புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 25, 2012

ஒருத்தியின் இறுதி வரிகள் ...


தோழிகளில் எவளோ ஒருத்தி 
செய்து வைத்த அறிமுகம்
ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை
பிறகொரு பொழுதில்
என்னதான் இருக்குமென்று 
உள் நுழைந்தேன்!
அடுக்கடுக்காய் அதீத 
இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!
மனமது மாறியது!
குலுங்க குலுங்க கை குலுக்கினேன்,
எவரென்று தெரியாது 
இருப்பினும் உறவாடினோம்!
எத்தனை இரவுகள் 
எத்தனை பகல்கள், 
வேண்டுமென்றே தொலைத்திருப்பேன்!
வேண்டாமென்று 
புத்தியுள்ளவர்கள் கூறுகையில் 
உமக்கென்ன தெரியும் என்று சாடினேன்!
என்னை கொண்டாடுகையில் 
ஏதோ நானும் சாதித்துவிட்ட பெரும் நிறைவு!
நான் நானாகவே உலாவினேன்,
என்னை சுற்றிய முகங்களனைத்தும்
முகமூடி என்பதை அறியாமல்!
அருகிலிருந்த உறவை உதறினேன் 
எங்கோ இருந்த பதறுகளை நம்பி!
திரைக்கு முன்னாடி அமர்ந்து 
எண்ணியதை எழுதினேன் ஏளனம் கொண்டு!
நொடியில் நூறு விருப்பங்கள் சேருகையில் 
கயிரறுந்த காளையானது மனசு!
காலம் கொடியது, 
காட்சிகள் மாறியது,
என்னின் ஒற்றை புகைப்படம் கொண்டு 
என் வாழ்வை திசை மாற்றினான்
நயவஞ்சக நண்பன்!
எல்லாம் அறிகையில் 
ஆயிரம் நண்பர்களும்,
இருந்த இடத்தில் இருந்தே ஆறுதல் "குறி"
நெஞ்சில் ஏறிய பாரம் 
புத்தியில் உரைத்தது 
நானும் பெண் தானென்று!
போதும், 
இதோ இதுதான் 
என் பயணத்தின் முற்றுபுள்ளி 
என்னை நேசித்த உறவுகளிடம் 
இதையும் சேர்த்து விடும் 
இந்த "அரட்டை குழுமம்"
முகம் தொலைத்தவளின் 
இந்த முகவரி அற்ற கடிதம் 
இன்னொருவளின் திசையை 
சீராக்கினால் போதும் 
நான் சாந்தி அடைவேன்!

(இதை கவிதை என்றோ, இல்லை கடிதம் என்றோ எடுத்துக்கொள்வது அவரவர் மனநிலையை பொருத்தது, எனக்கும் இனங்காண தெரியவில்லை)

Post Comment

23 கருத்துரைகள்..:

வரலாற்று சுவடுகள் சொன்னது…

இதை கவிதையென்று நினைத்துக்கொண்டு என்னால் கடந்துபோகயியலவில்லை! எல்லாவற்றிலும் ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளுதல் எப்போதும் நன்மை பயக்கும்!

விழிப்புணர்வு ஏற்பட வேண்டியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் சரி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காட்சிகள் கண் முன்னே தெரிகிறது...

அனுபவம் பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்... (சில சமயம் நாம் விரும்பாமலே...)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லா இடத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

அப்படி இல்லையென்றால் ஆபத்துதான்...

அருணா செல்வம் சொன்னது…

முகம் தொலைத்தவளின் முகநுால் காட்சிகள் கண்முன் வந்து போயின நண்பரே.
கவிதையோ கதையோ... கருத்து அருமை.

மாற்றுப்பார்வை சொன்னது…

இது கவிதை கடிதம்

ஹேமா சொன்னது…

ஒரு எச்சரிகை தருவதாக உணர்கிறேன் அரசன் !

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…

வணக்கம்

முகவரி எழுதாப் பாடல்
அகவரித் துயரைக் காட்டும்!
சுகவரி எழுதும் போது
சுயநினை வில்லா தோடும்!
நகவரி கோடும் நெஞ்சை
நறுக்கெனப் பிளக்கும்! மின்னும்
தகவரித் தமிழைத் தாங்கும்
தண்வரி அரசன் வெல்க!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

சீனு சொன்னது…

//கயிரறுந்த காளையானது மனசு!// இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்கு....

//இதை கவிதை என்றோ, இல்லை கடிதம் என்றோ எடுத்துக்கொள்வது அவரவர் மனநிலையை பொருத்தது, எனக்கும் இனங்காண தெரியவில்லை)//
அங்க அங்க நாலு எனத் தட்டி இருந்தா கவிதியோ மாதிரி பீலிங் வந்து இருக்கும் # ஐடியா

esther sabi சொன்னது…

எல்லா பழக்கத்திற்கும் ஓர் எல்லையுண்டு தாண்டினால் நஷ்டம் நமக்குத்தான்.....

