல சிலருக்குக் கட்சிமீது பற்றிருக்கும் சா இராமாநுசம்

மதுமதி சொன்னது…

இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் செழியன்..மன்னிக்கவும் அரசன்..

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ம்ம்ம் எல்லோரையும் கடந்துதான் போக வேண்டியதிருக்கிறது வாழ்க்கை பயணத்தில்!

பிரேம் குமார் .சி சொன்னது…

ம்ம் கலைஞருக்கு குத்து போல

Uzhavan Raja சொன்னது…

// நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும்//

காலம் மாறினாலும் மனிதர்கள் மாறாமல் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்..அண்ணா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த ரயிலில் சரக்கு கிடைக்குமான்னு கேட்டு அலறவச்சிருக்கேன் இப்பிடிப் பட்டவர்களை...!

அதுக்கு பிறகு பேசுவான்னு நினைக்கிறீங்க நெவர்.

கவி அழகன் சொன்னது…

Aha atputham

Seeni சொன்னது…

ippadiyumaa nadakkuthu...

r.v.saravanan சொன்னது…

நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும்

நாம் கடக்கும் வாழ்க்கை பயணத்தில் இப்படியும் உண்டு அரசன்

அரசன் சே சொன்னது…

புலவர் சா இராமாநுசம் சொன்னது…
சில நேரங்களில் பயணம் செய்யும் போது நானே இப்படி சங்கடப் பட்டிருக்கிறேன் மூடபக்தி போல சிலருக்குக் கட்சிமீது பற்றிருக்கும் சா இராமாநுசம்//

உண்மைதான் அய்யா ...
என் வணக்கங்கள் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

அரசன் சே சொன்னது…

மதுமதி கூறியது...
இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் செழியன்..மன்னிக்கவும் அரசன்.//

மிகுந்த நன்றிகள் சார்

அரசன் சே சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ம்ம்ம் எல்லோரையும் கடந்துதான் போக வேண்டியதிருக்கிறது வாழ்க்கை பயணத்தில்!//

என்ன பண்ணுவது சார் ...

அரசன் சே சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
ம்ம் கலைஞருக்கு குத்து போல//

புரிந்து கொண்டால் சரி அன்பரே

அரசன் சே சொன்னது…

Uzhavan Raja கூறியது...
// நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும்//

காலம் மாறினாலும் மனிதர்கள் மாறாமல் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்..அண்ணா//

இப்படியும் சிலர் உள்ளனர் தம்பி

அரசன் சே சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
இந்த ரயிலில் சரக்கு கிடைக்குமான்னு கேட்டு அலறவச்சிருக்கேன் இப்பிடிப் பட்டவர்களை...!

அதுக்கு பிறகு பேசுவான்னு நினைக்கிறீங்க நெவர்.//


அதையும் பார்த்தேன் அண்ணாச்சி ...
செம கலக்கல் அது ...

அரசன் சே சொன்னது…

கவி அழகன் கூறியது...
Aha atputham//

nandringa nanbare

அரசன் சே சொன்னது…

Seeni கூறியது...
ippadiyumaa nadakkuthu..//

நெறைய நடக்குதுங்க சார்

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும்

நாம் கடக்கும் வாழ்க்கை பயணத்தில் இப்படியும் உண்டு அரசன்//

நன்றிகள் சார்

அறிவன்#11802717200764379909 சொன்னது…

இப்படிப் பட்ட கிறுக்கர்கள் பாபா,பாலகுமாரனிலிருந்து, கட்சிக் காரர்கள் வரை அனைத்து விதயங்களுக்கும் உண்டு.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் கட்சிக் காரர்கள் சற்று விஷேசமானவர்கள்..நீங்கள் குட்டிக் கரணம் அடித்தால் கூடத் திருந்தும் சுவடைக்கூட அவர்களிடம் பார்க்க முடியாது !!!

Jey சொன்னது…

மிஸ்டர் அரசர் அவர்களே, இவர்களிடம் இருந்து நாசூக்காக தப்பிக்க எளிய வழிகள் ஏதும் இருந்தால் அடியேனுக்கு தெரியப்படுத்தவும்...

இப்படிக்கு,
அல்லக்கைகளின் அலம்பல்களால் அரண்டுபோனவர்கள் சங்கம்.

Jey சொன்னது…

ம்

ஹேமா சொன்னது…

அதிமேதாவிகள்ன்னு நீங்களே சொல்லிட்டீங்க.பிறகென்ன அரசன்.மனுசனாப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது நாட்டுப்பற்று,மொழிப்பற்று வேணும் !