புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 05, 2012

தரங்கெட்ட தனி மரம் ...



வரும் என்னை 
திணிக்கவில்லை!
விரும்பி நுழைந்தேன், 
ஒற்றை அறிமுகத்தில் 
இருளில் இருந்த 
நான்,
நட்சத்திரம் ஆனேன்!

தசை காட்டினேன் 
திசை மாறியது!
ஒவ்வொரு நாக்கும் 
வெவ்வேறு பெயரை 
உச்சரித்து - என் பெயர்
முகவரி தொலைத்தது!

காட்சியில் "கண்"காட்சி 
நான்!
வாழ்க்கையில் 
பிழைக்காட்சி ஆனேன்!

மின்னொளியில் 
ஜொலித்தாலும்,
கடந்த பாதைகள் 
அனைத்தும் 
கருமைதான்!

நேசக்கரங்கள் 
நிலையாய் 
பற்றியதில்லை,
பற்றுவதுமில்லை!

நீண்டு பயணித்த 
என் வாழ்வுதனில் 
தடங்கள் ஏதுமற்ற, 
தரங்கெட்ட,
தனி மரமானேன்.

Post Comment

31 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

தசை காட்டினேன்
திசை மாறியது!


ஒரு விலைமகள் பற்றிய வரிகள்

ஒரு பழைய படத்தில்
ஊருக்கே முந்தி விரித்த ஒரு விலைமகள் இறந்து விடுவாள்
ஆனால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல யாரும் முன் வரவில்லை

அவள் உயிரோடு இருந்த நாட்களில்
இரவில் அவள் வாசல் தட்டாதவர்கள் எண்ணிக்கை அந்த ஊரில் குறைவு

இது இன்னது ஏற்ற முத்திரை குத்தப்பட்ட கழிவுகளின் நிலை இதுதான்

ஆனால் நண்பா எத்தனையோ கழிவுகள்
பவுடர் பூசி மான்யமாய் திருக்கிறது

நல்ல கவிதை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வேதனை வரிகள்...

பால கணேஷ் சொன்னது…

ஒரு கணம் பயந்துதான் போனேன். பதிவர் தம்பி தனிமரத்தைத் தாக்கி எழுதி விட்டீர்களோ என்று. வேதனை தாங்கிய கவிதை வரிகள் அருமை.

r.v.saravanan சொன்னது…

வேதனையை சுமக்கும் வரிகள் நல்ல கவிதை இது அரசன் வாழ்த்துக்கள்

Prem S சொன்னது…

//மின்னொளியில்
ஜொலித்தாலும்,
கடந்த பாதைகள்
அனைத்தும்
கருமைதான்//

உண்மை தான் அவர்கள் வாழ்க்கை அப்படி...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

vimalanperali சொன்னது…

அவர்களின் நிலை சமூகத்தில் மிக,மிக கொடுமையாய்/

Unknown சொன்னது…

துயர நஞ்சைத்தடவி நெஞ்சில் பாயந்த வேல்! ஒவ்வொரு வரியும் அருமை!

வெற்றிவேல் சொன்னது…

மின்னொளியில்
ஜொலித்தாலும்,
கடந்த பாதைகள்
அனைத்தும்
கருமைதான்!

வலி தரும் வழிகள்...
தொடருங்கள் அரியலூர் தங்கமே...

கவி அழகன் சொன்னது…

Vali tharum varikal

கீதமஞ்சரி சொன்னது…

நட்சத்திரமாய் மின்ன விரும்பிய விட்டில் பூச்சியின் நிலை பரிதாபநிலைதான். அருமையாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

சீனு சொன்னது…

உண்மையா சொலனும்னா நீங்க சூப்பர்ஆ கவிதை எழுதுறீங்க... கவிதையின் முடிவு சூப்பர்

*anishj* சொன்னது…

தல... கவிதை செமயா இருக்கு... ஒரு எதார்தத்தை அழகான வார்த்தைகளால் அருமையான கவிதையாக்கியுள்ளீர்கள்... நீங்கள் எழுதிய கவிதைகளிலே என்னை மிகவும் கவர்ந்த மிகச்சிறந்த கவிதை இதுதான் என நினைக்கிறேன்... வாழ்த்துகள் தல... தொடர்ந்து கலக்குங்க...

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

உழவன் சொன்னது…

சமூகத்தில் அவர்களின் நிலையை வெளிபடுத்தும் சிறப்பான வரிகள் அண்ணா..

thendralsaravanan சொன்னது…

தம்பி....! இன்றைய நடிகைகளின்வாழ்வை அழகாய் பதிவு செய்து இருக்கிங்க!!!நேசக்கரங்கள்
நிலையாய்
பற்றியதில்லை,
பற்றுவதுமில்லை!...ரொம்ப பரிதாப நிலை!
தரங்கெட்ட,
தனி மரமானேன்.....இதற்கு மேல் அவர்கள் வாழ்வை பிரதிபலிக்க வார்த்தைகளுண்டோ!!!!

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
தசை காட்டினேன்
திசை மாறியது!