இந்த விடயத்தில் அதிகம் சிக்குவது பெண்கள்தான்......

ezhil சொன்னது…

அருமையான அறிவுரைக் கடிதக் கவிதை. எதிலும் நமக்கு ஒரு நிதானம் இருக்க வேண்டும் அது ஆணானாலும் சரி பெண்னாலும் சரி .

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மிக அழகாக கூறியுள்ளீர்கள் அரசன்.. அருமையான கருத்து..
எதற்கும் எல்லை வைத்திடல் வேண்டும்..

அரசன் சே சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
இதை கவிதையென்று நினைத்துக்கொண்டு என்னால் கடந்துபோகயியலவில்லை! எல்லாவற்றிலும் ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளுதல் எப்போதும் நன்மை பயக்கும்!

விழிப்புணர்வு ஏற்பட வேண்டியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் சரி!//

விழிப்புணர்வு வந்தால் சர் வசு

அரசன் சே சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
காட்சிகள் கண் முன்னே தெரிகிறது...

அனுபவம் பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்... (சில சமயம் நாம் விரும்பாமலே...)//

மிகுந்த நன்றிகள் சார்

அரசன் சே சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
எல்லா இடத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

அப்படி இல்லையென்றால் ஆபத்துதான்...//

ஆம் அண்ணே .. நன்றிங்க அண்ணே

அரசன் சே சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
முகம் தொலைத்தவளின் முகநுால் காட்சிகள் கண்முன் வந்து போயின நண்பரே.
கவிதையோ கதையோ... கருத்து அருமை.//

மிகுந்த நன்றிகள் மேடம்

அரசன் சே சொன்னது…

மாற்றுப்பார்வை கூறியது...
இது கவிதை கடிதம்//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

ஹேமா கூறியது...
ஒரு எச்சரிகை தருவதாக உணர்கிறேன் அரசன் !//

நன்றிங்க அக்கா

அரசன் சே சொன்னது…

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் கூறியது...
வணக்கம்

முகவரி எழுதாப் பாடல்
அகவரித் துயரைக் காட்டும்!
சுகவரி எழுதும் போது
சுயநினை வில்லா தோடும்!
நகவரி கோடும் நெஞ்சை
நறுக்கெனப் பிளக்கும்! மின்னும்
தகவரித் தமிழைத் தாங்கும்
தண்வரி அரசன் வெல்க!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr//

அன்பின் வருகைக்கும் , மனம் நிறைந்த கருத்துக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள் அய்யா

அரசன் சே சொன்னது…

சீனு கூறியது...
//கயிரறுந்த காளையானது மனசு!// இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்கு....

//இதை கவிதை என்றோ, இல்லை கடிதம் என்றோ எடுத்துக்கொள்வது அவரவர் மனநிலையை பொருத்தது, எனக்கும் இனங்காண தெரியவில்லை)//
அங்க அங்க நாலு எனத் தட்டி இருந்தா கவிதியோ மாதிரி பீலிங் வந்து இருக்கும் # ஐடியா//

நன்றி சீனு ...

அப்படி பிரிச்சி போட தான் நினைத்தேன் , அப்புறம் பிரிச்சா நன்றாக இருக்குமோ என்ற ஐயம் அதான் ..

அரசன் சே சொன்னது…

esther sabi கூறியது...
எல்லா பழக்கத்திற்கும் ஓர் எல்லையுண்டு தாண்டினால் நஷ்டம் நமக்குத்தான்.....

இந்த விடயத்தில் அதிகம் சிக்குவது பெண்கள்தான்.....//

உண்மைதான் . பெண்களுக்கு பாதிப்பு அதிகம் ...
நன்றிங்க எஸ்தர்

அரசன் சே சொன்னது…

ezhil கூறியது...
அருமையான அறிவுரைக் கடிதக் கவிதை. எதிலும் நமக்கு ஒரு நிதானம் இருக்க வேண்டும் அது ஆணானாலும் சரி பெண்னாலும் சரி .//

உண்மைதான் மேடம் .. நன்றிங்க

அரசன் சே சொன்னது…

♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! கூறியது...
மிக அழகாக கூறியுள்ளீர்கள் அரசன்.. அருமையான கருத்து..
எதற்கும் எல்லை வைத்திடல் வேண்டும்..//

மிகுந்த நன்றிகள் தோழி

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

மிக அருமையான எச்சரிகை கவிதை...உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)