ஒரு விலைமகள் பற்றிய வரிகள்

ஒரு பழைய படத்தில்
ஊருக்கே முந்தி விரித்த ஒரு விலைமகள் இறந்து விடுவாள்
ஆனால் அவளை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல யாரும் முன் வரவில்லை

அவள் உயிரோடு இருந்த நாட்களில்
இரவில் அவள் வாசல் தட்டாதவர்கள் எண்ணிக்கை அந்த ஊரில் குறைவு

இது இன்னது ஏற்ற முத்திரை குத்தப்பட்ட கழிவுகளின் நிலை இதுதான்

ஆனால் நண்பா எத்தனையோ கழிவுகள்
பவுடர் பூசி மான்யமாய் திருக்கிறது

நல்ல கவிதை //

வலிகளும் , ரணங்களும் தான் இந்த மக்களின் வாழ்க்கை பதிவு செய்ய முயன்று பலமுறை இயலாமல் போய்வ்ட்டது ..
சிலர் விரும்பி நுழைந்து எப்படியும் வாழலாம் என்று இருப்பர்வர்களை நான் சொல்ல வில்லை..

விரும்பி நுழைந்து இதன் அகோர முகம் தெரிகிற பட்சத்தில் வலியுடன் நகர்த்தும் வாழ்கை தனை பதிவு செய்துள்ளேன் நண்பா .. நன்றி நண்பா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வேதனை வரிகள்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
ஒரு கணம் பயந்துதான் போனேன். பதிவர் தம்பி தனிமரத்தைத் தாக்கி எழுதி விட்டீர்களோ என்று. வேதனை தாங்கிய கவிதை வரிகள் அருமை.//

ஹா ஹா ..பதிவர் தனி மரம் பாவம் அவருக்கு இதுல என்ன சம்பந்தம் ..
வாழ்த்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
ஒரு கணம் பயந்துதான் போனேன். பதிவர் தம்பி தனிமரத்தைத் தாக்கி எழுதி விட்டீர்களோ என்று. வேதனை தாங்கிய கவிதை வரிகள் அருமை.//

ஹா ஹா ..பதிவர் தனி மரம் பாவம் அவருக்கு இதுல என்ன சம்பந்தம் ..
வாழ்த்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
வேதனையை சுமக்கும் வரிகள் நல்ல கவிதை இது அரசன் வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
//மின்னொளியில்
ஜொலித்தாலும்,
கடந்த பாதைகள்
அனைத்தும்
கருமைதான்//

உண்மை தான் அவர்கள் வாழ்க்கை அப்படி...//

ரணமிக்கது தான் அன்பரே

arasan சொன்னது…

s suresh கூறியது...
சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
அவர்களின் நிலை சமூகத்தில் மிக,மிக கொடுமையாய்//

பாவம் சார் கொடுமையிலும் கொடுமை

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
துயர நஞ்சைத்தடவி நெஞ்சில் பாயந்த வேல்! ஒவ்வொரு வரியும் அருமை!//

அன்பின் கருத்துக்கு என் உளம் நிறைந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள் அய்யா

arasan சொன்னது…


வலி தரும் வழிகள்...
தொடருங்கள் அரியலூர் தங்கமே...//

நன்றிங்க இரவின் புன்னகை

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
Vali tharum varikal//

மிகுந்த நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
நட்சத்திரமாய் மின்ன விரும்பிய விட்டில் பூச்சியின் நிலை பரிதாபநிலைதான். அருமையாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.//

அக்கா அன்பின் கருத்துக்கு என் உளம் நிறை நன்றிகள்

arasan சொன்னது…

சீனு கூறியது...
உண்மையா சொலனும்னா நீங்க சூப்பர்ஆ கவிதை எழுதுறீங்க... கவிதையின் முடிவு சூப்பர்//

அப்போ இதுவரைக்கும் பொய்யா தான் சொன்னிங்களா சீனு....
அன்பு வாழ்த்துக்கு என் நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

*anishj* கூறியது...
தல... கவிதை செமயா இருக்கு... ஒரு எதார்தத்தை அழகான வார்த்தைகளால் அருமையான கவிதையாக்கியுள்ளீர்கள்... நீங்கள் எழுதிய கவிதைகளிலே என்னை மிகவும் கவர்ந்த மிகச்சிறந்த கவிதை இதுதான் என நினைக்கிறேன்... வாழ்த்துகள் தல... தொடர்ந்து கலக்குங்க...
//

அன்பின் கருத்துக்கும் , ரசித்து படித்தமைக்கும் என் நன்றிகள் தல ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
சமூகத்தில் அவர்களின் நிலையை வெளிபடுத்தும் சிறப்பான வரிகள் அண்ணா.//

நன்றி தம்பி

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
தம்பி....! இன்றைய நடிகைகளின்வாழ்வை அழகாய் பதிவு செய்து இருக்கிங்க!!!நேசக்கரங்கள்
நிலையாய்
பற்றியதில்லை,
பற்றுவதுமில்லை!...ரொம்ப பரிதாப நிலை!
தரங்கெட்ட,
தனி மரமானேன்.....இதற்கு மேல் அவர்கள் வாழ்வை பிரதிபலிக்க வார்த்தைகளுண்டோ!!!!//

அக்கா வணக்கம் ...

பாவம் சுமக்கும் , சுமத்திய பாவத்தை சுமக்கும் மென் இதயங்களின்
வலிகளை பதிவு செய்யவே இந்த பதிவு ..
நிதானமாய் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகளும், வணக்கங்களும்